“நீ அழுத அழுகையில என் நெஞ்சு முழுக்க ஈரம்… அதை இன்னமும் என்னால மறக்க முடியலை… இதுல இப்பவும் நீ அழுதா நான் என்னாவேன்னு யோசிச்சு பாரு சதி… துக்கமோ துயரமோ, கவலையோ கண்ணீரோ, எதுவான்னாலும், என்னைத் தாண்டி தான் உன்னை சேரணும்… அதையும் மீறி நீ அழுறதா இருந்தா உன் கண்ணீர் படுற இடம் இதுவா தான் இருக்கணும்…”
அவன் தன் நெஞ்சை சுட்டிக்காட்டி கூற, உதடு துடித்து அழுகை பிதுங்கி நின்றது அவளுக்கு….
“அழாத சதி….” என அவன் தன் தலையினை ஆட்ட, அவளோ வேகமாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள் நொடிப்பொழுதும் தயங்காமல்…
ஒரு கரம் அவனது இடப்பக்க தோள் மீதும், மறு கரம் அவனது வலது பக்க மார்பிலும் இருக்க, அவளது முகமோ அவனது இடப்பக்க மார்பின் மீது இருந்தது…
தன் கரங்களை தன் வசமே வைத்துக்கொண்டவன், தன் நெஞ்சத்தை மட்டும் அவளுக்கு கொடுத்திருந்தான் அவள் சாய்வதற்கென…
தன் மீது அவள் சாய்ந்து கொண்டதும், சிலையாக நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
தன் கண்ணீரை வேகமாக துடைத்துக்கொண்டு, “இனி அழமாட்டேன்… அப்படியே அழணும்னு தோணினாலும்…..” என நிறுத்தி அவனைப் பார்த்திட, அவன் முகத்திலும் புன்னகை…
சுற்றியிருந்தவர்களின் முகத்திலும் நாணத்துடன் கூடிய புன்னகை எட்டிப்பார்க்க, தட்சேஷ்வரின் முகத்தில் மட்டும் எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
இது மருவக் காதல் கொண்டேன் 50-ஆவது அத்தியாயம்…
கதை எழுத ஆரம்பிச்சப்போ இத்தனை அத்தியாயங்கள் வருமென்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை…
முன் ஜென்ம கதையை சொல்ல ஆரம்பித்தபொழுதுதான் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டி இருந்தது… அதனால் அத்தியாயமும் தொடர்ந்து கொண்டே போனது… மேற்கொண்டு அதை அப்படியே தொடரவும் இயலாது, முடிக்கவும் இயலாத குழப்பமான மனநிலையில் தான் இரண்டு மூன்று வாரங்களும் சென்றது…
இறுதியில் அந்த குழப்பத்திலிருந்து மீண்டு வந்து, நடப்பு நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன்..…
என்னுடைய எந்த தொடரும் இத்தனை அத்தியாயங்கள் நீண்டது இல்லை…
தொடரின் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை தாங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவும், கருத்துக்களும் எனக்கு நிறையவே உற்சாகமும் ஊக்கமும் அளித்தது…
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…
சில்சீக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…
மீண்டும் அடுத்த வார மருவக் காதல் கொண்டேனில் சந்திக்கலாம்…
தொடரும்...!
{kunena_discuss:1001}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.