(Reading time: 9 - 17 minutes)

51. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

வள் அவன் மார்பை மெத்தையாக்கி துயில் கொள்ள விழைய, அவனோ அவள் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது சிலையென நிற்க,

சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள்ளேயே புன்னகைத்து பேசிக்கொள்ள, தட்சேஷ்வரின் கோபம் தனது எல்லையைக் கடந்து வெடிக்க தயாரான நேரத்தில், இஷானின் கைப்பேசி ஒலி சதியை ஜெய்யிடமிருந்து விலக்கியது பட்டென…

நாணத்துடன் அவனை விட்டு விலகியவள், அனைவரையும் ஏறெடுத்துப் பார்க்க தயங்கிய வண்ணம், விரல்களை பிணைத்து இறுக்கி, நிலத்தில் தன் பார்வையை பதித்திருக்க, ஜெய்யோ அவள் வெட்கத்தினையே ரசித்திருந்தான் இமைக்காது…

பேசி முடித்த இஷான், வேகமாக ஜெய்யின் அருகே வந்து, “மச்சான்… அந்த பைரவ் கேஸ் ப்ரெஸ்க்கு தெரிஞ்சு கொஞ்சம் ப்ராப்ளம் ஆகிட்டு… இப்போ தான் இன்ஸ்பெக்டர் போன் பண்ணினார்….” என கூற,

“இது நான் எதிர்பார்த்தது தான்….” என்றான் ஜெய்…

அவனின் இலகுவான பதில் இஷானை குழப்பத்தில் ஆழ்த்த,

“மீடியால எப்படி ஒரு விஷயத்தை பெரிசு பண்ணுவாங்கன்னுதான் தெரியுமே இஷான்… விடு… பார்த்துக்கலாம்…” என்றார் சோமநாதன் அவனிடம்…

அவனும் சரிதான் என்பது போல் அவரைப் பார்த்திட, சோமநாதனுக்கு ஒரு அழைப்பு வந்த்து அந்நேரம்…

“யெஸ் சார்…” என கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தவரின் முகத்தில் சற்று நேரத்திலேயே யோசனை ரேகைகள் தென்பட, அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான் இஷான்…

“என்ன ஆச்சு அங்கிள்… யாரு போன்ல?...”

“மினிஸ்டர் தான் பேசுறாரு… பைரவ் கேஸ் விஷயமா இப்பவே ஒரு மீட்டிங்க்கு அரேஞ்ச் பண்ணியிருக்குறாங்களாம்… டிஸ்ட்ரிக் கலெக்டர், மினிஸ்டர், இன்னும் சில முக்கிய புள்ளிகள் மீட்டிங்கில் கலந்துக்கப் போறாங்களாம்… சோ இன்னும் ஹாஃப் அன் அவர்ல நாம அங்க இருக்கணும்…”

சோமநாதன் யோசனையோடு கூற, “டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா இஷான்… நாம போகலாம்…” என்றான் ஜெய் உடனேயே…

“சரிடா… இப்பவே வந்துடுறேன்…” என்ற இஷான், சில நிமிடத்தில் தயாராகி வர, அவனுடன் ஜெய் மற்றும் சோமநாதன் இருவரும் கிளம்பினர்….

செல்லும் போது சதியைப் பார்த்து சென்று வருகிறேன் என கூறிய ஜெய், தட்சேஷ்வரைப் பார்த்துக்கொண்டே செல்ல, அவரோ பதிலுக்கு முறைத்துக்கொண்டு நின்றார்…

“ஜெயிலை விட்டு தப்பிச்சுப் போன கைதிங்க ரெண்டு பேரும் ஒரு காட்டுக்குள்ள பிணமா கிடக்குறாங்க… இங்க என்ன நடக்குது மிஸ்டர் சோமநாதன்?...”

கலெக்டர் ஆதங்கத்துடன் கேட்க,

“அவங்க தப்பிச்சு போனதுக்கு காரணம்….” என அவர் சொல்ல முயன்ற வேளையே,

“நீங்களா அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்து, ஜெயிலுக்குள்ள போட்டு, தப்பிக்கவும் விட்டு, கடைசியில ப்ளான் பண்ண மாதிரி இந்த ஜெய்யை வச்சு அவனை கொன்னுட்டீங்க… அதை சொல்ல எதுக்கு தயங்குறீங்க கமிஷனர் சார்?...”

மினிஸ்டர் நக்கலாக அவரிடம் கேட்க,

“அப்படி அவனை கொல்லணும்னு நினைச்சிருந்தா அவனை பிடிச்சப்பவே கொன்னுருப்போம்… வீணா அரெஸ்ட் பண்ணி, ஜட்ஜ் கிட்ட தீர்ப்பு வாங்கி, ஜெயில்ல போட்டு, அப்புறம் தப்பிக்க விட்டு இப்ப கொன்னுட்டோம்ன்னு சொல்லுறதுல எந்த லாஜிக்குமே இல்ல சார்…”

இஷான் பட்டென கூற,

“ஓ… வாங்க இஷான் சார்… என்னடா இன்னும் ஃப்ரெண்டுக்கு சப்போர்ட்டா ஒன்னுமே பேசலையேன்னு பார்த்தேன்…” மினிஸ்டர் அவனை உறுத்துப் பார்க்க, அவனோ அவரைப் பார்ப்பதை தவிர்த்தான்…

“நீங்க தான் திட்டம் போட்டு பைரவையும், குமாரையும் கொன்னுட்டீங்கன்னு சார் மிஸ்டர் ஜெய்… இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்க?...”

கலெக்டர் கோபமாக ஜெய்யிடம் கேட்க,

“ஆமா சார்… நான் தான் பைரவை கொன்னேன்… அவன் என் உயிரைப் பறிக்க பார்த்தான்… அதனால நான் அவனைக் கொன்னேன்… ஒரு போலீஸ் ஆஃபீசர் தன்னோட உயிருக்கு ஆபத்து வரும்போது தற்காப்புக்காக எதிராளியை கொல்லுறது சட்டத்துக்கு புறம்பானதுன்னு சொல்ல முடியுமா உங்களால?...… “

ஜெய் நிமிர்வுடன் கேட்க, பட்டென ஜெய்யின் மேல் நிலைத்த பார்வையை வைத்தார் கலெக்டர்…

“சொல்லுங்க சார்… ஏன் பதில் பேச மாட்டிக்குறீங்க?...”

“இதை காரணமா சொல்லி சட்டத்தை ஏமாத்தப் பார்க்குறீங்கன்னு நான் சொன்னா என்ன பண்ணுவீங்க ஜெய்?...”

மினிஸ்டர் தெனாவட்டாக கேள்வி கேட்க,

“நாளைக்கே….. இல்ல வேண்டாம், இப்போ இந்த செகண்டே, இந்த கலெக்டர் உங்களை கொல்ல துப்பாக்கியை எடுக்குறார்னு வைங்க, நீங்களும் என்னை சுட்டுக்கோன்னு நெஞ்சை நிமிர்த்தி காட்டுவீங்களா?...”

கலெக்டர், அதிர்ச்சியுடன் ஜெய்யினைப் பார்க்க,

“உங்க பாதுகாப்புக்காக, உங்களை காப்பாத்துறதுக்கு, நாங்க அவரைக் கொன்னா, அது கொலையா?... இல்லை தற்காப்பா?... சொல்லுங்க சார்?..…”

ஜெய் கேட்ட கேள்வியில் கலெக்டர் வாயடைத்துப் போக, மினிஸ்டரின் முகமோ இருண்டு போனது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.