(Reading time: 9 - 17 minutes)

“என்ன கலெக்டர்… அவன் பாட்டுக்கு பேசிட்டே இருக்குறான்… நீங்க எதுவும் சொல்லாம இருக்குறீங்க?...”

மினிஸ்டரின் கேள்வி கலெக்டரை எட்ட,

“ஒரு மினிஸ்டர் நீங்க… உங்களையே நாளைக்கு எதாவது அந்நிய சக்திகள் கொல்ல முடிவெடுத்து, உங்களுக்கு குறி வைக்கும்போது, அவனும் ஒரு உயிர் தானேன்னு அவனைக் கொல்லாம இருக்கணுமா?... இல்லை அவனை சுட்டு தள்ளிட்டு உங்க உயிரை காப்பாத்தணுமா சார்?... சொல்லுங்க….”

கலெக்டர் மினிஸ்டரையும், ஜெய்யின் காக்கி உடையில் இருந்த துப்பாக்கியையும் பார்த்துக்கொண்டே கூற,

மினிஸ்டருக்கு ஆத்திரம் பொங்கியது…

“அவர் தன்னோட உயிரைக் காப்பாத்திக்க அவனைக் கொன்னதை எப்படி சட்டத்துக்கு புறம்பானதுன்னு சொல்ல முடியும்?... அதுவுமில்லாம ஜெய் கொன்னது ஒன்னும் தேசத்துக்காக பாடுபட்ட தியாகி இல்லையே… ஒரு ரவுடி… பொறுக்கி… இன்ஃபாக்ட் அந்த ரவுடியால இவர் உயிருக்கே ஒரு தடவை பேராபத்து வந்துருக்கு… ஹாஸ்பிட்டல்ல ஜெய் அட்மிட் ஆனதும் டிபார்ட்மென்டுக்கு நல்லாவே தெரியும்… அதுக்குப் பிறகு ஒரு போலீஸ் ஆஃபீசரா, சின்சியரா மிஸ்டர் ஜெய்யும், இஷானும், அந்த பைரவை பிடிச்சு தண்டனை வாங்கி கொடுத்தாங்க… அதுக்கு தான் நம்ம டிபார்ட்மெண்டும் அவங்களுக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவங்களை பாராட்டுச்சு… அதுக்குப் பிறகு அந்த திவாகர் கேஸ்… எவ்வளவு சென்சிட்டிவான கேஸ், அதுல சம்மந்தப்பட்ட பொண்ணுங்க பேர் கூட வெளிவராம அவங்க குடும்ப மானத்தையும் மரியாதையையும் காப்பாத்தினது கூட இவங்க இரண்டு பேரும் தான்… அப்போ எல்லாம் பாராட்ட வராத நீங்க, ஒரு ரவுடியைக் கொன்னுட்டான்னு சொல்லி, இப்படி அர்த்த ராத்திரியில ஒரு மீட்டிங்க் அரேஞ்ச் பண்ணி குற்றவாளி மாதிரி அவரை நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டிருக்கீங்களே சார்…”

சோமநாதன் ஆதங்கமும், ஆத்திரமுமாய் கேட்க, மினிஸ்டர் பல்லைக் கடித்தார்…

“என்ன கமிஷனர் நாக்கு நீளுது… நான் யாருன்னு தெரியும்ல?...”

“ஏன் தெரியாது நல்லாவே தெரியும்….”

“தெரிஞ்சுமா என்னோட மோதுற?...”

மினிஸ்டர் சினத்துடன் சோமநாதனிடம் கேட்க,

“ஒரு ரவுடிக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு இந்த வந்து இப்படி வெட்டி நியாயம் பேசிட்டிருக்குறீங்களே… உங்களுக்குத் தெரியலையா நீங்க யார் எதிரில நிக்குறீங்கன்னு?....”

இஷான் இயல்பாக கேட்க, “டேய்…………..” என எழுந்தார் தன் இருக்கையிலிருந்து…

“யோவ்… கலெக்டர்… என்ன நீயும், இவங்களுக்கு சப்போர்ட்டா?... உன்னை எப்படி பார்க்கணுமோ அப்படி பார்த்துக்குறேன்யா நான்….”

“என்னவேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்… சட்டப்படி அதை எதிர்கொள்ள நான் தயாரா இருக்குறேன்…”

கலெக்டர் நிமிர்வுடன் கூற, மினிஸ்டர் ஜெய்யின் புறம் திரும்பினார்…

“திட்டம் போட்டு என் ஆள் பைரவை கொன்னுட்டு, இப்போ எல்லாத்தையும் அப்படியே தற்காப்புன்னு மூடி மறைக்கப் பார்க்குறீயா?... உன்னை நான் சும்மாவிடமாட்டேண்டா… விடமாட்டேன்…”

விரல் நீட்டி அவர் ஜெய்யினைப் பார்த்துக்கூற,

“திட்டம் போட்டு பைரவையும், குமாரையும், ஜெயில்ல இருந்து தப்பிக்க வச்ச’து யாருன்னும் எனக்கு நல்லாவே தெரியும்… அதை நான் ஆதாரத்தோட புரூஃப் பண்ணி காட்டட்டுமா?..”

ஜெய் பதிலுக்கு அமைதியாக கேட்க, மினிஸ்டரின் முகத்தில் ஈயாடவில்லை…

“இதுக்கே ஷாக் ஆனா எப்படி?... இன்னும் நிறைய இருக்கு… பைரவும் திவாகரும், யாருக்கு இரண்டு கை மாதிரி இருந்தாங்கன்னும் எனக்கு தெரியும்… அவங்க இந்த அளவு அராஜகம் பண்ண யாரு காரணம்னும் எனக்கு தெரியும்… சொல்லட்டுமா?...”

ஜெய் சிறு புன்னகையுடன் கூற, மினிஸ்டர் மிரண்டு போனார் ஒருகணம்…

“யோவ் கமிஷனர்… நான் ஒரு மினிஸ்டர், இவன் என் மேலயே பழியை தூக்கி போடுறான்… நீ என்னாடான்னா எதுவும் பேசாம கல்லு மாதிரி நின்னுட்டிருக்கிற?....”

“அவர் நீங்க தான் செஞ்சீங்கன்னு இப்போவரை எதுவுமே சொல்லலையே…. அதுக்குள்ள பழியை தூக்கி என் மேல போடுறான்னு சொல்லுறீங்க… அப்போ நீங்க தான் அத்தனைக்கும் காரணமா?...”

இஷான் சந்தேகத்துடன் கேட்க, மினிஸ்டர், இஷானை முறைத்துவிட்டு,

“நீ  இருக்குற தைரியத்துல தான அவனுங்க இப்படி ஆடுறானுங்க… உன்னை முதல்ல தூக்குறேன்யா….” என சோமநாதனைப் பார்த்து மிரட்டிவிட்டு, சட்டென வெளியேற முயல,

அப்போது சொடக்கு சத்தம் கேட்டு அவர் திரும்ப,

“தூக்குறதுக்கு நீங்க முதல்ல நாளைக்கு வெளியே இருப்பீங்களான்னு பாருங்க மினிஸ்டர் சார்…”

ஜெய் மிடுக்குடன் கூற,

“என்னடா உளருற?....” என்றார் அவர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.