(Reading time: 9 - 17 minutes)

நிலத்தோடு ஒன்றியிருந்த அவள் விழிகளைப் பிரித்தெடுக்க வைத்தான் அவன்…

“சதி…..!!!!!!!!!!!!!!!!!”….

சினத்துடன் வெளிவந்தது அவனது குரல்…

பட்டென நிமிர்ந்த அவள் விழிகளோடு தனது விழிகளை அவன் கலக்கவிட, சட்டென எங்கிருந்தோ வந்தது ஓர் இடி முழக்கம்…

அவன் அவளது கழுத்தில் மூன்று முடிச்சினைப் போட்டு பஞ்சபூதங்கள் சாட்சியாக தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்ட காட்சி இருவரது விழிகளிலும் தென்பட, ஓர் அதிர்வு உண்டானது இருவரிடத்திலும்…

“இப்போ என் கண்ணுக்கு தெரிஞ்ச காட்சியை என்னால விளக்க முடியலை… என் அடிமனசுல நீ என் மனைவின்னு பதிஞ்சு போச்சு… உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு வித ஈர்ப்பு வந்துச்சு… அது ஏன்னு எனக்கு தெரிய வந்தது, பைரவ் உன்னை அந்த பாழடைஞ்ச இடத்துக்கு கடத்திட்டு போனபிறகு தான்… நான் அந்த நேரத்துல துடிச்சு தவிச்சு போனது எனக்கு மட்டும் தான் தெரியும்… நீயும் நானும் ஏற்கனவே திருமண பந்தத்துல இணைஞ்சது உண்மைன்னா, இப்போ உன் அப்பா எதிர்ப்பையும் நான் எதிர்க்க தயாராகி தான் அவர்கிட்ட நான் பேசினேன் இன்னைக்கு…. உன் அப்பாவுக்கு நான் வேணும்னா பகைவனா இருக்கலாம்…. ஆனா நீ அவருக்கு உயிர்… உன் அப்பா மேல நீ எவ்வளவு பாசம் வைச்சிருக்குறன்னு எனக்கும் தெரியும்… அவர் எதிர்க்குற ஒரு விஷயத்தை நீ செய்ய மாட்டன்னும் எனக்கு நல்லா தெரியும்… அதனால தான் அவரை மீறி நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம்னு நான் அப்படி சொன்னேன்… உண்மையை சொல்லணும்னா ஊரறிய நம்ம பூர்வ ஜென்ம பந்தத்தை உறுதி பண்ண தான் இந்த கல்யாணமே தவிர, மத்தபடி என்னைப் பொறுத்த வரைக்கும் நீயும் நானும் ஜென்ம ஜென்மமா கணவன் மனைவி தான்…. நீ என்னவள் சதி… என் சரிபாதி…”

ஜெய்யின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது இதயத்திற்குள் இறங்கிட, அவளது முகம் மலர்ந்த வேளை, அவளது இமைக்குளங்களும் நிறைந்து தளும்பி நின்றது….

உதடுகள் அவனது பெயரை உச்சரித்திட துடித்திட,

“உன்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு நான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன வார்த்தைக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் சதி… நான் அப்படி சொன்னதுக்கும் இரண்டு காரணம் இருக்கு…. ஒன்னு நானா விலகி போற மாதிரி விலகலைன்னா, அந்த வார்த்தையை உன்னை சொல்ல வைக்க முயற்சி பண்ணியிருப்பார் உன் அப்பா… அவரோட எண்ணமும் அதுதான்… அந்த கஷ்டம் உனக்கு வேண்டாம் சதி… அந்த வார்த்தையை சொல்ல நீ எவ்வளவு கஷ்டப்படுவேன்னு எனக்கு தெரியும்… அதான் நானே முந்திகிட்டேன்… உன் அப்பா சம்மதம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… அது சத்தியம்… ஆனா அதே நேரத்துல என்னைத் தாண்டி இன்னொருத்தரை என் இடத்துக்கு வரவழைக்க அவர் நினைச்சா, அது எந்த காலத்திலயும் நடக்காது…. அதையும் உன் அப்பாக்கு நான் தெளிவுபடுத்திக்கிறேன்…”

சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்து வாசற்படி நோக்கி போனவன், சற்றே நின்று அவள் புறம் திரும்பினான்…

“ஒரு காரணம் சொல்லிட்டேன்… இன்னொரு காரணம்….” என நிறுத்தி அவளை அவன் பார்த்திட,

அவள் தன் கன்னம் விட்டு வழிந்த கண்ணீரை மறைத்தபடி நிலத்தினை வெறித்திட,

“எந்த வார்த்தையை நீ சொல்லிடக்கூடாதுன்னு நினைச்சு நான் பயந்து சொன்னேனோ அத நீ என் முன்னாடியே சொல்லிட்ட…”

அவன் வார்த்தைகள் குரல் கம்ம வெளிவர, சட்டென அவளும் நிமிர,

“வலிக்குது சதி….” என்றான் அவள் விழிகளைப் பார்த்து…

கேவல் சட்டென அவளிடமிருந்து உதிக்க,

“இன்னொரு தடவை அப்படி ஒரு வார்த்தை நீ சொல்லணும்னு நினைச்சா, உயிரில்லாத என் உடம்பு முன்னாடி தான் சொல்லுவ….”

அவன் வார்த்தைகள் அவள் செவியில் விழுந்த வேளையே,

“ஜெய்…………………” என அவள் அதிர்ந்து கத்த,

“ஆமா சதி சத்தியமா அந்த வார்த்தையை கேட்க நான் உயிரோடிருக்க மாட்டேன்… உன் நெருப்பு வார்த்தை என்னை சேருவதற்கு முன்னாடி என் உடலை நெருப்பு ஸ்வீகரிச்சிருக்கும்…”

அழுத்தமாகவும், தெளிவாகவும் கூறிவிட்டு, நிற்காமல் அவன் செல்ல,

“ஜெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்………………….”

அவளது கதறல் மட்டுமே அங்கு ஒலித்தது அக்கணம்…

சோமநாதனோ செய்வதறியாது, “அழாதம்மா… என்னைக்கு இருந்தாலும் என் வீட்டு மருமக நீ தான்….” என அழுதுகொண்டிருந்த சதியிடம் கூறிவிட்டு மகன் சென்ற திசையிலேயே வேகமாக செல்ல,

தைஜூவோ விரைந்து வந்து சதியின் தோள் பற்றினாள்… சதி அதனை சட்டை செய்யாமல் நின்றிருக்க, இஷான் விரைந்து அவள் பக்கம் சென்றான்…

“சதி… இங்க பாரு… அழாதடா…” என சமாதானப்படுத்த முயல, அவள் யார் பேச்சினையும் கேட்டாள் இல்லை…

பிரசுதியும் மகளின் அருகே வந்து அவளது தலையினை வருடிக்கொடுத்து சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க,

உள்ளுணர்வின் உந்துதலால் சட்டென நிமிர்ந்தாள் சதி….

எதிரே அவளது அருகே நின்றிருந்தான் ஜெய் சற்றே கோபமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.