(Reading time: 15 - 29 minutes)

எனக்கு அவளை பிடிக்கும் வினோத். ஆனால் உனக்கு தான் தெரியுமே என்னோட கனவு அமெரிக்கா  போகணும். எங்க அம்மா அப்பாவை விமானத்துல கூட்டிட்டு போகணும். அதுக்கான சந்தர்ப்பதுக்காக காத்திருக்கிறேன் அதனால் கல்யாணம் பற்றி சிந்திக்கவே இல்லை. இன்னும் ரெண்டு மாதத்தில் அதுக்கான வாய்ப்பு வர போகிறது என்று நம்முடைய அலுவலகத்தில் சொன்னார்கள் தானே. அன்று தான் வீட்டில் சொன்னேன். சரி சரி என்று மண்டையை ஆட்டினார்கள். ஆனால் போன அன்றே அவள் கழுத்தில் தாலியை கட்ட  வைத்து விட்டார்கள். காரணம் கேட்டதுக்கு அவளையும் கூட்டி  கொண்டு போ அவள் படிப்பு  முடிந்ததும் என்று சொல்கிறார்கள்.

அவள் படிப்பு  முடியவே இரண்டு வருடம் இருக்கிறது கார்த்திக்

அதனால் தான் ப்ளான் செய்து இப்படி செய்து விட்டார்கள். அவள் முடிக்கும் வரை நான் போக கூடாது அதனால் தான். அவர்களுக்கு நான் அமெரிக்கா  போவதில் எல்லாம் கவலை இல்லை இருந்திருந்தால் அதையே சொல்லி இருப்பார்கள். ஆனால் கீர்த்தியை அவசரமாக கல்யாணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை பெரியதாக எதுவோ ஒன்று இருக்கிறது.

ஆனால் கீர்த்தானா  இப்போது உன் மனைவி நீ மனதினால்  ஏற்று  கொண்டாய் தானே.

அதெல்லாம் பிரச்சனை  இல்லை. எனக்கு இந்த ஜென்மத்தில் மனைவிஎன்றால் அவள் தான் ஆனால் காதல் மட்டும் வரவே இல்லை டா . காதல் இல்லாமல் வாழ்க்கையை தொடர நான் தயாராக இல்லை.

என்ன டா  சொல்கிறாய்  அப்ப  அவளை பிரிந்துவிடுவாயா 

பிரிய போறேனா நானா . நான் ஏன்  பிரியனும். என் மேல உயிரையே  வைத்திருக்கிறாள். நம்மை  நேசிக்கிற ஒரு பொண்ணு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். அந்த காதலை அனுபவித்து கொண்டு அவளை காதலிக்க ஆரம்பிக்க போகிறேன்.

நல்ல முடிவு தான்.வீட்டுக்கு கால்  செய்தியா கார்த்திக் எல்லாரும் எப்படி இருக்காங்க.  கல்யாணத்தை பற்றி அவங்க என்ன  நினைக்கிறார்கள்.

செய்தேன் டா  இந்த சனி கிழமை வருவாங்க. தாழி  மாட்ற. கல்யாணத்தில் எல்லாருக்கும் நிறைய  சந்தோசம் டா . முதலில் எங்க தாத்தா முகமே சரியா இல்லை. எதையோ  மனதில்  வைத்து கொண்டு  கவலை  படுகிறார். அதனால தான் இந்த அவசர கல்யாணமே . கல்யாணம் முடிந்த பிறகு அவர் முகத்தில் இருந்த சந்தோசத்தை  பார்க்கணுமே அதுக்காகவே எது என்றாலும்  செய்யலாம்னு தோன்றியது .

அவறாவது பரவா  இல்லை. ஆனால் எங்க அம்மா அப்பா முகத்தில் உண்மையான சந்தோசத்தை  அன்று தான் டா  பார்த்தேன். ஆனால் இந்த லூசை தான் எப்படி சரி கட்ட  போகிறேனோ  தெரிய வில்லை  வினோத். சரியான சேட்டை காரி டா . எங்க இருந்து என்ன பிரச்சனையை கொண்டு வர போகிறாள் என்று தெரிய வில்லை பார்ப்போம். தினமும் எப்படி சமாளிக்க போறேனோ.

ஏன்  கார்த்தி சமாளிக்கணும். அவள் உன்னோட மனைவி மறந்துவிடாதே. நீ வேற காதலிக்க வேற துவங்க போகிறாய் அப்றம்  என்ன தினமும்  ரொமன்ஸ்  தான். என்ன ஒண்ணு கீழ்  வீட்டில் இருக்கும் என் நிலைமை  தான் பரிதாபம்.

ஏன்  டா  அதை பார்த்தால்  உனக்கு பெரிய ஆள் மாதிரி தெரியுதா. அது ஒரு பேபீ  டா . முதலில் அவள் படிப்பு  முடியட்டும். அதுக்கு பிறகு பார்ப்போம் 

ஹ்ம் நீ சொல்றதும் சரி தான் தனியா  இருப்பாள் வீட்டுக்கு போகலாமா

கிளம்பலாம் டா . ஆனால் வினோத் நீ  இனிமேலும்  இப்படி தான் இருக்க போகிறாயா. மாறவே மாட்டியா. 

எனக்கு பொண்ணுங்க என்றாலே  கொஞ்சம் பயமாக இருக்கிறது கார்த்திக். இன்னொரு ஏமாற்றத்தை  தாங்கும் சக்தி எனக்கு இல்லை. கொஞ்ச நாள் டைம்  கொடு  கார்த்திக் என்னை மாற்றி  கொள்ள. வா போகலாம்

வீட்டுக்கு வந்த உடன் கார்த்திக் வினோததிடம் சரி டா  நீ தூங்கு காலையில் பார்ப்போம் என்றான். 

மணி 9 தான டா  ஆகுது தூங்க கொஞ்சம் நேரம் ஆகும் நீ போ குட் நைட் என்று சொல்லி கார்த்திகை அனுப்பி வைத்து விட்டு தன்னுடைய  மொபைலை  எடுத்து அபர்ணாவை  அழைத்தான்.

எடுத்து இவன் ஹெலோ சொல்லியும் அங்கு இருந்து சத்தமே வரலை. என்ன டா   ஆயிற்று ஒரு வேலை வீட்டில பேச மாட்டாள் போல  அப்றம்  எதுக்கு நம்பர் தந்தாள் இதுவும் சரியான லூசு தான் போல என்று நினைத்தான்.

நான் ஒண்ணும் லூசு இல்லை நீ தான் டா  லூசு என்று அந்த பக்கம் பதில் வந்த பிறகு தான் வாய் விட்டு சொல்லி விட்டோம் என்று புரிந்தது 

ஏய்  என்ன திமிரா  ஐயோ  பாவம் ஹெல்ப் கேட்டாய்  அதனால் தான் உன்னை அழைத்தேன் நீ லூசு என்று  சொல்கிறாய்.

நீ மட்டும் என்னை லூசு என்று திட்டலாமா. அது மட்டும் இல்லாமல் 10 மணிக்கு மேல் அழைக்க சொன்னால்  9 மணிக்கே உன்னை யாரு பண்ண சொன்னா 

உனக்கு ஃபோன்  செய்தேன் பாரு எனக்கு தேவை தான்.

ஆனால் சத்தம் ரொம்ப மெதுவாக ரகசியம் பேசுவது போல ஒலித்தது. அவளுடைய ரகசிய பேச்சு இவனுக்கு என்னவோ போல் மனத்தை பிசைந்தது. நிஜமாகவே இவன் அருகில் வந்து அவள் உதடு காதில் உரசுவது போல நின்று ரகசியம் பேசுவது போல் இருந்தது.அதை மேலும் எண்ணாமல் ஹெலோ  என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.