(Reading time: 21 - 41 minutes)

06. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

மாலை நேரத்து மஞ்சள் வெயில் மங்கி, லேசான இருள் படர்ந்துக் கொண்டிருந்தது. காவ்யா, அவள் வீட்டின் மேல்தளத்தில் இருந்தாள், பூரண அலங்காரத்தில் இருந்தவளின் கண்களை மெதுவாக திறக்குமாறு கூறினாள், அவளுக்கு ஒப்பனை செய்த அழகுகலை நிபுனரான சீனப்பெண் ஒருத்தி. ஆள் உயர நிலைக் கண்ணாடியில் தன்னைப்பார்த்தவளுக்கு, அந்த அழகும் ஒப்பனையும் மகிழ்ச்சியைத் தாராது மாறாக  மிதமான பயத்தை தந்தது. இது அவளுக்கு புதிதல்ல சம்பந்தத்தின் பூரண செல்வத்தை அவள் தனக்காக செலவழிக்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஒர் கலக்கம் அவளுக்கு வரும். ஏனோ அந்த கரைபுரண்ட செல்வத்தை அனுபவிக்கும் எண்ணம் அவளுக்கு வராது போனது. தன்னையே உருத்து நிலைக்கண்ணாடியில் பார்த்திருந்தவளை, “மேம், இன்னும் ஏதாவது சரி பண்ணனுமா?” என்றாள் சீனப்பெண்.

இல்லை என்பதுபோல் தலையசைத்தவள். ஏதும் பேசாது கண்களை விலக்காது.. கையை மட்டும் செய்கை செய்து அவளை போகச்சொன்னாள். காவ்யாவிடம் விடைப்பெற்று அவள் சென்றதும்…தன் விழிகளை மூடிக்கொண்டாள். இப்போது இந்த அலங்காரம் எதற்கு? அதீத அழகு என்றும் பிரச்சனைக்குரியது. அவளுக்கு அதில் ஏதும் மகிழ்ச்சியைத் தரவில்லை. அவளுடைய அந்த விழி மூடிய தவத்தைக் கலைக்கும் பொருட்டு அவள் தோள்கள் இரண்டிலும் தன் கைகளைப்பதித்தாள் தர்ஷினி. காவ்யா கண்களைத் திறந்தாள். தன் பூரண அலங்க்காரத்திற்கு பின்னே ஒப்பனையற்ற தீர்க்கமான அழகுடன், இதழில் விரிந்த புன்னகையுடன் நின்ற தர்ஷினியைப்பார்த்ததும் அவளுக்கு நிம்மதி வந்தது. தர்ஷினி அடுத்த நொடி காவ்யாவின் முன்னே பாய்ந்து திறந்திருந்த காஜலை ஒரு சிறிய குச்சியில் தொட்டு காவ்யாவின் கண்ணத்தில் ஒரு சிறிய பொட்டிட்டாள். “வாவ், இந்த பொட்டோட சேர்த்து, உன்ன பார்த்தா கல்யாணப் பெண் மாதிரி இருக்க காவ்யா! இப்படி உன்ன யார் பார்த்தாலும் அப்படியே கொத்திட்டு போயிடுவாங்க..”  - தர்ஷினி

இதெல்லாம் எதுக்கு என்பதுபோல் நிமிர்ந்து அமைதியாக தர்ஷினியைப் பார்த்தாள் காவ்யா!. அவளது முக வாட்டத்தைக்கண்டு ஒரு நொடி தர்ஷினி திகைத்தாள். “ஏய், என்னாச்சுடி.. ஃபீல் பன்றியா என்ன..?” – தர்ஷினி

“என்ன நடக்குதுடி இங்க, இன்னிக்கு டாடி மம்மி மரேஜ் அனிவர்சரி அவ்வளவு தானா இல்ல.. வேரெதுவும் ப்ளான் பன்றாங்களா உன்னோட ஆன்ட்டியும் அங்கிளும்?” – காவ்யா

“ஐயோடா, எனக்கேதும் தெரியாது.. ஆன்ட்டி சீக்கிரமா வந்து காவ்யாக்கூட இருனு சொன்னாங்க அவ்வளவுதான்!” – காவ்யாவைக் கண்டு அஞ்சியதுபோல் நடித்தாள் தர்ஷினி. காவ்யாவிற்கு புன்னகை அரும்பியது.

“ம்ம்.. பாக்கலாம் எல்லாரும் சேர்ந்து ஏதோ ப்ளான் பன்றீங்கபோல..!” – காவ்யா

“எல்லாம் நல்ல ப்ளான் தான்.. காவ்யா” – என்ற மீராவின் குரலைக்கேட்டு இருவரும் திரும்பினர். “ரெடி ஆயிட்டு தர்ஷினிகூட சீக்கிரம் கிளம்பிவா!”

தன் கையில் இருந்த அழகிய வண்ணக்கல் நெக்லேசை காவ்யாவின் கழுத்தில் போட்டுவிட்டு ஒரு நொடி அவளை இரசித்தாள். பின் புன்னகையுடன்,” சமத்து காவ்யால்ல இன்னிக்கு எந்தப் பிரச்சனையும் பன்னாம அமைதியா இருப்பீயாம், ஃபங்க்ஷன் முடிஞ்சவுடனேயே நீயும் தார்ஷினியும் வெளில போயிட்டுவாங்க, சரி இப்ப சீக்கிரம் ரெடி ஆகு!” – மீரா

மீரா திரும்பும்போது அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள் காவ்யா. “மம்மீ, உண்மையில இங்க என்ன நடக்குது.. நான் உங்க மேரேஜ் அனிவர்சரிய செலிபிரேட் பன்னலாம்ன்னு நினேச்சேன், ஆனா நீங்களும் டேடியும் என்ன பன்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியல.. ப்ளீஸ் என்ன சைல்டிஷ்ஷா ட்ரீட் பன்னாமா என்ன விசயம்னு சொல்லுங்க!”

மீரா காவ்யாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு.. “காவீ, நம்ம விஸ்வநாத் அங்கிள் இருக்கிறார்ல அவரும் அவங்க தங்கை அருந்ததியும் உன்ன பார்க்க வர்றாங்க…”

“அப்டீனா?”

“இங்க பாரு காவ்யா,  விஸ்வம் அங்கிள் பத்தி உனக்கு நல்லா தெரியும், அப்பாவோட நண்பர், மேலும் அப்பாக்கு பிஸ்னஸ்ல எவ்ளவோ ஹெல்ப் ப்ன்னினவரு, அவங்களோட விஸ்வம் இண்டஸ்ட்ரீஸ் பத்தி உனக்கு நான் சொல்லனும்னு இல்ல…அவங்க பெரிய க்ரூப், ஆட்டோமொபையல் இண்டஸ்ட்ரீஸ்ல அவங்களை மிஞ்சியது யாருமில்ல.. அவரோட ஒரே பையனுக்கு உன்ன கேட்டு வர்றாங்க.. நம்ம எதிர்பார்த்ததை விட நல்ல தரம்.. சும்மா வர்றோம்.. உங்க வீட்டு ஃபங்க்ஷனுக்கு வந்த மாதிரியும் ஆச்சு அதே நேரம் உங்க வீட்டு தேவதைய பார்த்த மாதிரியும் ஆச்சுன்னு சொன்னாங்க.. கரும்பு தின்ன கூலியா என்ன அதான் டிலே பன்னாமா டாடி இன்னிக்கே வர சொல்லிட்டாங்க..” – மீரா

“ஓ, அப்டினா இதுவும் உங்களுக்கு ஒரு நல்ல பிஸ்னஸ் டீல். காவ்யாவ என்ன விலைக்கு விக்கப்போறீங்க மம்மி? ” – காவ்யா

மீராவிற்கு கோபம் வந்தது.. “காவ்யா குட்டி நீ இப்படி பேசக்கூடாது..டாடி இத கேட்டா வருத்தப்படுவாரு.. முன்னாடியே உன்ன பெண் பார்க்க வர்றாங்கன்னு சொன்னா எடக்குமுடக்கா நீ ஏதும் பன்னிடக்கூடதுனுதான் நான் உங்கிட்ட ஏதும் சொல்லல..  நல்ல இடம் காவ்யா நீ இத புரிஞ்சுகோ!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.