(Reading time: 21 - 41 minutes)

“மம்மீ ப்ளீஸ்… எனக்கு இப்ப கல்யாணம் எதுவும் வேண்டாம்…இத நீங்களே டாடிக்கிட்ட சொல்லீருங்க..!” – காவ்யா வருத்தத்துடனும் கோபத்துடனும் இதை சொன்னாள். அதற்குள் சம்பந்தம் மீராவை அழைக்க.. “காவீ சீக்கிரம் ரெடி ஆகு…மாப்பிள்ளை வீட்டில வந்துட்டாங்கப்போல..” என்று விரைந்து மீரா இறங்கிப்போக.. அதிர்ச்சியுடன் நின்ற காவ்யாவின் கைகளை மெதுவாக பற்றிக்கொண்டாள் தர்ஷினி.

“காவீ.. நாம நினைக்கிற மாதிரி எப்போதும் நடக்கிறதில்ல. வாழ்கை நமக்கு நாம எதிர் பாராத தருணத்தில் தான் வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும். இது கூட அப்டி ஒரு தருணம்னு  எனக்கு தோணுது..கொஞ்சம் பொறுமையா இரு.

காவ்யா தர்ஷினியைப்பார்த்தாள்.  நாம் வேர என்ன செய்ய முடியும் தர்ஷூ, இந்த வீட்டில என்னோட விருப்பம்னு ஒன்னு கிடையவே கிடையாது.. எல்லாம் டாடியோட இஷ்டபடிதான் நடக்கும், நடக்கனும். சின்ன வயசிலேருந்து இது வரைக்கும் அவங்க எனக்கு நல்லதுனு தினிச்ச எதுவும் எனக்கு பிடிச்சதில்ல..நான் படிக்க நினைச்சது வேரு, ஆனா டாடி என்ன ஃபோர்ஸ் ப்ன்னி இஞ்சினியரிங்க் படிக்க வச்சாரு , வேலையாவது என் விருப்பப்படி அமைச்சுக்கலாம்னா அதுவும் அவர் விருப்பப்படி தான் நடந்தது.. இப்படி படிப்பு, விளையாட்டு, உடுத்துற டிரஸ், சாப்பிடுறா சாப்பாடு வரைக்கும் அவங்க நினைக்கிற படிதான் இதுவரைக்கும் நடந்தது,  என்னோட விருப்பம்னு ஒன்னு இந்த வீட்டிலக் கிடையவேக் கிடையாது.. ஆனா இதெல்லாம் நான் சகிச்சாச்சு இப்ப அவங்க முடிவு பன்ன நினைக்கிறது என்னோட வாழ்கையை.. அட்லீஸ்ட் இப்ப கூட நான் இத யோசிக்கலைனா இன்னோரு வீட்ல போய் நான் அடிமையா இருக்கனும் தர்ஷூ..”  இதை சொல்லும்போது காவ்யாவின் குரல் உடைந்தது..

“நிச்சயாமா இல்ல..அப்டி ஒரு நாளும் நடக்காது..” – என்ற இனிமையான குரல் காதில் விழ தோழியர் இருவரும் திரும்பினர். அங்கே அவர்களது பள்ளித்தோழி கீர்த்தனா நின்றிருந்தாள்.  அவளைப் பார்த்தது தோழியர் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி. கீர்த்தனா ஓடி வந்து காவ்யாவையும் தர்ஷினியையும் கட்டிக்கொண்டாள்.

 “ஹாய் டி வாட் எ சர்ப்ரைஸ், என்ன மேம் பேங்க்ளூர விட்டு இங்க எப்போ வந்தீங்க??”  - காவ்யா

“பேங்க்ளூருக்கு பை சொல்லியாச்சு, இனிமே இங்கதான்..” – கீர்த்தனா

“வாவ், சூப்பர்.. எனி கூட் நீயூஸ்”  - காவ்யா

“காவீ, கிண்டலா?, கல்யாணம்லாம் இப்ப இல்ல, இப்ப தான் ஹையர் ஸ்டடீஸ் முடிஞ்சிருக்கு, சோ அங்கிள் ஓட கம்பெனில ஜாயின் பன்லாம்னு டிசைட் பன்னிருக்கேன்.” – கீர்த்தனா.

“அது சரி, மேடம் சொல்லாம கொல்லாம இப்படி திடீர்னு வந்து தரிசனம் கொடுக்கிறீங்க?” – தர்ஷினி சந்தேகத்துடன் கேட்க..

“ஓ.. அதுவா.. நான் என்னவோ பேங்க்ளூர்ல.. அத்தைகூட ஜாலியாதான் இருந்தேன்.. பட் என்னோட ப்ரோ திடீர்னு ஒரு தேவதைய பார்த்து அவ கண்ணக்குழில தொபுக்கடீனு விழுந்திட்டான்…இப்டி லவ்ல விழுந்த அவன் லைஃப் அ சரி பன்னலாம்னு தான் இங்க வந்தேன்!” - கீர்த்தி

காவ்யாவும் தர்ஷினியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். “அது சரி உனக்கு ஏதுடி அண்ணா?” – தர்ஷினி

“ஹலோ, நான் அத்தைகிட்ட தான் வளர்ந்தேன்.. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறது கூடவா உங்க இரண்டு பேருக்கும் மறந்து போச்சு?” – கீர்த்தி

“ம்ம்.. சரி உன்னோட அண்ணா அப்டி யாரு கண்ணத்தைப் பார்த்து மயங்கினாரு?” – தர்ஷினி

“அட மக்கு தர்ஷூ,  ரிஷி அண்ணா நம்ம க்யூட் காவ்யாவ தான் நேசிக்கிறார்.. இது தெரிஞ்சப்ப எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருந்ததுனு தெரியுமா? ஐயம் சோ ஹேப்பி..” என்று மறுபடியும் அவள் காவ்யாவைக் கட்டிக்கொண்டாள்.

காவ்யாவிற்கும் தர்ஷினிக்கும் என்ன சொல்வதென்றே தெரியாது விழித்தனர். அதற்குள் கீழிருந்து  “கீர்த்தி”என்ற அழைப்பு வர

“காவீ, நீ உன்ன ரொம்ப நேசிக்கிறவங்க வீட்டுக்கு தான் வர போற, நிச்சயமா எங்க வீட்டில உன்ன தேவத மாதிரி பாத்துப்பாங்க..நீ நினைக்கிற மாதிரி இல்ல..இருந்தாலும் அவசர படாம எந்த முடிவையும் எடு! இப்ப நான்  கீழப்போரேன் அப்புறம் பேசலாம்” கீர்த்தி கீழே சென்றுவிட்டாள்.

காவ்யாவும் தர்ஷினியும் ஒருவித மோனநிலையில் இருந்தனர்.

சற்று நேரம் கழிச்சு, “மச்சீ, ரிஷி கீர்த்தியோட அண்ணனா?” – தர்ஷினி

“முதல்ல இந்த கீர்த்தி பக்கிக்கு ஒரு அண்ணன் இருக்கானா?” – காவ்யா

“மச்சீ, அன்னைக்கு  அவர மால்ல வச்சு பார்த்தப்பவே எனக்கு மைல்டு டவுட் வந்துச்சு, பட் சார் இப்படி கல்யாணம் வரைக்கும் வருவாருனு நான் சத்தியமா  எதிர்பார்க்கல!” – தர்ஷினி

காவ்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. எவ்வளவு யோசித்தாலும் ரிஷியின் முகம் கூட அவளுக்கு ஞாபகம் வரவில்லை. “ரிஷி, கொஷி.. இருடா உன்ன பார்த்துக்கிறேன் லவ்வா பன்ற.. நீயே அம்மா தாயே விட்டாப்போதும்னு ஓடறவரைக்கும் உன்ன விடுறதா இல்ல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.