(Reading time: 21 - 41 minutes)

“சார், நான் கிளம்பலாமா? அதான் உங்க ஆசை மேடமே வந்து பொருளை வாங்கிகிட்டாங்களே!” – இளா

காவ்யா திரும்பிப்பார்த்தாள். கொஞ்சம் பொறுமையும் நிதானமும் அவளிடம் இருந்திருந்தாள் இளமாறனின் நல்ல குணம் அவள் கண்களுக்கு தெரிந்திருக்கும், ஆனால் இப்போதும் அவள் நிதானம் இழந்தாள்.

“ஹேய், என்னடா, திருடினதும் திருடிட்டு உனக்கு ஏன் இவ்வளவு வாய்”

இளமாறனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. “ஹலோ, மரியாதையா பேசினா எல்லாத்துக்கும் நல்லது!”

“யாருக்கு நல்லது, அதான் கையும் களவுமா மாட்டிகிட்டீயே! அன்னிக்கு நீ நடந்த விததுக்கே உன்ன ஈவ் டீசிங்க்னு உள்ள போட்டிருக்கனும் நான் தான் மிஸ் பன்னிட்டேன்!”

இளமாறனுக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது, “சீ , தவறுதலா இடிச்சத கூட உணர முடியாத நீலாம் என்ன பெண்ணோ? உன்ன பார்க்கவே எரியுது!” என்று இளமாறன் கத்த.. அவ்வளவுதான் காவ்யாவிற்கு தாளமுடியாத ஆத்திரம் வந்தது, “யூ இராஸ்கல், செய்றதையும் செஞ்சுட்டு இப்ப இளக்காரமா பேசுறீயா!” என்றவாரே இளமாறனின் கண்ணத்தில் அரைய கையை ஓங்கினாள், அப்படியே விட்டிருந்தாள் இன்னொரு முறை காவ்யாவின் கை இளமாறனின் கண்ணத்தை பழுது பார்த்திருக்கும், ஆனால் அது அவ்வளவு தூரம் போகும்முன்னே, அதனை தடுத்து நிறுத்தியது ரிஷியின் கை.

அனைவரும் அவனைப்பார்க்க, காவ்யா ரிஷியின் கையால் அளுத்திப்பிடிக்கப்பட்டிருந்த கையை விடுவிக்க தினறினாள். அவளை கூர்ந்து ஒருமுறை பார்த்தவன். அவளது கையை விடுவித்தான். காவ்யாவின் எரிச்சல் அதிகமானது. அவளை கொஞ்சமேனும் அலட்சியம் செய்யாது ரிஷி, இன்ஸ்பெக்டரிடம், “சார், இளமாறன் என்னோட கம்பெனில ஒரு முக்கியமான போஸ்ட்ல இருக்கிறவரு.. தவறுதலா தான் இது நடந்திருக்கனும். சோ மிஸ் காவ்யா இந்த கேஸ வாப்பஸ் வாங்கிப்பாங்க!” என்றான்.

இளமாறனிடம் திரும்பி, “சாரி இளா, கொஞ்சம் டைம் ஆயிடுச்சு, வீட்டில முக்கியமான ஃபங்க்ஷனு சொன்னீங்க, சீக்கிரம் போங்க, வெளில விக்னேஷ் வெயிட் பன்றாரு உங்க வீட்டில எல்லாரும் டென்ஷனா இருப்பாங்க.. சீக்கிரம் கிளம்புங்க…”

இளமாறனுக்கு திகைப்பாகவும் அதே நேரம் அவன் கிளம்ப வேண்டிய அவசியமும் புரிய அவன் கிளம்ப எத்தனிக்கும்போது, காவ்யா தன் விரலை சொடுக்கினாள். அந்த சத்ததிற்கு ரிஷியும் இளாவும் அவளைப் பார்த்தனர். கம்பீரமும் அழகும் நிறைந்த அவள் தோற்றம் அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் கவர்ந்தது கொஞ்சம் நிதானமும், பொறுமையும் இருந்தால் அவளை யாராலும் வெல்ல முடியாது. “என்ன இரண்டு பேரும் சேர்ந்து ஃப்ளீம் காட்றீங்களா, அவள் ரிஷியைப் பார்த்தவாறு, சார் உங்க மனசில ஹீரோனு நினைப்பா நீங்க வாட்டில வர்றீங்க அக்யுஸ்ட்ட கிளம்புன்னு சொல்றீங்க… உங்க மனசில என்னநினைச்சுகிட்டு இப்படி பன்றீங்க?”

இப்போது ரிஷி அவளைப் பார்த்து கேலியாக சிரித்தான். காவ்யாவின் கோபம் இன்னும் அதிகமாக அவள் முகம் சிவந்தது,  அவள் எரிச்சலில், இன்ஸ்பெக்டரிடம், “சார், இவங்க இரண்டுபேரும் திருட்டு பசங்க தான். நான் இரண்டுபேர் மேலேயும் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் நீங்க் அரஸ்ட் பன்னி நல்லா சாத்துங்க அப்படியாவது சில ஜென்மங்கள் அடங்குதானு பார்ப்போம்!”

இப்போது அந்த இன்ஸ்பெக்டெருக்கு உண்மையில் மகிழ்ச்சி, ரிஷியின் அழகும் கம்பீரமும், அவன் நடந்துகொண்ட விதமும், ஆண்மை ததும்பும் அவன்  செய்கையும் உள்ளூர இன்ஸ்பெக்டெருக்கு பொறாமையை விதைத்திருந்தது, கள்ளத்தனமாக அவன் காவ்யாவிடம் வழிவதை எர்ச்சலுடன் பார்த்திருந்த ரிஷியை ஏதேனும் ஒரு விதத்தில் தண்டிக்கும் காழ்ப்புணர்ச்சி அவன் இதயத்தில் அப்போது தோன்றியது. ரிஷியோ அவர் எந்த விதத்திலும் தொட முடியாத இடத்தில் இருந்தான். “மேம் நீங்க் கம்ப்ளைன்ட் கொடுத்தா நிச்சயம் இவரையும் விசாரிப்போம்” – என்று நக்கலாக ரிஷியைப்பார்க்க.

அவன் கண் ஜாடை செய்து இளமாறனை போக்ச்சொன்னான். இன்ஸ்பெக்டரின் எண்ணம் புரிய, அவன் காவ்யாவிடம், “கம்ப்ளைன்ட் கொடுப்பியா என் மேலையா? என்னனு கொடுப்ப?”

“திருட்டு இராஸ்கல்னு..பொருக்கினு..” – காவ்யா

ரிஷி அவளையே ஒரு நோடி விழி அகலாது பார்த்தான்.

“ஓ, பொருக்கினா கம்ப்ளைன்ட் கொடுக்க போற, அப்ப சரி,  பொருக்கி என்ன செய்வானு தெரிஞ்சுட்டு கம்ப்ளைன்ட் கொடு பேபி..”  - என்றவாரே தன் சட்டைக்கையே மடித்துக்கொண்டே காவ்யாவின் முன்னே இரண்டடி எடுத்து வைத்தான். அவனுடைய செய்கை உள்ளூர பயத்தை விளைவிக்க, அவன் அந்த நொடியில் எது வேண்டுமானாலும் செய்வான் என்பதுபோலிருந்தது அவன் அவளை நோக்கி முன்னேறும் வேகம், காவ்யா தன்னை நெருங்கும் ரிஷியைத்தடுக்க, தன் கைப்பையை அவன் மீது வீசினாள், அதை தள்ளி அவளை அவன் நெருங்கும்போது ரிஷியை அடிக்க கையை ஓங்கினாள், மறுபடியும் அதை அழுத்திப்பிடித்தவன் அவள் யோசிக்க எந்த அவகாசமும் கொடுக்காது அவள் கண்ணத்தில் ஓங்கி ஓர் அரைவிட்டான், காவ்யா சுருண்டு விழுந்தாள் இருகைகளிலும் அவளை தூக்கிக்கொண்டான் ரிஷி. அந்த இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரம் அதிகம் ஆகி அவன் கத்த ரிஷியின் ஒரு முறைப்பே அவனை அடக்க போதுமானதாய் இருந்தது. அருகிலிருந்த மற்றொரு காவலர். “சார், கொஞ்சம் பொறுமையா இருங்க, இது ரொம்ப பெரிய இடம்..அந்த பொண்ணு அவர் கட்டிக்கப்போற பொண்ணு பேசாமா இருங்க சார்!” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.