(Reading time: 21 - 41 minutes)

விஸ்வம் இண்டஸ்ட்ரீஸ்” எனும் பெயரில் பல காட்டன் மில்களை நடத்தி, தொழிலிலும் தொழிலாளர்களிடமும் மிகுந்த நன் மதிப்பை பெற்றவர் விஸ்வம். விஸ்வத்தின் ஒரே தங்கை அருந்ததி. தன்  கணவர் மறைவிற்குபின் தன் அண்ணனோடு வந்து தங்கிவிட்டார். விஸ்வத்தின் மனைவியின் மறைவிற்கு பிறகு ரிஷிக்கும் அவன் தங்கை கீர்த்திக்கும் ஒரு அன்னையைப்போன்று இருப்பவர். கீர்த்தனாவை தன் சொந்த மகளென நினைப்பவர். அவள் படிப்பிற்காக பெங்களூரில் இருந்தவர்.. சில காலமாக தறிகெட்டு ஓடும் ரிஷியின் போக்கு விஸ்வத்தை வருந்த செய்ய அவர், அருந்ததியை இங்கே வரும்படி கூற, கீர்த்தனாவின்  படிப்பு முடியவும் அவளுடைய எதிர்காலத்தைப் பொருட்டும் தன் அண்ணனோடு வந்து தங்கிவிட்டார்.

“காவ்யா” என்ற சம்பந்தத்தின் குரல் தோழியர் இருவரையும் நடுங்க செய்தது. “மச்சீ, ஹிட்லர் கூப்பிடுறாரு..” – காவ்யா

“ஆமாண்டி வா கீழ போய் அட்டண்டன்ஸ் போடுவோம் அப்புறமா.. இந்த கீர்த்திய பிடிச்சு ரிஷியோட இன்ஃபோ கலைக்ட் பன்னிடலாம்!” – தர்ஷினி. காவ்யாவும் தர்ஷினியும் கீழே வந்தனர். விஸ்வம் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அருந்ததியும் பார்க்க கம்பீரமாகவும் களையாகவும் தோற்றம் அளித்தார். நேரே அவர்களை பார்க்கும்போது காவ்யாவிற்குள் ஏதோ மெல்லிய பயம் வந்தது. ஆனால் அருந்ததியின் புன்னகை தவழும் முகத்தைப்பார்த்ததும் அவள் இயல்புக்கு திரும்பினாள்.

தர்ஷினி காவ்யாவின் தோளை இடித்தாள். காவ்யா தர்ஷினியின் கண் ஜாடையைப்பார்த்து எதிரே இருந்தவர்களுக்கு வணக்கம் சொன்னாள். கீர்த்தி ஓடி வந்து காவ்யாவை அழைத்து தன் அருகே உட்காரவைத்தாள். தர்ஷினி மௌனமாக மீராவின் பக்கம் நின்றுகொண்டாள். காவ்யா நிமிர்ந்து ஒருமுறை தன் எதிரே இருந்தவரகளை கண்களால் துளாவ, அருந்ததி புன்னகைத்தவாரே, “ரிஷி வரலம்மா.. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கு அதான் அவனால வர முடியல.”

விஸ்வம் காவ்யாவை பார்த்தார். அவருக்கு காவ்யாவை மிகவும் பிடித்துப்போயிற்று, என்பதற்கு அவர் முகமே சான்றானது. அவர் கேட்ட கேள்விகளுக்கு காவ்யாவின் பதில் அவளது கூர்ந்த அறிவை உணர்த்த, இளமையும் அழகும், ததும்பும் அவளை தன் மருமகளாக அவர் அப்போதே முடிவு செய்துவிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு.. அருந்ததி, தாம்பாளத்தில் இருந்த பூவை எடுத்து காவ்யாவிற்கு வைத்துவிட்டார். கொஞ்சம் பூவை எடுத்து தர்ஷினியின் தலையில் அவர் வைக்க வரும்போது அவள் “இல்ல பரவாயில்ல ஆன்ட்டி” என்றவாரே விலக, “ஏய், பெண்கள் எப்போதும் மங்கல பொருளை வேண்டாம்னு சொல்லக்கூடாது, காவ்யா கல்யாணம் வர்ற நேரம் உனக்கும் கீர்த்திக்கும் நல்லபடியா வரன் அமையட்டும்” என்றவாரே அவர் தர்ஷினியின் தலையில் பூவை சூடினார். அந்த அழகான மாலை நேரம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணத்தை விதைத்தது. சிறிய விருந்துக்கு பிறகு அனைவரும் விடைபெற, காவ்யாவும் தர்ஷினியும் அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்தனர். சிறிது நேரத்தில் தர்ஷினி உறங்கிவிட காவ்யாவின் மனதோ ஒரு நிலையில் இல்லை. அவள் மீராவிற்கும் சம்பந்ததிற்கும் கல்யாண நாள் பரிசாக வாங்கிய மோதிரம் ஞாபகம் வர, எழுந்து தன் பீரோவை திறந்து அதை தேடினாள் ஆனால அவைகள் அங்கு இல்லை…

காலைக் கதிரவன் தோன்ற, செல்வியின் வீடு மங்களகரமாக மிளிர்ந்தது. வாசலில் வனிதா வண்ணக்கோலம் இட்டாள். அந்த சிறிய வீட்டை தீபங்களாலும், வாசனை பத்திகளாலும் தெய்வீகமாக உணர செய்தாள். கூடத்தில் புதிய கம்பிளியை விர்த்து அனைவரும் அமரும் வண்ணம் வழிசெய்தாள். குறுக்கும் நெடுக்குமாக வனிதாவும், இளமாறனும் அவனது தோழன் மணியும் தீவிர வேலையில் இருந்தனர். அன்றைய தினம் “விக்னேஷின் வீட்டிலிருந்து செல்வியைப் பார்பதற்கு வருவதாய் இருந்தது.

 அதனாலேயே வீடு அமர்க்களப்பட்டது.  “இலா, இன்னிக்கு லீவ் போட்டுருக்கியா?” – வனிதா

“ஆமாம்மா!” – இளா

“இப்ப தான் நீ நல்ல வேலையில சேர்ந்திருக்க அதுக்குள்ள லீவ் போடுற மாதிரி ஆயிட்டு, நீ இல்லாமலேயும் சமாளிக்க முடியாதுடா கண்ணா, மாமாவுக்கு தெளிவா பேச வராது…நீ தான் முன்னாடி நிக்கனும்..!” – வனிதா

“அம்மா, இப்ப நான் ஜாயின் பன்னிருக்கிற ஃபர்மோட எம்.டி ரொம்ப நல்ல டைப். இப்படி தங்கைக்கு அலெய்யன்ஸ் வர்றாங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டாரு.. நல்ல படியா செல்வியோட கல்யாணத்தை இன்னிக்கே பேசி முடிக்கனும்” – இளா

வாசலில் கார் வரும் சப்தம் கேட்டது. இளமாறனும் அவன் நண்பனும் வாசலுக்கு விரைந்து அனைவரையும் வரவேற்றனர். விக்னேஷ் நல்ல நிறமும் உயரமும் மெல்லிய தேகமுமாக இருந்தான். கூடவே விக்னேஷின் தாயும் தந்தையும் தாய்மாமாவும் வந்திருந்தனர். வனிதா வந்தவர்களை வரவேற்று விட்டு செல்வியைன் அலங்காரத்தை கவனிக்க உள்ளே சென்றாள். நீல வண்ண சில்க் காட்டன் புடவையில் மெல்லிய அலங்காரத்திலும், அவள் உண்மையில் பெண்மை மிளிர அழாகாய் இருந்தாள். விக்னேஷின் கண்கள் செல்வியை விட்டு அரை நொடி கூட அகலாதிருந்தது. ஆனால் செல்வியின் உள்ளமோ ரிஷியின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்க ஏங்கிக்கொண்டிருந்தது. விக்னேஷின் அம்மா கேட்ட கேள்விகளுக்கு வனிதாவும் இளமாறனும் மிகுந்த பொறுமையுடன் பதில் சொல்லினர். செல்வியின் தந்தையைப் பற்றி ஏற்கனவே இளமாறனின் தாய்மாமா எடுத்துக் கூறியிருந்ததால் அது பற்றிய விவாதம் ஏதுமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.