(Reading time: 15 - 29 minutes)

எதுக்கு இப்படி பேசுகிறாய்  குசு  குசு என்று  ஒழுங்காக  பேசு

வீட்டில் எல்லாரும் இருக்காங்க  இப்படி தான் பேச முடியும் சொல்லுங்க  என்ன ஆயிற்று 

அது என்ன சில நேரம் வா போ என்று   சொல்கிறாய் சில நேரம் வாங்க போங்க என்று சொல்கிறாய்

என்னை திட்டினால்  எப்படி மரியாதை  குடுக்க முடியும். மீதி  நேரத்தில்  தருவேன் என்றாள். சரி சொல்லுங்க பெரிய சண்டையா 

அதெல்லாம் பெரிய சண்டை ஏதும் இல்லை . சின்ன சண்டை கூட கிடையாது. நடந்ததே வேற ஆனால் என்ன நடந்தது என்று உன் தோழியிடம் நீயே  கேட்டுக்கொள்

ஏன்  என்ன ஆயிற்று  என்று நீங்க சொல்ல மாட்டீங்களா 

போகும் போது நீ  சொன்னாயா  என்ன காரணம் என்று. 

அது அது சொல்ல  கூடிய விசயம் கிட யாது .

இதுவும் அதே போல தான்.

என்ன ஓ 

ஒண்ணும் இல்லை 

ம்ம்

வைக்கவா 

அதுக்குள்ளவா

பின்ன 

சும்மா ஏதாவது பேசு

எதுக்கு ஒரு நல்ல பையனை நான் கடலை போட்டு கெடுக்கவா  எனக்கு எதுக்கு இந்த பொழப்பு நீங்க நல்லவங்கலாகவே  இருங்க குட் நைட்  என்று சொல்லி வைத்து விட்டாள் 

அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்த வினோத்  இனிமையான கனவுஉலகத்தில்  நுழைய போகும் போது மாடியில் இருந்து வந்த கார்த்திக்கின் அலறலில் திடுக்கிட்டு விழித்தான்......

சுவடுகள் பதியும்....

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.