(Reading time: 15 - 29 minutes)

சத்தமே இல்லாமல் அமைதியாக இருந்தது  ஐயோ  என்ன அச்சோ ஒரு வேலை கீர்த்தி கார்த்தியை அடி பின்னிருபாலோ நாமளும் போனால் நமக்கும் அடி விழும் என்று பயத்துடன் சென்று கதவை தட்டினான்.

அப்போது விருட்டென்று வெளியே வந்தான் கார்த்திக் வந்தவன் முதலில் சொன்னது  லூசா டா  நீ  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே வர வேண்டியது  தானே

இவன் ஏன்  இப்படி பேசுறான் என்னமோ இவன் என்னை கூப்பிட்ட மாதிரி முன்னாடியே வந்திருக்கனுமாம் கேட்டா முறைப்பான் தேவையா எனக்கு. அவனை பார்த்து பரிதாபமாக விழித்தான் வினோத்

ஆனால் கார்த்திக் அவன் முகத்தை கூட  பார்க்காமல் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு கீழே  சென்றான். வா வெளியே போய்ட்டு வரலாம்.

இந்த நேரத்துக்கா  எங்க டா போகணும்

மணி 7 தான ஆகிறது  பக்கத்தில்  உள்ள பார்க்கு போய்ட்டு வரலாம்.

கீர்த்தி தனியா  இருக்கிறாள்  டா

அவள்  இருப்பாள்  அவளை  பற்றி உனக்கு தெரியாதா  ஊரையே வித்துவிட்டு  வந்துருவா  எதுக்கும் நாம கீழே  பூட்டிவிட்டு  போகலாம் என்று  சொல்லி விட்டு இழுத்து கொண்டு சென்றான்.

பார்க் வரும்  வரைக்கும் இருவரும் எதுவும் பேசவில்லை பிறகும் மௌனம் தொடர வினோத் ஆரம்பித்தான் என்ன ஆயிற்று   டா

என்னது  என்ன ஆயிற்று

சண்டையா

சண்டை என்று  நான் உன்கிட்ட சொன்னேனா

இல்ல  டா  அது வந்து அந்த பாப்பா தான் ஏதோ நீ  கோபமாக  இருக்க என்று சொல்லிவிட்டு போயிற்று அதனால் தான் கேட்கிறேன்

அது பாப்பா வா

எப்பா  சாமி நீ  சும்மாவே சாமியாடுவ  இப்ப கேக்கவா  வேணும் நீ  ஏதும் சொல்ல  வேணாம் ஆளை  விடு. எது கேட்டாலும் மடக்குறான்

ப்ப்ச்ச்  நீ வேற ஏன்டா  படுத்துற

என்னடா  பிரச்னை

இந்த கீர்த்தி குரங்கு இருக்காளே  டா  அவள்  தான் பிரச்சனை. இன்று  என்ன செய்தாள் தெரியுமா

சொன்னாள் தானே தெரியும்

சொல்லிகிட்டு  தானே  இருக்கிறேன் என்ன அவசரம் உனக்கு 

சரி டா  மாப்பிளை சொல்லு சொல்லு

அவ தோழி வந்தாளே அந்த பொண்ணு பெயர் என்ன ஆஅன் யோசித்தான்

அவள் பெயர் அபர்ணா டா 

பொண்ணுங்க பெயர் எல்லாம் உன் மண்டையில் நல்ல பதிந்துவிடுமே 

தெரிஞ்ச விசயம் தானே  டா  இது. விசயத்துக்கு  வா

என்ன விசயம் 

டேய்  உன்னை கொன்றுவிடுவேன்  கீர்த்தி என்ன செய்தாள்  அதை தானே   சொல்ல வந்தாய்  அதை முதலில் சொல்லு

அவள் அபர்ணா விடம்   சொல்கிறாள் நான் ஃபர்ஸ்ட் நைட் அன்று  அவளை கிஸ் செய்தேனாம்

டேய்  கார்த்தி சொல்லவே இல்லை  பார்த்தாயா  என்னமோ பிடிக்காத மாதிரி அவளை முறைத்துகொண்டே  இருந்தாய்  இது எப்ப நடந்தது. அவங்க நட்பை  பார்த்தாயா  டா  உண்மையை சொல்லி இருக்கிறாள் ஆனால் நீ என்னிடம் மறைத்து விட்டாய் என்று  சொல்லி முடிக்கவும் வினோத் மீது பாய்ந்து இருந்தான் கார்த்திக்

உன்னை கொன்று விட்டு  தான் தா மறுவேலை  பார்க்க போகிறேன் என்று பாய்ந்தவனை தடுத்தான்  வினோத்.

எப்பா உனக்கு நண்பனா  இருப்பதட்கு  நாலு குட்டி சாத்தான் கூட குடுத்தனம் நடத்திவிடலாம்  நீயே  சொல்லு  நான் வாயே திறக்க மாட்டேன் போதுமா.

அப்படி ஒரு விசயம் நடக்கவே இல்லை  டா . ஆனால்  பொய்  சொல்கிறாள் அவளிடம். எனக்கு அப்படியே பத்திக்கிட்டு  வந்தது சரியான ராட்சஸி. லூசு டா  அவள். முகத்து மேலே  தலையணை  தூக்கி எறியுறேன்  அஸால்ட்டா  காட்ச்  பிடித்து விட்டு  ஈஈ  என்று சிரிக்கிறாள்.

எப்பா  பெரிய பொய்  கீர்த்தியா டா  இப்படி சொன்னாள் . நீ  சும்மாவா வந்த. அதனால் தான் அவளிடம் சண்டை போட்டாயா  அவள் உன்னை அடித்து விட்டாளா அதனால் தான் உன்னை காப்பாற்ற சீக்கிரமே வர வில்லை என்று திட்டினாயா   என்று கேட்டு முதுகில் இரண்டு அடி வாங்கி  கொண்டான். ஒரு வழியாய் கார்த்திக்கை  சமாதான படுத்தி மீதி கதையை கேட்டான் வினோத்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.