(Reading time: 12 - 24 minutes)

று நாள் பூஜாவிடம் எப்படி பேசுவது என்ற ஒரே சிந்தனையில் இருந்தான்.

மறு நாளும் காலையில் ஹோட்டலில் வேலை இருந்ததால் அதனை முடித்து விட்டே அவனால் பூஜாவை பார்க்க கிளம்ப முடிந்தது......

முந்தைய நாள் முழுவதும் பூஜாவால் நார்மலாக இருக்க முடியவில்லை...... தோழிகள் இல்லாத வீடும் வெறுமையை தந்தது. வேலை முடிந்து பேச வருகிறேன் என்று சென்ற இந்தரும் இரவு வரை வரவில்லை........

காலையில் எழுந்து யாரிடமாவது பேசலாம் என்று எண்ணி, தனது சோகத்தை யாரிடம் பகிர்வது என யோசித்த பொழுது, அக்கா சியாமளா தான் நினைவிற்கு வந்தாள். அக்காவிடம் பேசினாலாவது தனது குற்ற உணர்ச்சி குறையும் என்று எண்ணி skype ல் ஷியாமளாவை அழைத்தாள். அனால் அக்காவும் லைனில் வரவில்லை.

இந்தர் வந்தால் என்ன பேசுவது என யோசித்து கொண்டிருந்தாள்...... அவன் இதுவரை அவளிடம் பழகியதை வைத்து பார்த்தால், அவனுக்கும் தன் மீது ஈடுபாடு இருப்பதாகவே பூஜாவிற்கு தோன்றியது.

என்ன யோசித்தாலும் தன் மீதே பிழை இருப்பதாகவே தோன்றியது. அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும், என எண்ணிக் கொண்டிருந்தாள். ஒரே ஆறுதல் இந்தர் அவளை மிக மோசமாக நினைக்கவில்லை என்பதே, அப்படி எண்ணி இருந்தால், வந்து பேசலாம் என கூறி சென்றிருக்க மாட்டான்..........

தந்து குற்ற உணர்ச்சி தீர ஒரே வழி இந்தரை திருமணம் செய்து கொள்வது தான் என்ற ஒரே முடிவிற்கே வர முடிந்தது பூஜாவால். இந்தர் வந்தவுடன் இதை பற்றி பேச வேண்டும் என எண்ணி அவனது வருகைக்காக காத்திருந்தாள் பூஜா.

ஒரு வழியாக இந்த முடிவிற்கு வந்தவுடன் தான் நேற்று முழுவதும் தான் ஒன்றும் சாபிடாமல் இருந்தது நியாபகம் வந்து பசி எடுக்க ஆரம்பித்து. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி குளித்து நல்ல உடை அணிந்து சமையல் அறையிலிருந்த நுடில்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்து சமைத்து சாப்பிட்டு முடித்தாள்.

அதன் பின் பால்கனியில் அமர்ந்து இந்தரின் வருகைக்காக காத்திருந்தாள். இரவு முழுவது உறங்காமல் இருந்ததால் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.

மாலை வேலை முடிந்து இந்தர், பூஜாவை எப்படி சமாதான படுத்துவது என்று யோசித்து கொண்டே அவளது அப்பார்ட்மெண்ட்டை அடைந்து அழைப்பு மணியை, இசைக்க விட்டான்.

சத்தம் கேட்டு கண் விழித்த பூஜா, மாலை வரை இப்படி உறங்கி இருக்கிறோமே என்று எண்ணியபடி வந்து கதவை திறந்தாள். அங்கு இந்தரை பார்த்தவுடன் தான் நிம்மதி வந்தது.

மூச்சு முட்டி கொண்டிருந்த குற்ற  உணர்ச்சியிலிருந்து உடனே விடுபட எண்ணி, இந்தர் உள்ளே வந்தவுடன், அவனை கட்டி அணைத்து, அவன் தோளில் சாய்ந்து, நாம் உடனே கல்யாணம் பண்ணி கொள்ளலாம் இந்தர் என உணர்ச்சி வசப்பட்டு கூறினாள்.

இந்தரின் பதிலுக்காக காத்திருந்த அந்த சில நொடிகளில் பூஜா, ஆயிரம் முறை செத்து பிழைத்தாள். சில நொடிகள் கடந்த பின்பே இந்தர் பதில் ஒன்றும் கூறாதது மட்டுமல்லாது, அவன்,  இவளை அணைக்க கூட இல்லை என புரிந்தது பூஜாவிற்கு.

சட்டென விலகினாள் பூஜா, ஒரு தவறை சரி செய்ய நினைத்து மேலும், மேலும் தவறு செய்கிறோமோ என்று இருந்தது.

“ரிலாக்ஸ் பூஜா, என கூறி அங்கிருந்த சேரில் அவளை அமரவைத்தான். மற்றொரு சேரில் அவனும் அமர்ந்தான்.

“உனக்கு என்ன வயசாகுது பூஜா?”

ஒன்றும் புரியாமல் இந்தரின் முகத்தை பார்த்தாள் பூஜா.........

“20 வயதிருக்குமா?

“21 ஆகுது.

“இந்த வயதில் யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா? You are too Young Pooja”

“என்னை அவாய்ட் செய்றீங்களா?

“இப்போ எதுக்கு இந்த அவசர கல்யாணம்?

“ஆனா என்னால, உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது..........

“ஏன்னு யோசிச்சியா? அன்னைக்கு என் அருகில் படுத்ததுக்காகவா? அது ஜஸ்ட் ஒரு இன்சிடன்ட்.  அதில் நம்ம இரண்டு பேர் மேலயும் தப்பில்லை. அதுக்காக எல்லாம் கல்யாணம் செய்ஞ்சுக்க முடியாது பூஜா.

“அப்போ நீங்க என்னை விரும்பலையா? இதை கேட்கும் போதே பூஜாவின் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது.

“கொஞ்சம் அழுகையை நிறுத்து. ரொம்ப குழந்தை தனமா பேசாத. நான் உன்னோடு நட்போட மட்டும் தான் பழகினேன். அதற்கு மேல ஒன்னும் இல்லை. என்று தனது மனதை மறைத்து, இந்த வயதில் லட்சியமே முக்கியம் என்று பொய் உரைத்தான் இந்தர், இதனால் பூஜாவிற்கு அவன் மேல் எவ்வளவு வெறுப்பு வரும் என்று தெரியாமல்.

இதை கேட்டவுடன் மிகவும் வெட்கி போனாள் பூஜா, நட்புடன் பழகினேன் என்று சொல்பவனிடம் போய், திருமணம் செய்து கொள்ள சொல்லி கெஞ்சியிருகிறோம் என நினைத்து துயருற்றாள் பூஜா.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.