(Reading time: 12 - 24 minutes)

ப்போ வேற எதுவும் பேச வேண்டாம், முதலில் சாப்பிட்டு கிளம்பு” என அத்துடன் அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார் கதிர்.........

இந்தருக்கு , Maldives ல் ரிசார்ட் ஆரம்பிப்பது அவனது நெடு நாள் கனவு, அதற்காக தான், சுவிஸ் வந்து படித்ததும், அப்படியே சித்தப்பாவிடம் பயிற்சி எடுத்ததும்.

கதிருக்கு, இந்தர் மேல் மிகவும் பாசம். அதுவும் அவன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ல் காட்டும் ஆர்வம் கண்டு, அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான், world bank ல், இங்குள்ள மெயின் பிரான்ச்ல், மானேஜரிடம் பேசி,  Maldives ல் உள்ள பிரான்ச்ல் லோன் கொடுக்க ஏற்ப்பாடு செய்திருந்தார்.

ரிசார்ட் ஆரம்பிக்க, அப்பா அர்ஜுனிடம் முழு பணத்தையும் கேட்க இந்தர் விரும்பவில்லை. அவருக்கு கஷ்டம் கொடுக்காமல் இதனை ஆரம்பிக்க விரும்பினான். அதனாலேயே இந்த லோன் ஏற்ப்பாடு......

இந்தரும், கதிரும் கிளம்பி மூன்று மணி நேர பிரயாணத்தில் Geneva வந்து, அங்குள்ள bank ல் மேனேஜரை பார்த்து பேசி, அதற்குன்டான விண்ணப்பங்களை பெற்று, அன்று முழுவதும் அந்த வேலையிலே சென்றது........

இதன் நடுவே இந்தர், பூஜாவை சுத்தமாக மறந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்...... இதில் கிளம்பி வந்த அவசரத்தில் போனை வேறு எடுத்து வரவில்லை.  

 பேங்க்கில், நல்லபடியாக  லோனுக்கு வேண்டிய பார்மாலிடிஸ் எல்லாம் முடித்து, கண்டிப்பாக லோன் சாங்க்ஷன் ஆகிவிடும் என தெரிந்த பின் இருவரும் மகிழ்ச்சியாக வீடு நோக்கி பயணமாகினர்.......

திரும்பி வரும் பொழுது காரில், கதிர் பாங்கில், வேலை சரியாக முடிந்ததை பற்றி பேசி வந்தார்.

“இந்தர், இந்த லோன், உங்கப்பாவோட, என்னோட ஷுரிட்டி கையெழுத்தை வைத்து தான் உனக்கு கொடுக்கறாங்க. அதனால நீ, இந்த வேளையில் முழு மூச்சா இறங்கனும். கொஞ்சம், வேற திசையில் உன்னோட கவனம் திரும்பினாலும், இதில் முழுசா உன்னால் சாதிக்க முடியாது”.

“கண்டிப்பா உன்ன பேரை நான் காப்பத்துவேன் சித்தப்பா”........

“உன்னை பத்தி எனக்கு தெரியும் இந்தர், இங்க இருந்த இந்த மூணு வருஷத்தில், சிகரெட், குடின்னு, உனக்கு கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது, நீ எந்த பெண்களோடும் அதிகம் பழகியது கிடையாது, உன்னை பத்தி நான் ரொம்ப உயர்வா நினைக்கிறன், அதனால் நீ நேற்று ராத்திரி வீட்டுக்கு வராத போது உன்னை பற்றி தவறா நான் எதுவும் நினைக்கவில்லை.”

“ஒரு நண்பருக்கு நேற்று உதவ வேண்டி இருந்தது, அதனால் தான் சித்தப்பா”...........

“இப்போ கூட நீ, நண்பனுக்குன்னு சொல்லாம, நண்பருக்குன்னு சொல்றது தான் கொஞ்சம் யோசிக்க வைக்குது”............

“சாரி சித்தப்பா, ஆனா அது அப்படி இல்லை, வெறும் தோழமை தான்.”

“இதை நீ எனக்கு சொல்லுவதை விட உனக்கு சொல்லி கொண்டால், நன்றாக இருக்கும். நானும் உன் வயதை தாண்டி வந்தவன் தான் இந்தர், முதலில் தோழமையா தான் ஆரம்பிக்கும்,  இதை தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் உன் முன்னால் இருக்கும், உன்னோட லட்சியத்தை கொஞ்சம் நினைத்து பார். உனக்கு வயதும் மிகவும் குறைவு, இந்த வயதில் உன் கவனம் முழுவதும் உனது லட்சியத்தில் இருந்தால், நீ பெரிய ஆளா வருவ”...........

“எனக்கு புரியுது சித்தப்பா”...........

“இதுவே சாதாரணமா, பெண்களுடன் ஊர் சுற்றும் பையன்களுக்கு பெருசா சொல்ல வேண்டியது இல்லை, ஆனா நீ அப்படி இல்லை, எதையும் சரியாக மட்டுமே செய்யணும்னு நினைப்பவன். யாருக்கோ உதவி செய்ய நினைத்து தான் நீ நேற்று ராத்திரி வீட்டுக்கு வரலைன்னு எனக்கு புரியுது. கருணையில் ஆரம்பிப்பது தான் காதலில் முடியும் இந்தர். ஆனா இப்போ உனக்கு இது தேவை இல்லைன்னு நான் நினைக்கிறன். நான் சொல்றதை புரிஞ்சுப்பன்னு நினைக்கிறன். நீ புத்திசாலி, உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை.........

“புரியுது சித்தப்பா, என்னோட லட்சியம் தான் எனக்கு முதல், அதுக்கு இடைன்ஜலா எதுவும் வராம பார்த்துகறேன்.........

இரவு வீட்டிற்க்கு வர நேரமானதால், பூஜாவை மறுநாள் காலை சென்று பார்ப்பது என முடிவெடுத்தான் இந்தர்........... இரவு உணவின் பொழுது, சித்தி, சித்தப்பா, அபியுடனும் , பேங்க் வேலை எளிதாக முடிந்ததை பற்றி பேசி சந்தோஷபட்டாலும், பூஜாவை நினைத்து சிறிது கவலையாக தான் இருந்தது.........

“என்ன இந்தர், சந்தோசமா இருக்க மாதிரி காண்பித்து கொண்டாலும் எதோ யோசனையா இருக்க, என்ன அது”? என அவனது சித்தி சுஜி கேட்ட பொழுது.......

“வேறு என்ன? லோன் கிடைச்சாச்சு, பின்னால் எப்படி அதை அடைப்பது என்று தான அண்ணா” என அபி மொக்கை போட்டான்......

“என்னோட தயாரிப்புடா இந்தர், அவன் அதுக்கெல்லாம் அசர மாட்டான்” என கதிர் கூறினார்........

அவர்கள் மூவரும் மாற்றி, மாற்றி பேசினார்களே தவிர இந்தரால் சகஜமாக பேச முடியவில்லை.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.