(Reading time: 17 - 34 minutes)

றுக கட்டிகொண்டான் சிவா..தேங்க்ஸ் மாப்ள உண்மையியிலேயே சஹானா குடுத்து வச்சவ..

என்ன சிவா நீங்க இது என் கடமை தான சரி என்ன பண்ணலாம்நு சொல்லுங்க??

நெற்றியை யோசனையாய் தடவியவன்,எக்ஸக்ட்டா என்ன பண்றதுநு தெரில பட் நாம ஏன் இன்னொரு தடவை கன்பார்ம் பண்ணி பாத்துற கூடாது??

ம்ம் நீங்க சொல்றதும் கரெக்ட்தான் எனக்கும் இது ஏற்கனவே தோணிச்சு பட் செய்றதுக்கு தைரியம் வரல..

கார்த்திக் அகெயின் அந்த டிப்ரெண்ஸ் அவகிட்ட தெரிய வர மாறி அவளோட பேசுங்க எதாவது க்ளூ கிடைக்குதாநு பாப்போம்..அதுக்கப்பறம் இதபத்தி பக்குவமா சித்தப்பாகிட்ட பேசலாம்..

அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் குறித்துக் கொண்டு விடை பெற்றான்..

றுநாள் விடிந்தும் விடியாமலுமாய் கிளம்ப தயாராகி வந்தவனை கீதா ஆச்சரியமாய் பார்த்தார்..

என்னப்பா இவ்ளோ காலைலயே கிளம்பிட்ட..

அது ஒண்ணுமில்லம்மா என் ப்ரெண்ட்டோட பிரதர் சென்னைக்கு வராரு அவர பிக் பண்ண ஸ்டேஷன் போறேன் சீக்கிரம் வந்துருவேன்ம்மா..பை என கூறியபடியே வேகமாய் வெளியேறினான்..

சஹானாவின் வீட்டிற்கு பின்புறமாய் பைக்கை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சுவரேறி குதித்தான்.தண்ணீர் குழாய் மீதேறி மாடியில் அவளறையை ஒட்டியிருந்த பால்கனியை அடைந்தான்..உள்ளே எட்டிப்பார்க்க சிறு குழந்தையாய் சஹானா தனது டெடிபியரை அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள்..தன்னிலை மறந்து அவளை ரசித்தவன் சட்டென சுயநினைவு பெற்று வந்த வேலையை கவனிக்க தொடங்கினான்..தன் மொபைலை எடுத்து அவளை அழைக்க சிறு அசைவுகூட இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்..

சரியான தூங்குமூஞ்சி எப்படி தூங்குறா பாரு என எண்ணியவனுக்கு முகத்தில் மென்னகை தானாய் அரும்பியது..மறுபடியும் அழைக்க கண் திறக்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

ஹே தூங்குமூஞ்சு சஹி எவ்ளோ நேரம் கால் பண்றேன் கண்ணத் திறந்து பாரு மொதல்ல..

ஹே கார்த்திக் குட்மார்னிங் எப்டி நா கண்ண தெறக்கலனு கரெக்ட்டா சொல்ற என தூக்கத்தில் அரைகுறையாய் பேச..

சஹி வந்து கதவ தொற ப்ளீஸ் யாராவது பாத்தா அவ்ளோதான்..

லூஸாப்பா நீ உன் ரூம் கதவ நா எப்படி திறக்க முடியும்??

அய்யோ கடவுளே என் ரூம் இல்ல உன் ரூம் கதவ தொறக்க சொன்னேன் என அங்கிருந்த செடியிலிருந்து ஒரு சிறு கல்லை அவள் மேல் வீசினான்..

ஆஆ,.என சத்தமிட்டபடியே பால்கனியை நோட்டமிட்டவள் கார்த்திக்கை கண்டு வேகமாய் சென்று கதவை திறந்து அவனை உள்ளிழுத்தாள்..

ஹே..புஜ்ஜுப்பா என்னதிது சர்ப்ரைஸ் என அவன் தோளை கட்டிக்கொண்டு ஆடினாள்..

ம்ம் இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல இப்படியா தூங்குவ உன்ன எழுப்புறதுக்குள்ள மூன்றாம் உலகப்போரே முடிஞ்சுரும் போலயிருக்கு கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப கஷ்டம் என பாவமாய் கூற

ம்ம் அப்போ நா பிக் கேர்ள்ளா நடந்துப்பேன் சரி சொல்லு என்னதிது திடீர்நு??

ம்ம் நேத்தே உனக்கு ரொம்ப போர் அடிக்குதுநு சொன்னல அதான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாமேநு கிளம்பி வந்துட்டேன்.இனி மேரேஜ் முடிஞ்சு நீ என்கிட்ட வர வர அப்பப்போ இப்படி ஒரு ரொமேண்டிக் சர்ப்ரைஸ் குடுக்கலாம்நு இருக்கேன் நீ என்ன சொல்ற??

வாவ் ஜாலி..சரி ஆனா எப்படி திடீர்நு இவ்ளோ தைரியம்??மாமனார் மேல மரியாதை பயம் எல்லா குறைஞ்சு போச்சா??

அதெதெல்லாம் அப்படியேதான் இருக்கு என் சஹி மேலதான் கொஞ்சம் லவ் அதிகமாய்டுச்சு..கரெக்ட்டா??

ம்ம்ம் கார்த்திக் பின்ற போ டே பை டே நல்ல இம்ரூவ்மெண்ட்..சரி கிளம்பு அம்மா வந்தாலும் வந்துருவாங்க..

வந்தா வரட்டும் இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தவன சும்மா அனுப்புறது உனக்கே நல்லாயிருக்கா மை சஹிகுட்டி..

எல்லாம் நல்லாதான் இருக்கு கார்த்திக் சார் மொதல்ல இடத்தை காலி பண்ணு நீ.,

என்ன சஹி லவ்வே பண்ணலனு நா சொன்னப்பவே தைரியமா என் வீட்டுக்கு திருட்டுதனமா வந்த இப்போ என்னடானா நானே பாக்க வந்தாலும் விரட்டி அனுப்புறீயே இது நியாயமா என்றவாறு அவளை நெருங்கி உக்கார்ந்தான்..

ம்ம் அப்போ நீ குட்பாயா இருந்த இப்போதான் கைல லைஸென்ஸ் கிடைச்சப்பறம் ரொம்ப பேட் பாயா மாறிட்டியே அதானால தான் விரட்டி விட்றேன் ஒழுங்கா கிளம்பிடு..

நோ வே..எனக்கு தர வேண்டியத தந்தா மட்டும்தான் நா இங்கிருந்து போவேன்

கார்த்திக்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.