(Reading time: 14 - 28 minutes)

தியின் உள்மனதில் இது புவனாவின் பெற்றோர் மற்றும் அண்ணனின் வேலையாக இருக்கும் என நம்பியது! அவன் அவ்விடத்தில் புவனாவின் அப்பாவை பார்த்தானே.. அவனை பார்த்த பார்வையில் அதிருப்தியை தெரிவித்தது.. ஓர் ஏளன புன்னகையுடன் அவர் அங்கு இருந்து சென்றாரே..

அன்றிலிருந்து ஆதிக்கு இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும் எண்ணம் மேலோங்க, வேறு வேலை தேட இருந்தவனுக்கு வேறு கிளைக்கு இட மாற்றம் கிடைத்தது. ஆதிக்கும் அவனின் நண்பன் அர்விந்த்க்கும் வேலையில் இடமாற்றம் கிடைத்து இருந்தது.

நடந்த விபத்தை புவனாவிடம் சொல்லி இருந்ததால் அவர்கள் அங்கு செல்ல முடிவு எடுத்தனர். ஆனால் புவனாவின் மனதில் மட்டும் ஓர் நெருடல்... நடந்ததிற்கும் அவளின் பெற்றோர்க்கும் எந்த சம்பந்தமில்லை என்றது அவளின் உள்மனம்... அறியவில்லை அவர்கள் இந்த தொல்லைகளும் இடமாற்றமும் எல்லாம் இவர்களுக்கு கொடுத்தது அந்த குள்ள நரியினர் வேலைகள் என்று!!!

ஊரை விட்டு செல்லும் வழியில் மலை கோவிலுக்கு சென்றனர். கோவிலை விட்டு செல்லும் வழி முழுக்க புவி பின்னால் பார்த்துக் கொண்டு வந்தாள். பாவம் அவள் அறியவில்லை இந்த ஊரை பார்ப்பது இதுதான் கடைசி முறை என்பது!

ஆதியின் நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வெண்ணிலா அபார்ட்மேன்ட்க்கு குடியேறினர். ஆதி புவியையும் குழந்தையையும் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். இதற்கு இடையில் புவி தென்றல் எனும் பெயரில் அமுதா குடும்பத்திற்கு அறிமுகமானாள். தப்பி தவறி கூட அவளின் நிஜ பெயரை அவர்களிடம் தெரிவிக்கவில்லை. காரணம் அவர்களை தேடி யாரும் இங்கு வந்து விட கூடாது என்பதால்.

குழந்தை வளர்ந்து இரண்டு வயதை கடந்த நிலையில், தென்றல் அம்முவை அழைத்துக் கொண்டு பார்க்கிற்கு சென்றாள். மற்ற குழந்தைகளை பார்த்த சந்தோஷத்தில் தென்றலின் கையை விட்டு ஓட, “அம்மு ஓடாதே!” என சொல்லிய படி அம்முவின் பின்னால் போகும் போது யாரோ தென்றலில் பெயரை சொல்லி அழைக்க... குரல் வந்த திசையை அவள்  திரும்பி பார்க்க.. அங்கே யாரும் இல்லாமல் இருக்க.. அவசரமாக குழந்தை சென்ற திசையை பார்த்தாள்..

அங்கே அம்முவை காணவில்லை... மற்ற குழந்தைகள் அங்கு விளையாடி கொண்டிருக்க அம்முவை மட்டும் காணவில்லை.அங்கே இருப்பவர்களிடம் அம்முவின் அடையாளத்தை சொல்லி கேட்கயில், அவர்களும் அம்முவை தேடினர்.

ஒரு மணி நேரமாக அந்த இடத்தையே அலசி விட்டனர்... அம்மு மட்டும் எங்கு சென்றாள் என தெரியவில்லை.அழுகையுடனே ஆதிக்கு தகவல் சொல்ல, சில நிமிடங்களிலே அவன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவளுடன் சிலர் அங்கு இருக்க, அழுகையுடனே அவனிடம் தஞ்சம் அடைந்தாள். அவளுடன் இருந்தவர்கள் எப்படி குழந்தை காணமல் போனது என சொல்லி, அவர்களும், “இந்த இடம், கார் பார்கிங், குளம் இருக்கும் இடம் முழுக்க தேடி விட்டோம்.. நீங்க உடனே போலீசிடம் கம்ப்ளைன்ட் செய்யுங்கள்” என்று சொல்லினர்.

அவளை வீட்டில் விட்டு “இங்கேயே இரு!! யாரவது அம்முவை அழைத்து வந்தால் எனக்கு கால் பண்ணு” என சொல்லிவிட்டு ஆதி சென்றான். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வாசலையும் அம்முவின் அறையில் இருந்து பார்த்தால் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பார்க் தெரியும் என்பதால் அழுகையுடனே இரு இடத்தையும் பார்த்து பார்த்து சோர்ந்து போனாள். நேரம் ஆக ஆக ஆதியும் காணாமல் தவித்து போனால் அவள். அவனின் கைத்தொலைபேசியும் ஸ்விப்ட்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

ள்ளிரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு அது ஆதியாக இருக்குமோ என நினைத்தவள் அவரசமாக ஓடி வந்து கதவை திறக்க அங்கே இருந்தவர்களை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தாள்!!

இந்த நேரத்தில் இவர்கள் ஏன் இங்கு வர வேண்டும் வாசலில் நின்று யோசிக்க அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தனர்.

“என்ன தென்றல் அங்கயே நிற்கற?” குரல் வந்த திசையை கேட்டு திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்க்கும் போது, அவர்கள் சோபாவில் அமர்ந்து இருந்தனர்.

குழந்தையை தேடி சென்ற ஆதி இன்னும் வராமல் இருக்க, இந்த நடுராத்திரியில் இவர்களின் வருகை அவளுக்குள் அச்சத்தை கொடுத்தது. பயத்துடனே “அவர் வீட்டில் இல்ல.. நீங்க நாளைக்கு வாங்க” என சொன்னாள்.

“அது தெரித்து தானே நாங்க இங்க வந்து இருக்கோம்..” அந்த குரலுக்கு சொந்தக்காரனை இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறாள் அவள். ஆனால் மாலையில் அவளின் பெயர் சொல்லி அழைத்த குரலை போல இருக்க அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

அங்கே நின்றவனும் அவளின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் “இன்னைக்கு இவினிங் நான் தான் உன்னை கூப்பிட்டேன்” என சொன்னான்

“நீயா? ஏன்? என் குழந்தை எங்கே?”..கோபமாக அவன் நிற்கும் இடத்தை நோக்கி நகரும் போது, அவளின் அருகே இருந்த இன்னொருவனால் அந்த வீட்டின் கதவு சாத்தப் பட்டது!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.