(Reading time: 14 - 28 minutes)

ய்... என்னடா பண்ண? என் குழந்தையை என்னடா பண்ண? ”அவள் கண்ணீருடன் கேட்ட

“அது எல்லாம் உனக்கு சொல்ல முடியாது... ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடி போயிரு... அதை விட்டுட்டு போலிஸ்க்கு போன.. உன்னை கொன்னு புதைச்சிடுவோம்…” என்றான் அவன். அவர்களின் மிரட்டலுக்கு அவள் பயப்படவில்லை.

தன் அம்மு இவர்களிடம் என்ன பாடு பாடுகிறாளோ.. “பாவம் கொழந்தை பசியிலும் பயத்திலும் அழுது இருப்பாள்... இவனுங்க என்ன பண்ணானுங்களோ தெரியலியே” என்று வாய் விட்டு சொல்லி அழுதவளை

“அவளை நாங்க மயக்கத்தில் தான் வைத்து இருக்கோம்... ம்ம்ம்.. சீக்கிரம் உனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு இங்கு இருந்து போ..” மீண்டும் அவசரபடுத்தினர்.

“முடியாது அவர் இல்லாமல் நான் எங்கும் போக மாட்டேன்..!!!”அழுகையுடனே அவள் சொல்லுகையில்

“ஹா ஹா ஹா ஹா” அவள் ஜோக் சொன்னது போல அங்கு இருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர். சிரித்து முடித்து “கொஞ்ச நேரம் முன்னால் தான் அவனை நாங்க பர லோகம் அனுப்பி வைத்து வந்தோம்... சரி நீ பொண்ணாக இருப்பதால் உன்னை அடிக்காமல் நாங்க பேசிக்கொண்டு இருக்கோம்..” என்று இவர்கள் சொல்லி சிரிக்கையில் அவளுக்கு உலகமே இருண்டு போனது ஆனது. ஆதி இறந்து விட்டான் என்ற செய்தியே அவளை பலவீனப்படுத்தியது... அவள் வாய் விட்டு கதறி அழுவதை அவர்கள் வேடிக்கை பார்த்தனர்...

“ஏய்..!!! நீ பிறகு அழுதுக்கோ... இப்போ இந்த இடத்தை காலி பண்ணு...” என அவளை விரட்டினர்

“முடியாது..!!! நான் கண்டிப்பா போலீஸ்க்கு போவேன்.. ஏன்டா அவரை கொன்னீங்க...? அவர் என்ன பண்ணினார் உங்களை..? ஏன் எங்களை இப்படி நம்ப வைத்து கழுத்தை அருதிங்க??? எனக்கு அவரையும் என் குழந்தையும் தவிர வேற சொந்தம் ஏதும் கிடையாது..” என்று அழுதுக் கொண்டு பேசுவபவளை பார்த்து பறிதாபம் இன்றி

“அவன் ஏன் குழந்தையை காணோம்ன்னு போலிசுக்கு போனான்?? அதான் அவனை கொல்ல வேண்டியதாகி விட்டது... அவன் கொடுத்த ரிப்போர்ட் கூட நாளைக்கு எங்க கைக்கு வந்து விடும்...” என்றான் அந்த புதியவன். அவன் சொன்னதை கேட்டு கையில் கிடைக்கும் பொருட்களை அவன் மேல் விட்டு விச,

“உன் புருஷனும் இப்படி தான் துள்ளினான்... அதான் அவனை போட்டு தள்ள வேண்டியது ஆச்சி...”

தென்றலின் கண்களில் கண்ணீர் நின்று போய் கோபம் குடிகொண்டு இருந்தது.. அவர்களை எல்லாம் பார்த்து அவள் கத்த, அழுகையும் கோபமும் இணைந்து அவளை தள்ளாட வைத்தது... அவளின் கண் முன் இருந்த கனமான ஓர் கண்ணாடி பொருளை தூக்கி அவனின் மேல் போட.. அது அவனின் முட்டி காலில் பட்டு விழ, அவனோ  வலியில் “அம்மா” என கத்திய படி காலைப்பிடித்துக் கொண்டு தரையில் சரிந்தான்.. மேலும் அவனை தாக்க நெருங்ககையில் தென்றலுக்கு பின்னால் இருந்தவனின் பெரிய கத்தியை எடுத்து அவளின் கழுத்தில் குறி வைக்க தாக்க, தென்றலில் தலை துண்டானது....

ஒரு பாவமும் அறியாத குழந்தை, அவர்களை தவிர வேறு எந்த உலகமும் அறியாத அன்பு கணவன் ஒரே நேரத்தில் பிரித்தவர்களின் கையால் அவளின் உயிரும் பிரிந்தது. அவளை இவ்வுலகை விட்டு அனுப்பியவர்கள் அங்கு தங்களின் வெற்றியை ஆனந்தத்துடன் சிரித்துக்கொண்டாடினார்கள். அந்த கொலையை போலீஸ்க்கு தெரியாத படி மறைத்ததுடன் , கடத்தல் கேசையும் அவர்கள் தலை இடாத படி பார்த்துக்கொண்டனர்.

வலியிலும் அடங்கா கோபத்திலும் பிரிந்த அவளின் ஆத்மா ஆவியாய் அலைந்தது. அவர்களை காவு வாங்கவும் துடித்தது. அந்த கள்வனின் கூட்டத்தில் இருவர் மட்டும் இருக்கின்ற நிலையில் தான் சுந்திரம் தாத்தா முலம் வினிதாவிற்கு இது பேய் குடி இருக்கும் வீடு என தெரிந்தது. வினிதாவை வைத்து தான் இரு கயல்வர்களை கொல்ல முடியும் என்ற நிலையில், அவள் வேறு வீடு தேடுகையில் தான் புவி பேய் வினிதாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது!!!!

ங்கு கனத்த அமைதி நிலவியது, அனைவரும் அமைதியாக இருக்க அமுதா மட்டும் “சுந்தரம் தாத்தாவிற்கும் இந்த கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்???” கேட்டாள்..அவளின் இந்த கேள்வியை அங்கு யாரும் எதிர் பார்க்கவில்லை!!

“பதில் சொல்லு.. அவரை ஏன் கொன்ன???” அந்த பேய் அமுதாவை உற்று பார்த்தது முறைத்து பின் அமைதியாக இல்லை என இடது வலமாக தலையை அசைக்க..

“என்ன இல்ல??? நீ தான்... நீயே தான் எனக்கு தெரியும்... உன் கண்களை அன்றைக்கு நான் பார்த்தேன்.. கோவமாக இரு கண்கள் சிவப்பு கலரில் மட்டும் அந்த சுவறில் தெரிஞ்சது... நீயும் என்னை பார்த்த.. சொல்லு ஏன் அவரின் உயிரை எடுத்தாய்...அப்படி என்ன வெறி உனக்கு?”

“நான் ஏதும் பண்ணல.. நான் உயிருடன் இருக்கிறேன் என்ற நினைப்பில் தினமும் என்னுடன் பேசுவார். ஒரு நாள் என்னை பார்த்து பயந்து கீழே குதித்து இறந்தது விட்டார்.” அதன் முகத்தில் சின்ன சிரிப்பு இருக்க, மற்றவர்கள் அந்த பேயை சந்தேகத்துடன் பார்த்தனர்.

“நீ சொல்லுற கதையை தான் எங்களால் நம்ப முடியல”அமுதா சொல்லிக்கொண்டு இருக்கையிலே

“சுந்தரம்ம்மம்ம்ம்ம்... ஹா ஹா ஹா எனது வேட்டையில் முதல் பலி... அவனுக்கு எல்லா உண்மையும் தெரியும் ஆனா யாருக்கும் ஒன்னும் சொல்ல... பயம்!! உயிர் பயம் அவனுக்கு!!! உண்மையை வெளிய சொன்னா கொன்னவிடுவார்கள்னு  மிரட்டி வைச்சு இருந்தானுங்க... எனக்கு உதவாத அந்த உயிர் அவனுக்கு எதுக்கு??? ஹா ஹா ஹா.... எதுக்குன்னு எடுத்துடேன்!!!!” என சொல்லிக்கொண்டு ஆகோர சிரிப்பை சிரித்தது.. அதன் சிரிப்பு சத்தம் மட்டும் அவ்விடத்தில் நிறைந்து இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.