(Reading time: 14 - 28 minutes)

ன்னை அடித்தவர்கள் யார் என கேட்கையில் அது ஆக்ரோஷமாக கத்தியும் சிரித்துக்கொண்டே மறைந்தும் போனது. அவள் அப்படி திடீரென மறைந்து போகும் என்று ரூபனின் அப்பா எதிர்ப் பார்க்கவில்லை என்பதால் அவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

”ஹா ஹா ஹா என்னை அசைய விடாமல் செய்தால் என்னால் இங்கு இருந்து வெளியே போக முடியாதுன்னு நினைத்து விட்டாயா????மாட்டேன்... மாட்டேன் அவர்களை நான் விட மாட்டேன்..”. ஆக்ரோஷமான குரல் மட்டும் கேட்டது, ஆனால் குரல் வரும் திசையை அவர்களால் கணிக்க முடியவில்லை.

இனி அடுத்தது என்ன? அவர்கள் யார்? அதை எப்படி கண்டு பிடிப்பது என தெரியாமல் அமர்ந்து இருந்தனர் அனைவரும். அம்மு குட்டி என்ன ஆனாள்? புவி பேய் சொன்னது போல அந்த கயல்வர்கள் கொன்று விட்டார்களா? இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும், கலங்கிய மனதை நிலைப்படுத்த தெரியாமல் அதுனுடன் பயணித்தனர் அவர்கள்.

சித்ராவின் போனில் அலாரம் அடித்து மணி காலை ஆறு என காட்டியது. ரூபனின் அப்பா ஏதோ சிந்தனையில் இருந்தார். எல்லாம் முடியும் வரை இவர்கள் யாரும் இங்கு இருக்க முடியாது. இது அதன் இடம். இங்கே அதன் வித்தைகள் அதிகம் நடக்கும் இடம். அதனால் தான் புவி பேயால் அவர் போடப்பட்ட கட்டத்தில் இருந்து மறைய முடிந்தது. கண்டிப்பாக இப்போது அது அங்கு இல்லை!!!. வீடுக்கு வெளியே இருந்து இவர்களை கண் காணிக்கும்.

வினிதா இன்னும் தூக்கத்தில் இருந்தாள். என்ன செய்தலும் அவள் கண்ணை மட்டும் திறக்கவில்லை. ரூபனின் அப்பா ஓர் மந்திரகயிறை எடுத்து வினிதாவின் கையில் கட்டி, “இது கழண்டு விழாமல் பார்த்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டார்.

“ஒரு சில நாட்களுக்கு என் வீட்டில் நீங்க எல்லாரும் தாங்கிக்கொள்ளலாம். இனி யாரும் இங்கே இருக்க வேண்டாம், நாம் இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து தான். உங்களுக்கு தேவையான துணிமணிகளையும் பொருட்களையும் எடுத்து வைங்கன்னு” அவர் சொல்லிவிட சித்ராவும் அனிதாவும் வினிதாவின் அண்ணனின் பதிலுக்காக அவரின் முகத்தை பார்க்க அவரோ குழப்பத்தில் முழு உருவமாய் அமர்ந்துஇருந்தார். வினிதாவின் அண்ணி இவர்களுக்கு உதவி செய்ய விரைவாக அவர்கள் அவ்வீட்டை விட்டு வெளியேறினர்.

அமுதனும் அமுதாவும் அவர்களை வழி அனுப்பி வைத்து அவர்களின் வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கு சென்று படுக்கையில் விழுந்த அமுதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சின்ன சிறு இரண்டு குருவிகள் ஆசை ஆசையாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று சிதைந்து போனது. அவளின் கண்களின்முன் அம்மு குட்டி வந்து நின்றாள்... பல முறை தூக்கி கொஞ்சிய குழந்தை அவள், ஏனோ மனதின்பாரம் அழுத்த கண்களின் வழியும் கண்ணீரை கட்டு படுத்த தெரியாமல் அமுதனை தேடி சென்றாள்.

 

தொடரும் நிழல்

Go to episode # 10

Go to episode # 12

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.