Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதி - 5.0 out of 5 based on 1 vote

10. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

Nizhalaai unnai thodarum

மாலை மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. அனைவரின் கண்களும் வினிதாவின் அறையிலும் வீட்டுவாசலிலும் அலைப்பாய்ந்தது.

இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டியிருக்கையில் மகேனும் வினிதாவின் அண்ணனும் வீட்டினுள் நுழைந்தனர். மகேன் தலையில் சின்ன கட்டும் வினிதாவின் அண்ணனின் கையில் கட்டும் இருக்க, அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்து பதட்டத்துடன் அனைவரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டனர்.

"மகேன் என்ன இது? " பதட்டத்துடன் கேட்க,

"வரும் வழியில் சின்ன ஆக்சிடண்ட்.. எங்களின் செல் வேற வேலை செய்யலை. கிளினிக் போயிட்டு வர லேட் ஆகிருச்சி... எங்களுக்கு ஒன்னுமில்லை.. பலமா அடியேதும் இல்லை” என்றான். என்னதான் அவர்கள் மற்றவர்களிடம் “ஒன்னும்இல்லை” என்று சொன்னாலும் மகேனின் குரலில் உள்ள நடுக்கத்தை அவர்கள் உணரவே செய்தனர்.

மேலும் அவர்களை தோண்டி துருவாமல், அடுத்த செய்ய வேண்டிய வேலையை பார்த்தனர். ரூபனின் அப்பா மகேனை பார்க்க, அவனோ இந்த வேலையை முதலில் பார்ப்போம் சொல்லிவிட்டான்.

அவர்கள் கொண்டு வந்த பொருட்களை ரூபனின் அப்பா அவர் உட்காரும் இடத்தில் அவரின் தேவைக்கு ஏற்ப அடுக்கினார். அவை எளிதில் எடுக்கும் வகையில் வைத்துக்கொண்டார். பின்னர் வினிதாவின் அறைக்கு வெளி சுவற்றில் வெறும் கைகளால் ஏதோ முத்திரை வரைந்தார். அதன்பின் ஒரு கிண்ணத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அவளின் அறை முழுவதும் தெளித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மணி நள்ளிரவை12:30 நெருங்க ஹாலில் அவர்கள் அமர்ந்து இருக்கும் பகுதி தவிர மற்ற அனைத்து விளக்குகளும்  அணைக்கபட்டு இருந்தது. அங்கு எரியும் விளக்கும் சற்று மங்களான வெளிச்சமாக இருந்தது.

மற்ற அனைவரும் பயத்தில் இருக்க, ரூபன் மட்டும் சித்ராவிடம் மெல்லிய குரலில்,

 “இவருக்கு தான் வேற வேலையில்லாமல் ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார்.. இப்போ நீங்களும் பைத்தியம் போல செய்யுறீங்க.. அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ண வேண்டியது தானே?” என பொரிந்துக் கொண்டு இருந்தான்.

ஒரு நொடி அவனையே உற்று பார்த்தவள் “எங்களுக்கு பழைய வினிதா வேண்டும் அவ ஏன் இப்படி இருக்காள், இன்று மதியம் கேட்ட சிரிப்பு சத்தம், அந்த கதவு எப்படி திறந்து சாத்தியதுன்னு இதுக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியுமா?” நிதானமாக அவனிடமே ஒவ்வொரு கேள்விகளாய் கேட்டாள்.

பாவம் ரூபனால் அவளை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது. அவனும்தான் இன்று காலையில் தன் பைக்கில் வந்தது யார் என தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.

சித்ரா, அனிதாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இதை பார்த்த ரூபன், “சின்ன “குழந்தை மாதிரி இப்படி பயப்படற.. கொஞ்சம் தைரியமா இருக்கணும்..எப்ப பாரு யார் பக்கத்துலயாவது இப்படி இருக்கிற!” என்றான்.

“தைரியம் என்ன கடையில் விற்கும் மருந்தா? உடம்புக்கு வைட்டமின் பத்தவில்லைன்னு வாங்கி குடிக்கிற மாதிரி, வாங்கி குடிக்க?” அவள் கேட்க

அவனோ அதிர்ச்சியில் “என்ன?” என்று கேட்டு, மனதில் “நீ என்ன லூசா?”ன்னு அவளை பார்த்தான். அவளோ இப்போது வினிதாவின் ரூமை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ரூபனின் அப்பா மீண்டும் ஒருமுறை தண்ணீரை எடுத்து அவளின் ரூமில் தெளித்து விட்டு வந்து அமர்ந்தார். அவரின் எதிரே கட்டம் போடப்பட்டு இருந்தது. அதற்கு எதிரே டீ டேபிளில் பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப் பட்டு இருந்தது. மேலும் இன்னும் சில நிலைக்கண்ணாடிகள் பல இடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

ரூபனின் அப்பா அமர்ந்து இருக்கும் இடம் சற்று இருட்டாக இருந்தது, சரியாக 12:40க்கு “டப்” என்ற சத்தத்துடன் வினிதாவின் அறைக்கதவு சாத்தியது. அனைவரின் கவனமும் அதிலே நிற்க கதவில் மட்டும் கொஞ்சமாய் வெளிச்சம் தோன்றி மறைந்தது.

முதல் தடவை அது தோன்றிய சில நிமிடங்களில் கிட்சனில் பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. என்னவென்று அனிதா பார்க்க எழுந்தரிக்கையில், "எந்த சத்தம் கேட்டாலும் யாரும் இருக்கும் இடத்தை விட்டு எழுந்திரிக்க வேண்டாம்" என்று எச்சரித்தார் ரூபனின் தந்தை.

அவள் குழப்பத்துடன் அமர்ந்தாள். அவளின் மனதில் “ஏன் அவ்விடத்தை விட்டு நகர கூடாது என சொல்கிறார் “ என்ற கேள்வி எழுந்தது.

அடுத்து அந்த எதிர் அறையில் இருந்து எதையோ உருட்டும் சத்தம் கேட்டது. "பட்" என அறைகதவு சாத்தும் சத்தம் கேட்டது. எங்கு இருந்து வருகிறது அந்த சத்தம் என்று தெரியவில்லை யாருக்கும். இவ்வளவு நாள் விடை தெரியாமல் இருந்த கேள்விக் கெல்லாம் இன்று பதில் கிடைக்கும் என அனைவரும் நினைத்தனர்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் கதவில் வெளிச்சம் தோன்றியது. இம்முறை சுவற்றில் அது தாவி சிலநொடிகளில் மறைந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Valarmathi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிbalasubi 2017-11-12 01:12
I'm very interested in the story . I'm eagerly waiting to read the full story . If u are published this as a book I'm ready to buy pls . Pls immediately released the full episode mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-04-21 06:17
Hi Pradi n Lakshmi,
The next episode tentatively scheduled to be published on 5th and 7th May.
Reply | Reply with quote | Quote
# quote name="Valarmathi"XYZ 2017-05-05 12:48
when u ll publish the next episode. i think u took very very long time
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-05-05 13:03
Hi, 11th episode has published on yesterday. Here is the link for next episode www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9126-nizhalai-unnai-thodarum-11?limitstart=0
Reply | Reply with quote | Quote
# https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8469-nizhalai-unnai-thodarum-10?start=3XYZ 2017-05-05 17:20
When u ll publish next episode waiting very eagerly
Reply | Reply with quote | Quote
# https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8469-nizhalai-unnai-thodarum-10?start=3XYZ 2017-05-05 17:21
Ur writing skills simply super :clap: :clap: :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# hi valar mampradi 2017-04-21 00:27
Next episode 18th mail panatha sonenga but episode 10 ku apro next episode show agala
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-04-18 09:38
Hi friends, Innaikku than episode email pannen.. sorry for the delay
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிLakshmi Goutam 2017-04-19 16:49
Hi,
When they will publish the episode
Reply | Reply with quote | Quote
# Full of story of nizhalaai unnai thodarumBalasubi 2017-11-12 01:05
It's fabulous . I'm very interested and excited to see what happend next .bols immediately release the full episode mam pls. I'm eagerly waiting mam. What happened to Anitha . Pls send link of full story mam . If u have published this story as a book . I'm ready to buy . Pls immediately released the full stoey
Reply | Reply with quote | Quote
# So WaitingSamuval Siju 2017-04-17 13:46
yikes
eppa pa 10 episode varum
Reply | Reply with quote | Quote
# nizhalai-unnai-thodarum-10Lakshmi Goutam 2017-04-15 14:33
Hi,

When next episode will come............................
Reply | Reply with quote | Quote
# hi valarmathi,pradi 2017-04-12 23:19
Superb story but romba nalla episode 11 ku wait panren interesting ah padikurapa post pana late panlama pls sekirama next episode post panunga
Reply | Reply with quote | Quote
# nizhalai-unnai-thodarum-10Lakshmi Goutam 2017-04-08 11:08
Hi Valar,
Take care of ur health. Get well soon :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-04-07 13:28
Friends, im not well more than a month... I will email the epi by this weekend.. Team will publish when there is free slot.
Reply | Reply with quote | Quote
# nizhalai-unnai-thodarumLakshmi Goutam 2017-04-07 12:29
Hi,

:no: :no: :no: :no: :no: this is not fair
Reply | Reply with quote | Quote
# WaitingSamuval Siju 2017-04-07 11:54
:Q: guys next episode evlo naal agum
Reply | Reply with quote | Quote
# nizhalai-unnai-thodarumLakshmi Goutam 2017-04-06 10:53
Hi Valar,

Don't take such long time, when u ll publish next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிJayashree A 2017-04-05 16:50
Hi Mam,

Please update the next episode.., im waiting eagerly..,
Reply | Reply with quote | Quote
# https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8469-nizhalai-unnai-thodarum-10?start=3Lakshmi Goutam 2017-04-05 15:14
Dear Valarmathi,

Waiting for next episode, kindly release soon
Reply | Reply with quote | Quote
# Nizhalaai unnai thodarumNarmadha stalin 2017-04-04 13:05
Mam.. next episode eppo?.. we are waiting..
Reply | Reply with quote | Quote
# Very Very NiceSamuval Siju 2017-04-03 08:03
:clap: unmayave sema super story. Inniki dhan padika arambichen full ah padichiten. idhu vara indha mari oru story ah na padichadhe illa. Next episode kaga waiting.
Reply | Reply with quote | Quote
# Nilalai unnai thodarumNarmadhastalin 2017-03-16 15:13
mam..waiting for next episode mam... we want to know who is bhuvana..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிPreethiShankar 2017-03-10 23:45
Why pa last 2 episode ivlo late quick ah next update panungooo....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிAnto 2017-03-01 18:19
Plssss sekiram story update panugaa.....eagerly waitin........!!!!!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிAnto 2017-03-01 10:35
Waitin for the flashback....update it soon valarmathi mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிSharon 2017-02-15 11:41
:o :o :o
En indha kolaveri DD :o
Nit padichu beedhi aagiten.. :yes:
yaarpa idhu Bhuvana ? :Q:
pudhu paei!!!!
Interesting ah poguthu kadhai.. aduthu enavo nu iruku.. Waiting for the next update ji :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-02-20 07:06
:thnkx: CD
Bhuvana tha Thedral.. Athey pei than puthu pei ille pa
Next epi sikiram anupa muyarchi pannaren... Innum edit pannalai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிbalasubi 2017-11-12 01:10
Mam I need the full story of this article really impressed mam . Pls immediately released the full story . If u are published this story as book I'm ready to buy
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிJansi 2017-02-12 05:21
Super epi Valar :hatsoff:

Apadiye kannuku munala nadakira maatiri iruntuchu

Puvanavoda story kedka ready aaiden...seekirama next epi anupi vainga :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-02-13 10:28
:thnkx: Jansi
Sikiram next epi anupa muyarchi pannaren
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிAarthe 2017-02-11 18:49
Pona epi kum saerthu Inga comment panikara ma'am :lol:
Semmmma interesting ah eduthutu poringa ma'am.. :clap:
Apo indha pei thendral ilaiya?
Bhuvana va.. Waiting to know what happened to her :-?
Bhuvana ku Vini naala edhachu ayircho :-?
But avanga vini mela paasam vechirka madhiri theridhu..
Paakalam en guess epdi iruku nu :D
Waiting to read more ma'am ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-02-13 10:24
:thnkx: Aarthe
intha ma'am cut pannidunga pa.. Yetho periyavangala kudipada feel varuthu...
Pei than thendral... Thendral than bhuvana... Ore allukku rendu peru..
Yes Bhuvanakku mela romba pasam...
Next epi ezhuthiten.. innum edit pannala... sikiram edit seithu anupi vaikiren...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிmadhumathi9 2017-02-11 15:18
Hey ivvalavu seekkiram adutha epi koduthatharkku nandri. Super epi waiting to read more. Puthu kathai patri therinthu kolla aavalaga irukkiren.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-02-13 10:20
:thnkx: Madhumathi
Sikiram next epi anupa muyarchi pannaren
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிVasumathi Karunanidhi 2017-02-11 07:21
back to back epi... (y)
superr valar..
waitin to knw abt bhuvana.. 8)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நிழலாய் உன்னை தொடரும்... - 10 - வளர்மதிValarmathi 2017-02-13 10:19
:thnkx: Vasumathi
Next epi le Bhuvana flashback vanthidum
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top