(Reading time: 13 - 25 minutes)

து அவர்களுக்கு பயத்தை எற்படுத்தியது. அங்கே அமர்ந்து இருந்தவள் எழுந்து அக்கட்டத்தை விட்டு நகர்யில் கட்டத்துக்கு வெளியே நெருப்பு வளையம் தோன்றியது. இது அவளை அக்கட்டத்தை நகர விடமால் செய்தது!

“உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. அவளை விடு அப்போ தான் உன்னால் இக்கட்டத்தை விட்டு நகர முடியும்” ரூபனின் அப்பா சொல்ல அது அவரை பார்த்து கத்தியது. “ஏய் என்ன பண்ணற நீ... நீ யார் என்னை தடுக்க? என்னை இங்க இருந்து போகவிடு!”

“உன்னால்தான் ஒரே நேரத்தில் ஒரே உருவத்தில் இரு இடங்களில் இருக்க முடியுமே!. அவர் சொன்னதில் அதற்கு கோவம் வந்ததோ! அதன் பார்வை வினிதாவின் அறை பக்கம் திரும்ப, கட்டிலில் படுத்திருந்த வினிதா அந்தரத்தில் மிதந்தாள்!!!

அதன் பார்வை செல்லும் இடம் முழுக்க வினிதாவும் அந்தரத்தில் மிதந்தாள். ஆனால் அவளிடம் ஒரு அசைவுமில்லை... ப்ரேதம் போல காட்சியளித்த அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்!

அங்கே இருந்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தனர். இந்த இருவரில் யார் வினிதா??? நிஜமும் நிழலும் ஒரே இடத்தில் இருக்க இவர்கள் எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என பதட்டத்தில் இருக்க ரூபனின் அப்பா மட்டும் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தார். அவரின் கணிப்புபடியே அந்தரத்தில் மிதக்கும் வினிதாவின் உடல் பல்கனியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவரின் அருகே இருந்த கிண்ணத்தை எடுத்தார். உள்ளங்கையில் ஊற்றி கண்ணை மூடி ஏதோ படித்து, அந்த தண்ணீரை கட்டத்தில் அமர்ந்து இங்கும் வினிதாவின் மேல் தெளிக்க அந்தரத்தில் இருந்த உருவம் மறைந்தது, கட்டத்தில் அமர்ந்து இருந்த வினிதா மயங்கி சரிய, அவ்விடத்தில் ஓர் உருவம் அமர்ந்து இருந்தது!

ரூபனின் அப்பா மகேனை பார்க்க அவனோ, அங்கே இருக்கும் உருவத்தை பார்க்காமல் மெல்ல நடந்து கட்டத்துக்கு அருகே சென்று வினிதாவை தூக்கி அவளின் அண்ணியின் அருகே படுக்கவைத்தான்.

அதன் பின்னரே கட்டத்தினுள் இருந்த உருவம் அசைந்தது. அதன் கண்கள் புதிதாக ஓர் பெண்ணின் பக்கத்தில் படுத்து இருக்கும் வினிதாவின் மேல்இருந்தது. அதன் உதடு “அம்முக்குட்டி” என வேதனையுடன்அசைந்தது. அது அங்கு இருந்த அனைவருக்கும் கேட்டது.

அதன்பின்னரே அவர்கள் அந்த உருவத்தை பார்த்தனர். அதற்கு முன்புவரை, அவர்களது கண்கள் வினிதாவின் மேலே நிலைத்திருக்க, அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.

எதிரில் இருந்த உருவத்தின் தோற்றம் ஆகோரமாய் இருந்தது. தலை இல்லாத உடலில். அதன் கழுத்து பகுதியில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. உடலின் கீழ்பகுதி முழவதும் எரிந்து கருகி இருந்தது.

அந்த உருவம் சம்மணம் இட்டு அமர்ந்து இருக்க, அதன் மடியில் ஒருதலை இருந்தது! இருவிழிகளும் இரத்தமென சிவந்து இருக்க, பார்வை மட்டும் வினிதாவின் மீது குத்திட்டு நின்றது.

அந்த பார்வையில் இருந்தது என்ன? ஏக்கம், வலி.. மரணவலி !

அவர்கள் அதன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கையில் அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது! அது மீண்டும் “அம்முகுட்டி” என சொல்லி வினிதாவையே ஏக்கமாக பார்த்தது. தலையை திருப்பி வினிதாவின் அறையை பார்த்தது. அந்த கட்டிலில் இருந்த பொம்மை தரையில் விழுந்தது. அது மெல்ல நகர்ந்து அந்த கட்டத்தை நோக்கி வந்து, அந்த பேயின் கைகளுக்கு சென்றடைந்தது. வினிதா வீட்டிலிருக்கும் பெரும்பாலும் நேரம் அந்த பொம்மையுடனே இருப்பாள் என நினைவு வந்தது சித்ராவுக்கும் அனிதாவுக்கும்.

“நீ தென்றல் தானே?” அமுதாவின் குரலில் அதிர்ச்சி. அவளால் நம்ப முடியவில்லை. இவ்வளவு நாள் வினிதாவையும் அந்த வீட்டிலிருந்தவர்களையும் ஆட்டி வைத்தது அவள் என்று!

“.....” அதன் கண்கள் இன்னும் வினிதாவிடம் நிலைத்து இருக்க, அதன் கைகள் அந்த பொம்மையின் தலையை வருடி விட்டது!

“எனக்கு என் அம்மு வேணும்” அதன் குரலில் இருந்த ஏக்கம் அனைவரையும் கேள்வியுடன் அதை பார்க்க வைத்தது.

“தென்றல் உன் அம்மு எங்கே அவள்?” – அமுதா

அதனிடம் பதில்லை!

மீண்டும் அவள் “தென்றல்” என அழைக்க அதன் பார்வை வினிதாவிடமே நிலைத்து இருந்தது... மற்றவர்களின் கேள்விக்கு அது செவி சாய்க்கவில்லை... அவர்கள் ரூபனின் அப்பாவை பார்க்க.. அவரோ பொறுமையாக இருக்கும் படி சைகை செய்தார்.

“வினிதாவை உங்களின் ரூமிற்கு தூக்கிட்டு போங்க” ரூபனின் அப்பா சொல்ல.. அதன் மடியில் உள்ள தலை ரூபனின் அப்பாவை மட்டும் திரும்பி பார்த்து முறைத்தது.

“ஏன்... ஏன்... அவளை உள்ளே தூக்கி செல்ல வேண்டும்?” கேள்விகளுக்கு இடையே பற்களை நற நறவென கடிக்கும் சத்தம் எல்லோருக்குமே கேட்டது.

அதனின் கேள்வியை கண்டுக் கொள்ளாமல் அதனிடம் “உன் பெயர் என்ன” – ரூபனின் அப்பா கேட்க... அதனின் விழிகள் கூர்மையாக அவரை ஊற்று நோக்கி “தென்றல்” என மெல்ல உச்சரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.