எவ்வாறு ‘இவனைக் காதலிக்கிறேன்’ என்று தன்னை நேசிக்கிறானா இல்லையா என்றே தெரியாமல் ஒருவனைக் காட்டிக் கூற முடியும்? எனவேதான் இவ்வாறு சப்பைக் கட்டுக் காரணத்தக் கூறினாள் அவள்.
ப்ரனிஷின் மீதான காதல், திருமணம் என அவள் தவித்துக்கொண்டிருக்க, அவள் மிகவும் எதிர்பார்த்த பதவியுயர்வும் வந்து சேர்ந்தது. அதுவும் இவளை சோர்வடைய செய்தது. சரி, இதனைக் கூறியேனும் நிறுத்தலாம் என்று பார்த்தால், அவள் வீட்டிலும் அவள் எண்ணப்படி எதுவும் நடக்கவில்லை.
காரியங்கள் மளமளவென நடக்க, எவ்வாறு நடக்க இருக்கும் வைபவத்தைத் தடுப்பது என்று யோசித்தவளின் பார்வையின் சஞ்சய் பட்டான். அவனைக் கூர்ந்து கவனிக்கையில் அவன் சரியில்லை எனப் புரிந்துகொண்டவள், அதனையே காரணமாகக் கொண்டு தன் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தாள். அதுவும் கைகொடுக்காததால், இறுதியாக அவள் வீட்டை விட்டு வெளியேறும் முடிவிற்கு வரவேண்டியதாயிற்று. மனமே இல்லாமல் செயல்படுத்தினாள் அந்த திட்டத்தை!! தன் காதலையும் வாழ்வையும் தொலைத்து வாழ்நாள் முழுவதும் வருந்துவதை விட, இது மேல் என்று தோன்ற அதன்படியே சென்றவள் மாட்டிக்கொண்டாள் ப்ரனிஷிடம்.
அவனிடம் எதையும் கூறிப் புரியவைக்க அவகாசம் இல்லாததால் அவள் பிறகு பேசலாம் என்ற எண்ணத்தில் விலக நினைக்க, அவனோ, அவளை அவள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான். என்ன செய்வது என்று ப்ரியா பதறி யோசித்துக்கொண்டிருந்த சமயம், அவள் செவிகளில் விழுந்தது சஞ்சயின் தந்தை கூறிய வாக்கியம்; கூடவே அங்கிருந்தோர்களும் அதே போல பேச, அவள் மூளையில் உதித்தது அந்த யோசனை. தன் காதல் ஒன்றே முக்கியமாகப் பட, இருவரும் காதலர்கள் என்ற பொய்யை உரைத்தாள் அவள் அனைவரிடமும்.
அதன்பின், அனைத்தும் அவள் எண்ணப்படியே நடக்க, அவள் காதலனுடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவனுக்கு எப்படியும் தன் நிலையைப் புரியவைத்து விடலாம் என்ற எண்ணம் இந்த காரிகைக்கு. காதல் ஒருவரைக் கட்டாயப்படுத்தி வருவதில்லை என்பதனை மறந்துவிட்டாள் அவள். பாவம்!!! காதற்பித்து தலைக்கேறிய பேதை!
அவள் மனம் கவர்ந்தவன், மனத்தைப் புரிந்துகொள்வானா? இல்லை கொல்வானா? பார்த்திருப்போம்!!!
தொடரும்
{kunena_discuss:1075}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.