(Reading time: 20 - 39 minutes)

பூஜாவிற்கு, இதெல்லாம் பழக்கமில்லாததால், ஸ்ருதி, ஹெலனா இல்லாததை நினைத்து வருந்தினாள். அவர்கள் இருந்திருந்தாலாவது அவர்களுடன் பேசி கொண்டேனும் நின்றிருக்கலாம்.

இரண்டு பாட்டிற்கு மேல் அங்கு இருக்க முடியாமல்,  பூஜா தனியாக வீட்டிற்க்கு கிளம்ப நினைத்தாள்........ அந்நேரம் சாராவும், அவளது தோழிகளும் கையில் ஆளுக்கொரு மது கோப்பைகளுடன் வந்து பூஜாவின் அருகில் அமர்ந்தனர்.......

“நீ டிரிங்க்ஸ் ஏதும் எடுக்கவில்லையா” என சாரா கேட்க........

“எனக்கு இதெல்லாம் பலக்கமில்லைன்னு உனக்கு தெரியாதா சாரா?

“சாரி மறந்துட்டேன் பூஜா, சாப்ட் ட்ரிங்க்ஸ் ஏதாவது எடுத்து கொள்வது தானே”

“இல்லை நான் வீட்டுக்கு கிளம்பறேன்”

“ஹேய், உன்னோட நண்பரோட பாட்டை பார்க்காம போறியா?

“நண்பரா? யார்”........ என பூஜா கேட்டு முடிக்கு முன்...........

 மூன்றாவதாக இந்தர் ஒரு பாண்டு குழுவுடன் சேர்ந்து மேடை ஏறினான். முந்தைய பாட்டு முடிந்த போது கூட எழாத கைதட்டல் இப்பொழுது எழுந்தது........... அந்த குழுவினருடன் சேர்ந்து ஒரு ராப் பாடல் பாடினான். பூஜாவாலும் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. அந்த பாடலுக்கு அனைவரும் ஆட துவங்கினர்........

அதற்குள் சாராவின் தோழி ஒருத்தி கையில் ஒரு கோப்பையுடன் வந்து வெறும் ஆரஞ்சு கிரஷ்  தான் என கூறி கொடுத்தாள். இவர்கள் நாட்டில் ஆரஞ்சு கிரஸ் லேசாக கசப்பாக இருக்கும், இருந்தாலும் வேண்டாம் என கூறாமல் வாங்கி கொண்டாள் பூஜா.......

அதற்குள் இந்தர் அந்த ஆங்கில பாடலை முடித்து அடுத்து ஒரு தமிழ் பாடல் பாட போவதாக அறிவித்தான்........

இவர்கள் எல்லாம் இதற்க்கு எப்படி ஆடுவார்கள் என நினைத்து ஆச்சரியாமாக பார்த்தாள் பூஜா........

அடுத்து இந்தர் பாடிய தமிழ் பாடலுக்கு அனைவரும் நன்றாகவே ஆடினர்.........  அந்த பாடல் கத்தி படத்தில் வந்த இந்த பாடல் தான்........

Terra Terra TerraByte-ஆ காதல் இருக்கு

நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு

Insta கிராமத்துல வாடி வாழலாம்

நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்

நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்

அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-Share-உ தான்

Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

Let’s take a Selfie புள்ள

Selfie புள்ளஏ ஏ Selfie புள்ள… Selfie புள்ள

அந்த தமிழ் பாட்டில் அதிகம் ஆங்கிலம் இருந்ததால் அனைவரும் ரசித்து நன்றாகவே ஆடினர்..............  எங்கு எதை செய்ய வேண்டும் என நன்றாகவே தெரியுது இந்தருக்கு என நினைத்தபடி அந்த ஆரஞ் கிரஷை கசப்பாக இருந்தாலும் குடித்து முடித்தாள் பூஜா..........

க்ரஷை குடித்து முடித்த சிறிது நேரத்தில் பூஜாவிர்க்கும் அவர்களுடன் இணைந்து நடனமாட வேண்டும் போல் இருந்தது...... சிறு வயதிலிருந்து பரதம் கற்று வந்ததால், அந்த இசைக்கு அவளால் ஆடாமல் இருக்க முடியவில்லை என எண்ணி கொண்டு அவளும் சாராவுடன் இணைந்து ஆட துவங்கினாள். ஆனால் அவள் குடித்த கிரஷ் செய்யும் வேலை இது என்று கூட பூஜாவிற்கு தெரியவில்லை.......

சாராவும் அவளது தோழிகளும் பிரன்ச்  பாஷையில் ( சுவிஸ் நாட்டில் ஜெர்மனி, பிரன்ச், இத்தாலி, மற்றும் ரொமானிஷ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவை நான்குமே அந்நாட்டின் அரசு மொழிகளாக உள்ளன.) தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டனர். நாமும் அம்மா சொன்ன பேச்சை கேட்டு ப்ரஞ்ச வகுப்புக்கு சென்றிருந்தால் இவர்களுடன் சேர்ந்து நாமும் பேசி சிரித்திருக்கலாமே என பூஜா வருந்தினாள், அவர்கள் தன்னை பற்றி தான் பேசி சிரிகிரார்கள் என அறியாமல்....... 

அவர்கள் நாட்டு கலாச்சாரத்தில் இது எல்லாம் சாதாரணம் என்பதால், சாராவின் தோழி ஆரஞ்சு கிரஷில் சிறிது வோட்காவும் கலந்து கொடுத்திருந்தாள். நம்ம பூஜாவிற்கு கேக்கில் லேசாக வைன் கலந்ததிற்கே அப்படி அன்று தூங்கி கொண்டு வந்தாள்........ இன்று வோட்கா என்றால் வேறு மாதிரி ஆயிற்று........

சந்தோஷத்தில் பறப்பது போல் இருந்தது பூஜாவிற்கு. அதில் அவர்களோடு சேர்ந்து நடனமாடுவது மிகவும் நன்றாக இருந்தது....... மேடையிலிருந்து இந்தர் பார்த்து கொண்டிருந்தான் பூஜா நடனமாடுவதை......

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.