(Reading time: 20 - 39 minutes)

து முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் தான பூர்வி” என ஸ்ருதியும் கேட்க ........

“ஆமா, நம் இரண்டாம் வருட மத்தியில் தான் என பூர்வியும் கூறி விட்டு கொஞ்சம் சோகமானாள்.

“என்ன பூர்வி, சத்தம் கம்மியா ஆகிடுச்சு”, என ஹெலனா கேட்க.......

“அக்கா கல்யாணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகுது, இன்னும் ஒன்னும் விசேஷம் இல்லையான்னு, எல்லோரும் கேட்கராங்க, அதிலும் அத்தான், வீட்டில், நாங்களா பொண்ணு பார்த்திருந்தா இப்படி இருக்குமா? நீயா காதல் திருமணம் முடித்தால் தான் இப்படின்னு அவங்க அம்மா பேசாத நாள் இல்லை. அது தான் அக்காவை நினைத்து கொஞ்சம் கஷ்டமா இருக்கு.......

“விடு , விடு, Face book ன்னா மீமீஸ் போடறதும், மாமியார்னா குறை சொல்றதும் காலாகாலமா நடக்கறது தான” என்று சூழ்நிலையை இலகுவாக்க பார்த்தாள் ஸ்ருதி.........

“ஹையோ, போதும் உன்னோட பழமொழி, இதுக்கு அவங்க மாமியார்கிட்ட திட்டே வாங்கிக்கலாம் போல இருக்கு” என ஹெலனா கூற அந்த இடம் கலகலப்பாக மாறியது........

று நாள் ஹெலனா கிளம்பி சென்றதும் வீடே வெறிச் சென்றானது. ஒரு வாரத்தில் பட்டமளிப்பு விழா இருந்ததால், ஸ்ருதியும் , பூர்வியும் என்ன உடை அணிந்து செல்வது என திட்டமிட்டனர்........

பட்டமளிப்பு விழா முடிந்ததும், அடுத்து பிரிவு உபச்சார விழா இருந்ததால் அதில் ஒரு தமிழ் பாட்டு பாட என ஸ்ருதி முடிவெடுத்தாள்.

“என்ன பாட்டு பாடலாம் பூர்வி, நீயே ஒரு பாட்டு தேர்ந்தெடு, நாம் இருவரும் சேர்ந்தது பாடலாம்” என ஸ்ருதி கூறியதற்கு

“அம்மா, தாயே என்னை ஆளை விடு, நீ வேணா தனியா பாடு, இதில் என்னை சேர்க்காத” என பூர்வி அலறினாள்........

ஸ்ருதி எப்பொழுதும் நான்றாக பாடுவாள், ஆனால் அவளுக்கு, கொஞ்சம் மேடை பயம் உண்டு, அதனால் எப்பொழுதும் யாராவது உடன் வந்தால் மட்டும் மேடை ஈறி பாடுவாள்.

பள்ளி நாட்களில் பூர்வியும், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒத்து ஊதி இருக்கிறாள் தான், ஆனால் இங்கு, சான்சே இல்லை.  பிரிவு உபச்சார விழா இவர்களுக்கு மட்டும் கிடையாது. இவர்களுடன் சேர்த்து MBA மாணவர்களுக்கும் தான். அப்படி என்றால், இந்தரும் அங்கு வருவான். அவன் முன்பு இவள் இப்படி ஒத்து ஊதினால் நன்றாகவா இருக்கும்.......

“ஐயோ!!! தனியா மேடையில் பாடுவதா? என்னால முடியாதுப்பா” இம்முறை அலறுவது ஸ்ருதியின் முறையாயிற்று........

“அப்போ பேசாம இரு. அதுவும் இல்லாம, இங்க இந்த கும்பலுக்கு நீ தமிழ் பாட்டு பாடினால், எல்லோரும் தூங்க போய்டுவாங்க......

“இப்படி ஒரு ஸ்ரேயா கோஷல் ஐ பாட விடாம முடக்கிறியே, உனக்கே இது நியாயமா? என ஸ்ருதி, அவளது தனி பாணியில் ஸ்ருதி பிடித்து கொண்டிருந்தாள்......

ஒருவழியாக அவளை பாட வேண்டாம் என சம்மதிக்க வைத்து, எப்படி அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என பேசி முடிவெடுத்து தூங்க சென்றனர்........

ரியாக விழாவிற்கு இரண்டு நாள் முன்பு ஸ்ருதிக்கு, அவளது அண்ணன் அமுதன் போனில் அழைத்தான்.

“என்ன அண்ணா, அண்ணி எப்படி இருக்காங்க, எனக்கெல்லாம் போன் பண்ணனும்ன்னு தோணுதா” என கலாய்க்க ஆரம்பித்தால் ஸ்ருதி........

“அதெல்லாம் பேச நேரம் இல்லடா, உன்னோட பரிட்சை எல்லாம் முடிந்ததா? என படபடப்பாக கேட்டான் அமுதன்........

“ என்ன அண்ணா, ஏன் இப்படி கேட்கற?

“முதலில் கேட்டதற்கு பதில் சொல்லு”

“ஆமா அண்ணா, எல்லாம் முடிந்தது, நாளை மறுநாள் பட்டமளிப்பு விழா, முடிந்ததும் அடுத்த வாரம் விமானத்தில் அங்கு வர்றோம்.

“நீ முதலில் இன்னைக்கே கிளம்பு, உனக்கு நெட்டில், விமான டிக்கெட்டு புக் செய்துட்டேன், உனக்கு மெயில் பண்ணி இருக்கிறேன், அதை ஒரு பிரிண்ட் எடுத்துட்டு கிளம்பு” என அவரச படுத்தினான் அமுதன்........

“ஏன் அண்ணா, ஏதாவது ப்ராப்ளமா?

“ஆமாடா , ஆனா நீ பயப்படாத, அப்பாக்கு, மைல்ட் ஹார்ட் அட்டாக், உன்னை உடனே பார்க்கனும்ன்னு சொல்றாங்க, அதான். நீ டென்ஷன் இல்லாம கிளம்பி வா, அப்பா இப்போ ஸ்டேபிலா தான் இருக்காங்க. வேற எதுவும்  உதவி வேணுமா? விமான நிலையத்திற்கு எப்படி வருவடா” என கேட்டான் அமுதன்........

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அண்ணா, நீ அப்பாவை பார்த்துக்கோ” என கூறி போனை வைத்தாள் ஸ்ருதி.........

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த பூர்வி, “ஸ்ருதி, நீ எல்லாம் பேக் பண்ணு, நான் போய், லைப்ரேரி  பிரிண்டரிலிருந்து, டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வர்றேன். அப்படியே ஏர்போர்ட் போவதற்கு, எதாவது வழி இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்” என கூறி கிளம்பினாள்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.