அந்த பாட்டு முடிந்து அடுத்து வேறு ஒரு குழுவினர் வந்து பாட ஆரம்பித்த பொழுது, ஆண், பெண் ஏன இணைந்து ஆட ஆரம்பித்தனர்...... சாராவும், அவளது தோழிகளும் அவர்களது தோழர்களுடன் இணைந்து ஆட ஆரம்பித்தனர். பூஜா ஒதுங்கி நின்றாள், வகுப்பில் அவ்வளவாக ஆண் நண்பர்களுடன் பேசி பழகி இருக்காததால், அவளால் ஆவ்வாறு யாருடனோ இணைந்து நடனமாட முடியவில்லை.
பூஜா ஓரமாக நின்ற பொழுது, அவள் வகுப்பில் படித்த மாணவன் லியான் அவளிடம் வந்து.......
“கேன் யூ டான்ஸ் வித் மி “ என கேட்டபடி அவளிடம் வந்து கையை நீட்டினான்......
பூஜாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை......
“சாரி, ஐ டோன்ட் நோ திஸ் டைப் ஆப் டான்ஸ்”....... என அவனிடம் மறுத்து சொல்லி கொண்டிருந்தாள்.......
“ஷி வில் டான்ஸ் வித் மி” என்ற இந்தரின் குரல் கேட்டவுடன் தான் பூஜாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது...........
“என்ஜாய்” என கூறி லியானும் விலகி சென்றான்.........
“சரி வா கொஞ்ச நேரம் நடனம் ஆடலாம், அவனிடம் வேறு சொல்லியாச்சு” என இந்தர் ஆட அழைத்த பொழுது........
“எனக்கு இந்த டைப் டான்ஸ் தெரியாதே” என பூஜா மறுத்தாள்.....
“இது என்ன வெறும் பால்ரூம் டான்ஸ் தான, மெதுவாக தான் ஆடுவார்கள், சல்சா என்றால் தான் கொஞ்சம் கஷ்டம். அதுவுமில்லாமல் உன் வகுப்பு மாணவனிடம் வேறு சொல்லியாச்சு, நீ என்னுடன் ஆடுவாய் என்று” என கூறி அழைத்த பொழுது வேறு வழி இல்லாமல் தான் அவனுடன் இணைந்து நடனமாட துவங்கினாள் பூஜா.......
துவங்கிய பின், ஒரு கை அவனுடைய கையுடன் கோர்த்து, மறு கையை அவனது தோள் மீது வைத்த பொழுது பூஜாவிற்க்கே மிகவும் பிடித்து தான் இருந்தது. அதுவும் அவனது மறு கை அவளை சுற்றி வளைத்து பிடித்து அவளுக்கு நடனமாட உதவிய பொழுது எங்கோ பறப்பது போல் உணர்ந்தாள் பூஜா.......
சிறிது நேரத்தில் பூஜா சந்தோஷத்தில் சிரித்து கொண்டே ஆடியதை பார்த்த இந்தர்.......
“எதாவது குடித்தாயா பூஜா” என சந்தேகமாக கேட்டான். அவனுக்கு தெரிந்த பூஜா இப்படி கிடையாது என்று அவனுக்கு தெரியும் தானே....
“ம்ம்ம், என்னோட பிரண்ட் வியான்சா வெறும் ஆரஜ் கிரஸ் தான் குடுத்தா, அதை மட்டும் தான் குடித்தேன், நீங்க தானே சொன்னிங்க ஏறியேடட் ட்ரிங்க்ஸ் குடிக்க கூடாதுன்னு........
அப்பொழுது, அவர்கள் அருகில் ஆடிக்கொண்டிருந்த, வியான்சா அவளது நண்பனிடம், பூஜாவிற்கு வோட்கா கலந்து கொடுத்ததை பிரன்ச் மொழியில் சொல்லி கொண்டிருந்தாள்.
இந்தருக்கு பள்ளியில் இரண்டாவது மொழி பிரன்ச் ஆக இருந்ததால் அவனால் நன்கு புரிந்து கொள்ள முடியும்.......
அதை கேட்ட பின் இந்தருக்கு பூஜாவின் நிலை நன்றாக விளங்கியது...... சரி உறங்கினால் சரியாகி விடுவாள் என எண்ணி அவளை அவளது வீட்டிற்க்கு அழைத்து சென்றான்......
“இன்னும் கொஞ்ச நேரம் நடனமாடி இருக்கலாம்” என பூஜா சொன்னதை கேட்டு புன்னகைத்த இந்தர்.......
“நாளைக்கு இதை சொல்லுவியான்னு தெரியலை”. என கிண்டாலாக கூறினான் இந்தர்........

வீடு சேர்ந்த பொழுது பூஜாவால் காரிலிருந்து இறங்க கூட முடியவில்லை. இந்தர் தான் கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றான். அவளை படுக்கையில் படுக்க வைத்து நிமிருமுன் நடனமாடிய நினைவில் அவனது தோள் சுற்றி கை போட்டு.......
“ப்ளீஸ் ஜித்தூ, என் கூடவே இருங்க, எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு” என பாதி தூக்கத்தில் பூஜா உளறியதை கேட்டு, இந்தருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அவள் தூக்கத்தில் ஜித்தூ என்று செல்லமாக அழைத்தது கேட்டு சந்தோஷத்தில் துள்ளிய மனதை அடக்கி என்ன செய்யலாம் என யோசித்தான். அவளை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லை இந்தருக்கு........
ஹாலுக்கு சென்று பார்த்த பொழுது அங்கு வெறும் டைனிங் டேபிள் மட்டுமே இருந்தது. சரியென படுக்கை அறையிலிருந்த, பூஜா வழக்கமாக படுக்கும் சோபாவில் படுத்தான். நன்கு உறங்கியும் போனான்......
காலையில் வழக்கம் போல் பூஜா கண் விழித்த பொழுது அவளது சோபாவில் இருந்தாள். அதுவும் இந்தருக்கு அருகில்........
நாமும் அங்கே அவர்களோடு...
{kunena_discuss:1103}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.