(Reading time: 18 - 36 minutes)

06. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

வீட்டிற்க்குள் வந்த பூர்வியை, ஹெலனாவின் கோப பார்வை வரவேற்றது......

“என்ன ஹெலனா, கோபமா இருக்க, நான் தான் உங்களுக்கு நோட் எழுதி வைத்து போனேனே, பார்க்கலையா? என பூர்வி கொஞ்சும் குரலில் கேட்க.........

“பார்த்தோம், பார்த்தோம், நீ ஏன் போனை எடுத்துட்டு போகலை? உன்னிடம் பேசலாம்ன்னு ரிங் செய்தா, வீட்டில் அடிக்குது பெல்........ உன்னோட வகுப்பு தோழிக்கு போன் செய்தால், ஸ்விட்ச் ஆப்ன்னு பதில் வருது....... என கோபமாக கேட்டாள் ஹெலனா..........

வந்ததும் அனைத்தயும் தோழிகளிடம், சொல்ல வேண்டும் என்று வந்த பூர்வி, அவர்களின் கோபத்தை பார்த்து, சொல்வதருக்கு இது தகுந்த தருணம் இல்லை என யூகித்து, சொல்லாமல் நிறுத்தினாள்...........நல்ல வேளை, சாராவின் போன் ஸ்விட்ச் ஆப்புன்னு வந்ததை எண்ணி சிறு நிம்மதியும் அடைந்தாள்........ இந்தர் பற்றி பின்பு ஒரு நாள் கூறி கொள்ளலாம், என்று அதை தள்ளி போட்ட பூர்வி அறியவில்லை, அந்த நாள் வரவே போவதில்லை என்று .......

“சாரி, கைஸ், போற அவசரத்தில் போனை எடுக்க மறந்துட்டேன்....... சாரா போன் என்ன ஆச்சுன்னு தெரியலை......... ஆனா ட்ரிப் சூப்பரா இருந்தது....... நான் உங்களையும் எழுப்பினேன், நீங்க ரெண்டு பேரும் தான், எழுத்துக்கவே இல்லை, நான் என்ன செய்யறது சொல்லுங்க? என பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்ட போது, அவர்களும் தான் என்ன கூறுவார்கள்.........

அதன் பின் அம்மா, அக்காவிடம் , ஸ்கைப்பில், வீடியோ chat செய்யும் போது, அம்மா உடன் இருந்ததால், இந்தர் பற்றி அக்காவிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை பூர்வியால்........  மற்ற விஷயங்களை சாதரணமாக பேசி விட்டு படுக்க  போனாள் பூர்வி........

இந்தர் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல், அவனை பற்றி நினைத்தாலே சில் என்ற மேகம் தீண்டுவது போல் தோன்றியது பூர்விக்கு, மேகமா என நீங்கள் கேட்பது புரிகிறது, அவள் தான், அவனை பார்த்த நாளிலிருந்து வானத்தில் அல்லவா உலாவிக் கொண்டிருக்கின்றாள். அவனை ஏன் பிடிக்கிறது, என யோசிக்கையில் அவனிடம் உள்ள எல்லாமே பூர்விக்கு பிடித்தமானதாகவே உள்ளது. அவனிடம் தினமும் பேச வேண்டும் என தோன்றுகிறது....... இந்தரையே நினைத்து தூங்கியும் போனாள் பூர்வி.........

பின் வந்த நாட்களில் தினமும் வகுப்பு முடிந்த பின் , அந்த மரத்தடியில் நிற்பதும், இந்தரை பார்த்து பேசுவதுமாக நன்றாக பொழுது போனது..... இந்தர் பேசிய பேச்சுக்களில் அதிகம் அவன் அம்மாவை பற்றி இருந்தது...... பூர்விக்கு அதுவே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.......

“ஹாய் பூஜா, நாம சேர்ந்து வெளியே போய் ரொம்ப நாள் ஆச்சு, எங்கயாவது வெளியே போகலாமா? என இந்தர் கேட்க.......

“ ம்ம் , எங்க போகலாம்?

“உனக்கு எந்த மாதிரி இடத்திற்கு போகணும் போல் இருக்கு?

“நீங்க அன்னைக்கு பாடினிங்களே, அந்த பாட்டில் வந்தது போல், வெள்ளை மழையில் நனையனும் போல் இருக்கு.......... அப்படி எங்காவது போகலாமா? என பூர்வி கேட்டதற்கு .........

“ கண்டிப்பாடா, இங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் Glacier 3000 ன்னு ஒரு இடம் இருக்கு, அது  Alps Mountain range ல் இருக்கு ....... இந்த அல்ப்ஸ் மலை ஐரோப்பாவில் 1200 Km வரை பரவி உள்ளது...... 

Alpine countries: Austria, France, Germany, Italy, Liechtenstein, Monaco, Slovenia, and Switzerland. இதுல இருக்கும் நாடுகள் எல்லாம் இந்த மலை மீதே அமைந்துள்ளது......

“Glacier 3000 , 3000 M உயரத்தில் இருக்கு........ Snow Sports எல்லாம் நல்லா இருக்கும், போலாமா? நீ கேட்டது போல் வெள்ளை மழை பார்க்கலாம்”....... என அதை பற்றி விளக்கி கூறினான் இந்தரஜித்.......

“ம்ம் ...... ஆனால், இப்போ வேண்டாம். இரண்டு வாரம் கழித்து போகலாமா? என தனது விருப்பத்தை பூர்வி உரைத்த போது........

“ஏன் இரண்டு வாரம் என்ன வேலை இருக்கு உனக்கு.......

“நம்ம லைப்ரேரியில், பார்ட் டைம் வேலை இருக்கே.......

“வார கடைசியில் கூட இருக்கா?

“இல்லை தான், ஆனால் இரண்டு வாரம் கழித்து தான் சாலரி கிடைக்கும்........ போன தடவை டூர் சென்ற பொழுது, நீங்க தான் டிக்கட் எடுத்திங்க, அப்புறம், அந்த குக்கூ கடிகாரம் வேற பரிசு கொடுத்தீங்க, அதனால் இந்த முறை நான் தான் செலவழிப்பேன், உங்களுக்கும் சேர்த்து. அப்பா அனுப்பிய பாக்கெட் மணி இருக்கு, அது பத்தாது. அப்பாவிடம் கேட்டால் அனுப்புவாங்க, ஆனால் அது என்னோட பணமாக இருக்கணும்னு நினைக்கிறன்...... அதனால் ப்ளீஸ்..........

கெஞ்சும் பூஜாவின் முகத்தை பார்த்து எவ்வளவு பிடித்ததோ, அதே போல் அவளது, சுயமரியாதை எண்ணமும் மிகவும் பிடித்தது இந்தருக்கு.......  அதனால் சரி என தலை ஆட்டினான்......

இந்தாரும், அவனுக்கு அப்பா தனியாக, அம்மா தனியாக பணம் அனுப்பினாலும், தேவைக்கு மீறியே அவனிடம் பணம் இருந்தாலும், அவனது சித்தப்பாவின் ஐந்து நட்சத்திர விடுதியில் பகுதி நேர வேலையும் பார்த்து அதில் வரும் பணத்தையே செலவழிப்பான். மீதி பணத்தில் ஊருக்கு செல்லும் பொழுது அப்பா அர்ஜுனுக்கு, விலை உயர்ந்த பிராண்டட் Perfume வாங்கி செல்வான்......

தன்னை போலவே பூஜாவும் இருப்பது, அவனுக்கு மிகுந்த மகிழ்வை அளித்தது........ அதனாலேயே மற்றவர்களிடமிருந்து பூஜா தனியாக தெரிந்தாள், இந்தரஜிதிர்க்கு...........

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.