(Reading time: 18 - 36 minutes)

ஹாய் இந்தர், நான் யுனிவெர்சிட்டி வாசலிக்கு வந்துடரேன், நீங்க என்னை அங்க பிக்கப் பண்ணிக்கோங்க “ என கூறி போனை வைத்தாள் பூர்வி.......

முன் தினமே தோழிகளிடம் கூறி இருந்தால், உள்ளே சென்று அவர்கள் உறங்குவதை தெரிந்து கொண்டு , அவர்களை தொந்தரவு செய்யாமல் கிளம்பினாள்.

யுனிவெர்சிட்டி வாசலில், காரில் ஏறியவுடன், “ஏன் பூஜா இங்க வர சொன்ன? என இந்தர் வினவ ..........

“என் தோழிகளிடம், வகுப்பு தோழிகளுடன் பிக்னிக் போவதாக சொல்லி இருந்தேன், அதனால் தான்......... என அரை குறையாக அவனிடம் கூறினாள்.........

“ஏன் அவங்களுக்கு என்னை தெரியாதா? என ஆச்சரியமாக இந்தர் வினவினான்.........

“ம்ம்ம்....... சொல்லனும், ஆனா எப்பன்னு தான் தெரியலை........ என்னை கேட்கறீங்க, நீங்க வீட்டில் சொல்லிட்டா வந்தீங்க? என பதிலுக்கு பூஜா கேட்க.......

“ஆமா, என்னோட சித்திகிட்ட, பூஜைன்னு ஒரு friend கூட போவதாக சொல்லிட்டு தான் வந்தேன்....... நான் என்னோட சித்திக்கு தெரியாமல் எதுவும் செய்ய மாட்டேன்.......

“ஓகே, நீங்க சித்தி கோண்டுன்னு, ஒத்துக்கறேன் என பூஜா அலுத்து கொண்டாள்.....

“ஹே, அது என்ன கோண்டு? அப்படின்னா என்ன?

“அது என்ன உங்களுக்கு, அப்ப, அப்ப தமிழ் தெரிய மாட்டேங்குது!!!!!! என பூஜா ஆச்சரியபட்டாள்.

அதற்கு பதில் சொல்லாமல், திடீரென நியாபகம் வந்தவனாக, “நீ ஓவர் கோட் எடுத்துட்டு வந்தியா? அங்க ரொம்ப குளிரும், நேத்தே சொல்லனும்ன்னு நெனச்சேன், ஆனா, மறந்து போச்சு” என இந்தர் கூற........

“ம்ம் என்னோட வகுப்பு தோழிகள் சொன்ன்னாங்க, காலையில் நெட்டில் பார்த்தேன், இன்று வானிலை அங்க Glacier மேலே -9  டிகிரி செல்சியஸ்ன்னு, அதனால், உள்ள போட தெர்மல் வேர், அதுக்கு மேல ஸ்வட்டர், அதுக்கு மேல ஓவர் கோட், கையுறை, எல்லாம் பக்கா ரெடியா தான் வந்திருக்கேன் என பூஜா கூற...........

“இங்குள்ள குளிருக்கு யாரும் பைக் ஓட்ட மாட்டங்க, எனக்கு பைக் ஒட்டறதுன்ன ரொம்ப பிடிக்கும். சென்னனயில் என்னோட ஒரு கசின் வாகீஷ் கண்ணா, ராயல் என்பில்ட் வச்சிருக்கான், அங்க போனா அதில் தான் ஒரே ஊர் சுத்துவோம், என கனவில் மிதந்து வந்தான் இந்தர்.........

“நல்ல வேளை, இங்க அப்படின்னா, நான் உங்க கூடவே வந்திருக்க மாட்டேன், என அவனது கனவிற்கு தடை போட்டாள் பூஜா.........

“ஏன் பூஜா, பைக்ன்னா உனக்கு பயமா? என கேள்வி எழுப்பிய  இந்தருக்கு, மால்டிவ்ஸ் கலாசாரத்தில் வளர்ந்த தன்னை பற்றியோ, மால்டிவ்ஸ் பற்றியோ பூஜாவிடம் கூறாதது நினைவில்லாமல் போனது......

அவனுக்கு தமிழ் ஓரளவுக்கு மேல் தெரியாதாது பற்றி பேச்சு வந்த பொழுதெல்லாம், போகும் இடத்தை அடைந்தோ அல்லது பேச்சு வேறு பக்கம் திரும்பியோ போனது..... 

போகும் வழியெல்லாம், எல்லா இடமும் முழுவதும் புல் தரையாக, பச்சை கம்பளம் விரித்து போன்று அழகாக காட்சி அளித்தது...... அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள், அதன் அருகில் சிறு நீரோடைகள் என பார்பதற்க்கே ரம்யமாக இருந்தது........ சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை மொத்தம்  84 லட்சம் மட்டுமே...... அதனால் எங்குமே மக்கள் கூட்டமோ, வாகன நெரிசலோ இல்லை.......

ஒரு வழியாக Glacier 3000 அடிவாரத்தை வந்தடைந்தனர். அங்கு காரை பார்க் செய்து விட்டு , 3000 மீட்டர் உயரத்தில் இருந்த மலை மேல் ஏறுவதற்கு, கேபிள் காருக்கு டிக்கெட் வாங்கி கொண்டு, அதில் வந்து ஏறினர்.......

ஒவ்வொன்றையும் நிதானமாக பூஜாவிற்கு புரியும் வகையில் விளக்கி கூறி கொண்டு வந்தான் இந்தர்...... அந்த கேபிள் காரில் 25 பேர் வரை செல்லும் அளவு பெரியதாக இருந்தது...... அதில் ஏறி பதினைந்தே நிமிடத்தில் மலை உச்சியை அடைந்தனர்........

அந்த cable கார் முழுவதும் கண்ணாடியால் ஆனதாக இருந்தது, அதனால் போகும் வழியெல்லாம் மலை முழுவதும் வெண் பணியால் முடப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது...... மேலே செல்ல, செல்ல குளிரும் அதிகமாக இருந்தது........

மேலே சென்றதும் அங்கு ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது.......அதன் அருகில் Souvenir shop இருந்தது.......... அதில் விற்ற சாமான்களின் விலை தான் மிக அதிகமாக இருந்தது.....

அங்கிருந்த இரு சிகரங்களை இணைபதர்க்கு ஒரு தொங்கும் பாலம் இருந்தது. அந்த பாலம் முழுவதும் பனியாக இருந்தது......ஒரு சிலரே அதில் நடந்து கொண்டிருந்தனர்.......

பூஜா அதில் செல்ல தயங்கிய போது, இந்தர் இது மிக நன்றாக இருக்கும், வானிலை ஓரளவு நன்றாக இருந்தால் மட்டுமே இதில் செல்ல அனுமதிக்கிறார்கள், அதனால் இதில் கண்டிப்பாக செல்ல வேண்டும் என கூறி பூஜாவை அழைத்து சென்றான்.......

NAU

அதில் நடந்து சென்ற போது மிகவும் நன்றாக இருந்தது. அந்த தொங்கு பாலத்தின் நடு வரை சென்ற பின் அங்கிருந்து கீழே பார்த்த போது, பூஜாவிற்கு லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது, சட்டென இந்தர் அவளை தாங்கி பிடித்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.