(Reading time: 18 - 36 minutes)

ருவரும் ஒரு வழியாக அடுத்த மாதத்தில் ஒரு நாள் சனி கிழமையன்று செல்வது என முடிவெடுத்தனர்.........

இம்முறை பூஜாவிற்கு, தனது தோழிகளை அழைக்கவும் தோன்றவில்லை.......... இந்தருடன் தான் மட்டுமே முழு நேரத்தையும் செலவிட விரும்பினாள்............. இந்தருக்கும் அவ்வாறே தோன்றியதால் அவனும் அபிஜித்தை அழைக்கவில்லை.......... அவனை அழைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பான். அபிக்கு snow sports என்றால் மிகவும் பிடிக்கும்......

பயண நேரம் குறைவு தான், ஆனால் அங்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும் , அதனால் காலை சீக்கிரம் கிளம்பல்லாம் என திட்டமிட்டனர்.

வெள்ளி இரவு, அம்மாவிடம் skype ல் வீடியோவில் பேசி கொண்டே, அம்மாவிடம் செய்முறை கேட்டு  சிறிது பால் கோவா கிண்டினாள், அம்மாவிடம் மறு நாள் தனது friends, உடன்  வெண் பனி பார்க்க போவதாக கூறினாள்........ ஆங்கிலம் சில சமயம் நமக்கு சாதகமாக இருக்கிறது, friends என கூறினால், தோழனா, அல்லது தோழியா என கூற தேவை இல்லை, அம்மாவிடம் பொய் உரைக்க தேவையும் இல்லை.

ஏனோ இந்தரை, மனம் ரகசிய சினேகிதனாக, வைத்திருக்கவே விரும்பியது. அந்நேரம் அம்மா, பார்த்து கொண்டிருந்த டிவியில் ஜோதிகா இப்பாடலை பாடி கொண்டிருந்தார்........ அது இங்கு வரை கேட்டது....... நமக்கு வேண்டிய பாடல் என்றால் கேட்க தான் செய்யும்.........

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயில் இறகாக

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே ஒ நெஞ்சே செல்லாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு

தூங்காத காற்றே துணை தேடி ஓடாய்

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

நில்லாத காற்று, சொல்லாது தோழி

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

உள்ளே எண்ணம் அரும்பானது

“என்ன பூர்வி, என்னிடம் பேசாம, என் பின்னால் இருக்க டீவிய பார்த்துட்டு இருக்க? என அவள் மௌனத்தை அம்மா கலைக்க..........

“நல்ல பாட்டு இல்லமா?

“நல்ல பாட்டு தான், அதை விடு, இப்ப என்ன திடீர்ன்னு ஸ்வீட் சமைக்கற?

முன்பு ஒரு நாள்  பேசி கொண்டிருந்த போது, இந்தர் தனக்கு அவங்க அம்மா சம்யுக்தா, செய்யும் பால்கோவா மிக பிடிக்கும் என சொல்லி இருந்தது நினைவு வந்ததால், இன்று இந்த தமயந்தி பாகம் (நள பாகத்திற்கு பெண் பால் ). ஆனால் அம்மாவிடம் “நாளைக்கு friends கூட வெளியில் போவதால்....... அதனால் தான் மா என கூறி முடித்தாள்......

அம்மாவிடம் பேசி முடித்து வந்ததும் அடுத்து  கேள்வி கேட்பது ஸ்ருதியின் முறை ஆனது.........

“என்ன பூர்வி இப்போ எல்லாம் அடிக்கடி காணாம போய்டற? வீட்டுக்கு லேட்டா வர்ற, என்ன தான் பண்ற?

“லைப்ரரி மேம் அவங்களுக்கு, என்னை உதவி செய்ய சொன்னாங்க ஸ்ருதி, அதான் வகுப்பு முடிந்தவுடன் அங்க போய் புத்தகம் அடுக்க உதவி செய்து விட்டு வர லேட் ஆகுது.........

“ம்ம் இப்போ எல்லாம் உனக்கு, எங்களை  கண்ணுக்கே தெரிவது இல்லை. எப்போவும் கிளாஸ் மேட்ஸ் தான், ரூம் மேட்ஸ் மறந்தே போய்டுது உனக்கு........ வார நாட்களில் பார்ப்பது போதாதுன்னு, வீக் என்ட்ஸ்லியும் அவங்களுடனே சுத்தர , நாளைக்கு வேற எதோ பிளான் போல, எங்களிடம் இன்னும் சொல்ல கூட இல்லை, எதாவது மறைக்கரியா எங்களுக்கு தெரியாம? என புலம்பி தீர்த்தாள் ஸ்ருதி...........

“இன்று தான் அவங்க போகலாம்ன்னு முடிவே  பன்னாங்க, அதனால் தான் இன்னும் உங்களுக்கு கூட சொல்லவில்லை. உனக்கே  தெரியும், எனக்கு எல்லா ஊரையும் சுத்தி பார்க்கறது எவ்வளவு பிடிக்கும்ன்னு, அதனால தான் இந்த வாய்ப்புகளை விட மனமில்லை, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ ஸ்ருதி, என கொஞ்சி, கெஞ்சி சமாதான படுத்தினாள் பூர்வி.........

அதன் பின், ஸ்ருதியின் உதவியுடன் ஸ்வீட்டை செய்து முடித்து, சின்ன டப்பாவில் எடுத்து வைத்தாள்,

அதை பார்த்த ஸ்ருதி, “என்ன இவ்வளவு கொஞ்சம் எடுத்துட்டு போற” என சந்தேகமாக கேட்டதற்கு,

“எல்லோருக்கும் இது பிடிக்குமா தெரியலை, அதனால் இவ்வளவு போதும், இன்னொரு டப்பாவில் உள்ளதை நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு சாப்பிடுங்க” என கூறி அவளது சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தாள் பூர்வி.........

று நாள் காலையிலேயே எழுந்து, தலைக்கு ஷாம்பூ பாத் எடுத்து, டிரையரின் உதவியுடன் நன்றாக செட் செய்தாள். பூர்விக்கு மிக பிடித்த லைட் ப்ளு கலரில்  சுடிதார் அணிந்து, அதே வண்ணத்தில் தலைக்கு சிறு கிளிப், Turquoise கல்லில்,  காதணி, சிறு பெண்டேன்ட் சேர்ந்த செய்ன், என அணிந்தாள். சிறு வயதிலிருந்து பூர்விக்கு, தங்கத்தை தவிர வேறு உலோகத்தால் ஆன நகைகள் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் அவளது தாயார் சரோஜினி, குறைந்த எடையில் நான்கைந்து வண்ணத்தில் நகை செய்து கொடுத்துள்ளார். அதில்  Turquoise செட்டை மட்டும் எடுத்து வந்திருந்தாள் பூர்வி......... கைப்பை, செருப்பு முதற்கொண்டு அதே வண்ணத்தில் , கிளம்பி இந்தருக்கு போன் செய்தாள்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.