(Reading time: 18 - 36 minutes)

சாரிடா, உனக்கு Acrophobia வா? உயரம் பார்த்து பயம் வருமா? இப்போ ஓகேவா, கஷ்டமா இருந்தா தூக்கிட்டு போகட்டா என கூறி குறும்பாக சிரித்து கண் சிமிட்டினான்.............

“எனக்கு ஒரு Phobia வும் இல்லை. கிழே ரொம்ப பள்ளமா இருந்ததை பார்த்ததால்  லேசா தலை சுத்துச்சு  அவ்வளவு தான், நீங்க ஓவரா ரியாக்ட் பண்ணாதிங்க...........என கடுப்பானாள் பூஜா.......

“அதுக்கு பேர் தான் Acrophobia , பார் நான் பேச ஆரம்பித்ததும் உன்னோட Phobia போயிடுச்சு, என இந்தர் கூறியவுடன் தான், தனது தலை சுற்றல் நின்றிருப்பது பூஜாவுக்கு புரிந்தது........

இருப்பினும் அதன் பின் அவளது கையை பிடித்தே நடந்தான் இந்தர், பூஜாவும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை........

அதற்கு அடுத்து இரண்டு பேர்  செல்ல கூடிய திறந்த வின்ச்சில் ஐம்பது அடி கிழே சென்றனர். அந்நேரம் பனி மழை பொழிய துவங்கியதால் அதிகமாக குளுரியது, அதனால் இந்தரை சற்று நெருங்கியே அமர வேண்டி இருந்தது.......

NAU

கீழே சென்றதும், அங்கு பனி பேருந்து இருந்தது. அதில் ஏறி ஒரு பெரிய சுற்று போய் வந்தனர்......  அந்த வெண் பனியில் செல்லவே பிரத்யேகமாக தயாரிக்க பட்டிருந்த பேருந்து முழுவதும் கண்ணாடியால் செய்யபட்டிருந்தது....... அதனால் சுற்றி பார்த்துக்கொண்டே வர முடிந்தது........ எங்கு பார்த்தாலும் வெண் பனி தான். அதனால் கண்ணுக்கு குளிர் கண்ணாடி இல்லாமல் கண்ணை திறக்கவே முடியவில்லை.

NAU

சிறிது தூரம் சென்றதும் நாம் இறங்கி அந்த பனியில் நடக்க அனுமதித்தனர்.  எதோ சாமி படங்களில் வருவது போல் வெண் மேக கூட்டத்தின் மேல் நடப்பது போல் இருந்தது......

அந்த பனியை தொட்டு பார்த்த பொழுது நம்ம ஊர் மெரினா பீச்சில் இருக்கும் மணலை தொட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது........ அதை கையில் எடுத்து உருண்டையாக உருட்டிய போது அழகான வெண் பந்தாக மாறியது........ அதை ஒருவர் மேல் ஒருவர் அடித்து விளையாடினோம்.......

அந்நேரம், அப்பா, அம்மா, ஷ்யமளா அக்கா அனைவரையும், மிஸ் செய்தது போல் உணர்ந்தால் பூஜா.........எல்லோரோடும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தாள்.

“எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு யோசனை? என இந்தர், பூஜாவின் யோசனையை கலைதான்...........

“ம்ம்ம்... என்னோட குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன் இந்தர்”.......

“நான் மட்டும் இப்போ கிருஷ்ண பரமாத்மாவா இருந்திருந்தா, கீதையில் சொன்னது போல், நானே அனைவரும், அப்படின்னு ஒரு விஸ்வருப தரிசனம் கொடுத்திருப்பேன், என கூறி புன்னகைத்தான்.........

“நீங்க விஸ்வருப தரிசனம் காட்டா விட்டாலும், உங்க புன்னககையை பார்த்தா, அந்த கிருஷ்ணனோட குறும்பு உங்க கண்ணிலே தெரியுது என கூறி அந்நேரதிற்க்கு அவனால், தனது குடும்பத்தை மறக்க தான் செய்தாள் பூஜா.........  

அந்த இடத்தில ஒரு sports சென்டர் இருந்தது, அதில் பணியில் சறுக்கி விளையாட, fiber ஆல் ஆன பலகை ஒன்றை கொடுத்தனர். ஒருவர் அமரும் அளவே இருந்தது. அதில் அமர்ந்து, அந்த பனியில் சறுக்கி விளையாட மகிழ்ச்சியாக இருந்தது........ சிறு வயதில் சறுக்கு மரம் விளையாடுவோமே அப்படி. அதில் சறுக்கிய பொழுது தனது சிறு வயதிற்கே போனது போல் உணர்ந்தால் பூஜா..........

NAU

அங்கு ஆறு நாய்கள் பூட்டிய வண்டி இருந்தது. அதில் இருவர் அமர்ந்து செல்ல வசதியாக இருந்தது.  சிலர் அதில் சென்றனர்.

NAU

ஆனால் இந்தர் அதில் செல்ல மறுத்துவிட்டான். அந்த நாய்களை கஷ்டபடுத்த கூடாது என கூறிவிட்டான். இந்தர் அந்த நாய்களிடம் காட்டிய கருணை பூஜாவிற்கு மிகவும் பிடித்தது..........

அடுத்து ஸ்னோ ரோலர் கோஸ்டர் என இந்தர் கூறியவுடன் “ஐயோ, நான் வரமாட்டேன், எனக்கு ரொம்ப பயமா இருக்கும், நான் நம்ம ஊர் கண்காட்சிக்கு போனாலே ஜயன்ட் வில்  எல்லாம் ஏற மாட்டேன், அதுவும் இது தலை கீழா எல்லாம் போகும், நான் மாட்டேன் பா” என கூறினாள்.

“ஹேய், இது தலை கீழா எல்லாம் போகாதுடா, வெறும் வளைந்து, வளைந்து மட்டும் போகும். ரொம்ப ஜாலியா இருக்கும். இதை  கண்டிப்பா தவிர்க்க கூடாது என கூறி அவளை இழுத்து சென்றான். அது இருவர் அமர்ந்து செல்ல வசதியாக இருந்தது......

ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து கொண்டனர். பனியின் மேல் ஒரு தண்டவாளத்தின் மீது ரேஸ் கார் போல் இருந்தது. பூஜா முன் புறமாகவும், இந்தர் அதற்கு அடுத்தும் அமர்ந்தனர். முன் புறம் உட்கார பூஜாவிற்கு பயமாக இருந்தாலும், பின்புறம் அமர்பவரே அதை  இயக்கம் விதமாக அமைந்து இருந்ததால், இந்தரே பின் புறம் அமர்ந்தான்.........

NAU

மேலிருந்து அது கீழ் நோக்கி ஓடுவதாக அமைந்து இருந்தது, அதில் வளைந்து, வளைந்து சென்றது. பூஜாவிற்கு மிக பயமாக இருந்தாலும் மிக அருகில் இந்தர் இருந்தது பாதுகாப்பாக உணரவும் முடிந்தது......

சிறு வயதில் கூட்டத்தில் செல்வதென்றாலே பூஜாவிற்கு மிகவும் பயம். அதனால் எப்பொழுதும் பொருட்காட்சிக்கு சென்றால்  அப்பாவின் கையை பிடித்துக் கொண்டே தான் செல்வாள். அப்பொழுது ஏற்பட்ட  ஒரு பாதுகாப்பு உணர்வு இப்பொழுது இந்தரின் அருகிலும் கிடைத்ததை நினைத்து வியப்பாக இருந்தது பூஜாவிற்கு.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.