(Reading time: 18 - 36 minutes)

ந்த விளையாட்டெல்லாம் முடிந்த பின் அங்கிருந்த உணவகத்திற்கு சாப்பிட சென்றனர்......... டிக்கெட் உடன் சாப்பாடிர்க்கும் சேர்த்து பணம் கட்டி இருந்ததால், உணவு Buffet முறையில் இருந்தது. குளிர் பானம் மட்டும் நமக்கு வேண்டியதை வாங்கி கொள்வது போல் இருந்தது.

“உனக்கு என்ன ஜூஸ் பிடிக்கும் பூஜா?

“எனக்கு ஒரு கோக் மட்டும் போதும்”

“எதாவது பழரசம் தான் அருந்த வேண்டும் எபொழுது, கோக் மாதிரி பானத்தில், தண்ணிரில் சர்க்கரை மட்டும் தான் இருக்கும், அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் என்ன பழரசம் வேண்டும்”?, என இந்தர் அக்கறையுடன் கேட்டான்........

“நம்ம ஊரில் என்றால் மாதுளம் பழ ஜூஸ் குடிப்பேன், இங்கு என்ன இருக்கும் , ஆனால் எனக்கு இங்குள்ள ஸ்ட்ராபெரி ஜூஸ் பிடிக்காது. என்னோட தோழிகள் எல்லாம் அது தான் குடிப்பாங்க” என பூஜா உதட்டை  சுழித்தாள்.........

அதை பார்த்ததும், இந்தருக்கு,  ராவணன் படத்தில் வந்த பாடல் தான் நினவுக்கு வந்தது.

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

அதற்கு மேல் அங்கு அமராமல் புன்னகைத்து கொண்டே எழுந்து நடந்தான் , பழரசம் தயாரிக்கும் பகுதியை நோக்கி.

திரும்பி வந்த பொழுது , கையில் இரண்டு கோப்பைகளில் எதோ பழரசத்தோடு வந்து,  பூஜாவின் எதிரில் அமர்ந்தான்.

“ம் குடி, இது ஸ்ட்ராபெரி இல்லை, உனக்கு பிடிக்கும்”.

அந்த பழரசத்தை பார்த்தால், அது வெள்ளை நிறத்தில் இருந்தது.........

“எனக்கு வேண்டாம், இதை பார்த்தல் வெள்ளையாக பால் போல் உள்ளது. எனக்கு பாலே பிடிக்காது, எனக்கு வேண்டாம் ப்ளீஸ் இந்தர்”  என கெஞ்சினாள் பூஜா.......... அத்துடன் உங்க அம்மா கூட சொல்லி இருக்காங்க தான,  யாருக்கும் பிடிப்பதை செய்வதை விட,  அவங்களுக்கு பிடிக்காததை செய்யாமல் இருப்பது உத்தமம்ன்னு........

அவள் கொஞ்சியத்தை அலட்சிய படுத்தி “எதையும் டிரை பண்ணாம வேண்டாம்ன்னு சொல்ல கூடாதுன்னும்  எங்க அம்மா சொல்லி இருக்காங்க,  டிரை பண்ணி பார், பிடிக்கலன்னா, நானே ரெண்டு ஜூசையும் குடித்து கொள்வேன், அதனால் ருசித்து பார்...........

அதற்கு மேல் பிகு செய்யாமல் ஒரு கிளாஸ் எடுத்து குடித்தாள். ஒரு சிப் குடித்தவுடன் மிக அருமையாக இருந்ததை உணர்ந்தாள் பூஜா..........

“வாவ் சூப்பரா இருக்கு, இது என்ன பழத்தில் செய்தது?

“இது லிச்சி பழம். இந்த ஜூஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் உனக்கும் பிடிக்கும்ன்னு ஒரு கெஸ் தான். இது பழமாக சாப்பிடவும் நல்லா இருக்கும்.....

(இந்த ஜூசை தான் 3வது பாகத்தில் பூஜா , இந்தரின் ஷூவில் கொட்டியது )

“உங்களுக்கு பிடிப்பதெல்லாம் எனக்கு பிடிக்கனும்ன்னு இல்லை, சரி அடுத்து என்ன?

“அடுத்து டூயட் தான், வேற என்ன”? என கண்ணில் குறும்பு மின்ன கூறினான் இந்தர்.

“டூயட்ன்னா ரெண்டு பேர் பாடனும், இங்க உங்களுக்கு மட்டும் தான் பாட தெரியும், எனக்கு தெரியாது”. என அவனது குறும்புக்கு பதில் அளித்தாள் பூஜா.....

“உனக்கும் சேர்த்து நானே பாடறேன், ஒன்னும் ப்ராப்ளம் இல்லை”.

“நீங்க பாடுவீங்க, யார் கேட்கறது”?

“அன்னைக்கு காரில் யாரோ ரசித்து  கேட்டுட்டு வந்தாங்களே, அவங்க தான்”......

“உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. அடுத்து என்ன இந்தர்?

“பனி சறுக்கு (snow skiing)  7 கிமீ  மற்றும் 24 கிமீ  இருக்கு , இதில் எதுல போகலாம்?

“என்ன விளையாடறிங்களா? எனக்கு இந்த பனியில் சறுக்க தெரியாது.”

“நோ ப்ராப்ளம், நான் சொல்லி கொடுக்கறேன். இந்தியாவில் எல்லாம் உனக்கு இப்படி சான்ஸ் கிடைக்காது. ரொம்ப நல்லா இருக்கும் , இதுக்காகவே லீவுக்கு இங்க சித்தி வீட்டுக்கு வருவேன்........

“ஸ்கீ போர்டு, ஸ்டிக் எல்லாம் இல்லாம எப்படி?

“இங்க எல்லாம் வாடகைக்கு எடுத்துக்கல்லாம்”.

“சரி நீங்க போய் கொஞ்ச நேரம் சறுக்கிட்டு வாங்க. நான் உங்களுக்காக இங்க காத்திருக்கேன்”

“எதையும் பழகாம வேண்டாம்ன்னு சொல்ல கூடாது பூஜா, சோ நீ வர்ற.

“ஹலோ, உங்களுக்கு மட்டும் தான் அடம் பிடிக்க தெரியுமா? நான் நோன்னு சொன்னா நோ தான்.

அடம் பிடிக்கும் அவள் முகத்தை பார்த்து சின்ன புன்னகையுடன், “ஓகே டா , நான் வெறும் 7 கிமீ மட்டும் போயிட்டு வர்றேன்” என கூறி இந்தர் மட்டும் சென்றான்...........

NAU

பூஜா மேல் தளத்தில் இருந்து,  வேறு சிலருடன் சேர்ந்து  இந்தர் செல்வதை பார்த்து கொண்டிருந்தாள். இந்தர் லாவகமாக பனியில் சறுக்குவதை கண்டு பூஜாவிற்கு வியப்பாக இருந்தது இந்தர்  எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருகின்றானே என்று.........

இந்தர் பனியில் சறுக்கி முடித்து வந்ததும் இருவரும் இல்லம் திரும்பினர்.

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 05

Episode 07

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.