Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 3.80 (10 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 05 - 3.8 out of 5 based on 10 votes

5. மனம் விரும்புதே உன்னை...

Manam Virumbuthe unnai

ஞ்சீவ் அன்று வீடு வந்து சேர இரவு ஏழு மணிக்கு மேல் ஆனது. அவனோடு வந்த பணியாள் போன்ற ஒருவன், பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வர, அவனை தொடர்ந்து அரவிந்த் உள்ளே வந்தான். ஹாலில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்த கீதாவும் காஞ்சனாவும் அதிசயமாக நோக்குவதை கவனித்து விட்டு அவர்களுக்கு ஒரு சிறு கை அசைப்புடன், அந்த பணியாளை பெட்டியை மாடியில் எடுத்து வைக்க சொல்லி அழைத்து சென்றான். பெட்டியை வைத்து விட்டு வந்தவனை வழி அனுப்பி விட்டு, ஹாலில் சென்று அன்னையின் அருகில் அமர்ந்தான் சஞ்சீவ்.

"என்னடா சஞ்சீவ் இது பெட்டி எல்லாம்..." என்றார் காஞ்சனா ஆர்வத்துடன்.

"பூதம் காத்த புதையல் அம்மா..."

"அது சரி அது ஏன் நீ வெளியில் இருந்து வாங்கிட்டு வரணும்... உன் அறையில் இருக்குறது எல்லாமே பூதம் காத்துட்டு இருக்கும் பொருள் தானே...."

"ஆஹா என்ன தவம் செய்திருக்கிறேன் நான்... என்னை ஈன்ற  அன்னையே என்னை பூதம் என்று சொல்ல கேட்பதற்கு......"

அவன் பேரிகை காரன் போல் இழுத்து பேசவும் பெண்கள் இருவரும் சிரித்தனர்.

"விளையாட்டு எல்லாம் இருக்கட்டும்டா... இவ்வளவு நேரம் எங்கே போய் சுத்திட்டு வர? கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம் இல்லை... உங்க அண்ணன் தான் லேட்டா வர்றான்... நீயாவது ஒரு அஞ்சு மணி மாதிரி வீட்டுக்கு வரலாம் இல்லை..."

"மன்னியுங்கள் தாயே.... இனி மேல் நான் தினமும் தாமதமாக தான் வருவேன்...."

"ஏன் அத்தை சென்னையிலே வெயில் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு போல இருக்கே?" என்றாள் கீதா கிண்டலாக.

"வெயில் ஜாஸ்தி ஆகலை அண்ணி... எனக்கு தான் பொறுப்புணர்ச்சி ஜாஸ்தி ஆயிடுச்சு..." என்றான் சஞ்சீவ் தன் விளையாட்டு பேச்சை விட்டு விட்டு.

"இதுக்கு வெயில் ஜாஸ்தி ஆனாலே பரவாயில்லை போல இருக்கே..." என்று காஞ்சனா சொல்லும் போதே இடையிட்டு..

"அம்மா விளையாட்டு எல்லாம் அப்புறம்... எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒரு பெரிய உதவி செய்யனும்.... வந்து இந்த ஹாஸ்பிட்டல் விஷயம் தான்.... உங்களுக்கே தெரியும் அந்த ஹாஸ்பிட்டல்ல அஞ்சு மாடி இருக்கு... ஆனால் அவுட் பேஷண்ட்ஸ் பார்க்கிறது கிழேயும் முதல் மாடிலேயும் தான். நம்ம ஹாஸ்பிட்டல்ல நிறைய ஸ்பேஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... அதனால பேஷண்ட்ஸ் எண்ணிக்கையும் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அப்போ அங்கே சில சமயம் வர நோயாளிங்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்க மாட்டேங்குது.... சோ கொஞ்சம் ஹாஸ்பிட்டல் லேயவுட் பார்த்து ஏதாவது மாறுதல் செஞ்சா இதை அவாயிட் பண்ண முடியுமான்னு பார்க்கனும்..... எனக்கு கொஞ்சம் ஐடியாஸ் இருக்கு... நீங்களும் பார்த்து உங்களுக்கு தோன்றுகிற ஐடியாஸ் சொன்னால்... எது நல்ல ஐடியாவோ அதை செய்யலாம்....."        

காஞ்சனா ஆச்சர்யத்தில் பேச்சிழந்து இருக்க, கீதா பேசினாள்,
"இந்த விஷயத்தில் என்னை விட அத்தை தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும் சஞ்சீவ்... இந்த வீட்டிலேயும் தோட்டத்திலேயும் ஒவ்வொன்னையும் எப்படி கவனமா பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க பார்த்தீங்க இல்லை... அந்த லேயவுட்ட அத்தைக் கிட்ட கொடுங்க அவங்க நல்ல சூப்பரா ஐடியாஸ் கொடுப்பாங்க....."

ஞ்சீவ் சந்தோஷத்துடன் தலை அசைத்துவிட்டு வரைபடத்தை எடுக்க மாடிக்கு சென்றான். கீதா இரவு உணவு தயார் செய்வதாக சொல்லி விட்டு சமையல் அறை சென்றாள். காஞ்சனாவிடம் வரைபடத்தை கொடுத்து விட்டு, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் அளித்து விட்டு, அண்ணியை பார்க்க சமையல் அறைக்கே வந்தான் சஞ்சீவ்.

"என்ன அண்ணி, கலா எங்கே? நீங்க மட்டும் தனியா சமையல் செஞ்சுட்டு இருக்கீங்க? அண்ணா பார்த்தால் அவ்வளவு தான் ரத்தக் கண்ணீர் வடிப்பான்...  "

"கலாக்கு நாளைக்கு காலையில ஒரு இண்டர்வியு இருக்கு, அதனால நான் தான் போய் ப்ரிபேர் பண்ண சொன்னேன்.... அப்புறம் என்ன சஞ்சீவ் உங்க கிளாஸ் எல்லாம் எப்படி போச்சு?" சப்பாத்தி சுட்டபடி கேட்டாள் கீதா.

"என்ன அண்ணி... நானே போதி மரத்துக்கு கிழே உட்கார்ந்து எழுந்து வந்த மாதிரி பேசிட்டு இருக்கேன்.. அதிலேயே உங்களுக்கு புரிஞ்சிருக்கனுமே..."

"ஓரளவுக்கு புரியுது... இருந்தாலும்... அப்படி என்ன இந்து உங்க கிட்ட புதுசா சொன்னாள்?"

"உங்க பிரென்ட் நிறைய எல்லாம் பேசலை.. ஷார்ட் அண்ட் சிம்பிளா முடிச்சுட்டாங்க... என்ன பிசினஸ் செஞ்சாலும் அதை தெரிஞ்சு செய்யனும்னு சொன்னாங்க.. ஆர்வத்தோட எடுத்து செய்யனும்னு சொன்னாங்க...."

"ஓஹோ! இதை எல்லாம் வேற யாரும் உங்க கிட்ட சொல்லலையா என்ன?" என்றாள் கீதா கிண்டலாக.

"தெரியும் அண்ணி வீட்டில நீங்க எல்லோரும் கூட இதையே தான் எப்போதும் சொல்வீங்க....." என்று இழுத்தான் சஞ்சீவ்...

"அப்புறம்...????"

"இதெல்லாம் எங்க தலைவி சிம்ரன் சொல்லி கொடுத்தது அண்ணி......"

கீதா நிஜமாகவே புரியாது பார்க்கவும்...

"சிம்ரன் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைய விட தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைய தான் ரொம்ப பிடிக்கும்..."

ஒரு நிமிடம் திகைத்து நின்ற கீதா, கலீரென சிரித்தாள்.

"அது சரி இந்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்???" என்றாள் சிறிது ஆர்வத்துடன்.

"அவங்க முதல் முறை பார்த்ததோட சரி.. அப்புறம் என்னை பார்த்தால் பேசவே மாட்டேங்குறாங்க... சரி கொஞ்சம் மக்கு மாதிரி வேஷம் போட்டு பேசி பார்க்கலாமேன்னு நினைச்சேன்...."

"ஓஹோ! உங்களுக்கு விளையாட இந்து தான் கிடைச்சாளா? அது போகட்டும் இந்து உங்களை ஒழுங்கா ட்ரீட் பண்ணினாளா? நல்லா பேசினாளா?"

அண்ணியிடம் எதை எல்லாம் சொல்வது என்று எண்ணமிட்டவாறே,
"ம்ம்ம்... பின்ன உங்க recommendation இல்லை சும்மாவா? அவங்க ஆபீஸ் conference ரூமில வச்சு பேசினாங்க..."

"ஒ! காபி டே எப்போ இந்துவோட conference ரூமா மாறிச்சு? அதிசயமா இருக்கே......"

ஒரு வினாடி திகைத்த சஞ்சீவ், அதற்குள் புரிந்துக் கொண்டவனாய்,
" உங்களுக்கு அதுக்குள்ளே லேட்டஸ்ட் நியூஸ் வந்தாச்சு போல இருக்கே.... இதை கூடவா உங்க பிரென்ட் ஒப்பிப் பாங்க?"

"இதில மறைக்க எதுவும் இல்லைன்னு இந்து நினைச்சிருக்கலாம்... நிஜமாகவே மறைக்க என்ன இருக்கு?"

"ஒன்னும் இல்லை தான்.....மை காட்... இது எல்லாம் உங்க வேலை தானே? நீங்க சொன்னதை அப்படியே இந்து செஞ்சாங்க?" என்றான் ஏமாற்றத்துடன்.

அவன் குரலில் இருந்த ஏமாற்றத்தை கவனிக்காதது போல் பாவித்து,

"அப்படி சொல்ல முடியாது... கொஞ்சம் நேரம் ஒதுக்கி தனியா பேச சொன்னேன்... காபி டே எல்லாம் என் ஐடியா இல்லை..."

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 05Admin 2012-03-21 18:57
Hey Aadhi,
Guess "Janagi devi raamanai thedi" will also be an apt sitaution song for this episode :lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 05Anusha Chillzee 2012-03-16 20:52
Very true Vinodarshini :-)

A very different romatic story that emphasizes friendship.

Nice read Aadhi :roll:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 05Nanthini 2012-03-16 20:05
Good one!

Made me feel jealous reading those 3 friends. Good story keep it up Aadhi!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top