Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.14 (7 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 06 - 4.1 out of 5 based on 7 votes

6. மனம் விரும்புதே உன்னை...

Manam virumbuthe unnai

காலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்த ராஜீவ் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏதோ என்ன... கீதா முக்கியமாக ஏதோ பேச வேண்டும் என்று சொன்னது தான்... அவனுக்கு காலையில் குடிக்க காபி கொண்டு வந்து கொடுத்த போது, கீதா முகத்தில் கோபத்தின் ரேகை எதுவும் இல்லை. இருந்தாலும் அவள் என்ன சொல்ல விரும்பினாள் என்று கேட்டு இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றியது. இதே சிந்தனையில் இருந்தால் அலுவலகம் சென்றாலும் முழு மனதுடன் பணியில் ஈடு பட முடியாது என்பதை உணர்ந்தவன், தன் கை பேசியை எடுத்து தன் காரியதரிசியுடன் பேசினான். அன்று ஒன்பது மணிக்கு நடப்பதாக இருந்த மீட்டிங் அவனுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல. எனவே அதில் தான் கலந்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டு மனைவியை தேடி சென்றான்.

அவன் வந்த போது காலை உணவு வேலையை முடித்து விட்டு கீதா அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தாள். அவளருகில் சென்று அமர்ந்தவன்,

"கீதா, சாரி...."

சுவாரசியமாக எதையோ படித்துக் கொண்டிருந்தவள், கணவனின் குரல் கேட்ட பின் தான் அவனை கவனித்தாள்.

"சாரியா??? ஏன் என்ன ஆச்சு?" என்றாள் குழப்பத்துடன்.

"இல்லை நீ என்கிட்டே எதுவோ முக்கியமா பேசனும்னு சொன்னியே.... சாரி... இன்னைக்கு நான் லேட்டா தான் ஆபீஸ் போக போறேன்... இப்போ சொல் என்ன விஷயம்..."

கீதா ஒரு வினாடி யோசித்தாள். இங்கே அமர்ந்து இந்த விஷயம் பேசுவது சரி இல்லை என்று தோன்றியது. எனவே,

"தேங்க்ஸ் ராஜீவ், இங்கே பேச வேண்டாம்... மாடியிலே நம்ம ரூமில பேசலாம்... நீங்க போங்க நான் கலா கிட்ட சொல்லிட்டு வரேன்..."

சொன்னது போல்,  காஞ்சனா வந்தால் தனக்காக காத்திருக்காது உணவு அருந்த சொல்லுமாறு சொல்லி விட்டு மாடிக்கு சென்றாள்.

தங்கள் அறையில் இருந்த சோபாவில் கணவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவளை நேராக பார்த்த ராஜீவ்,
"உனக்கு என் மேல கோபம் இல்லையா?"

"கோபமா எதுக்கு?"

"இல்லை நீயும் வீணாவும் ஏதோ பேசிட்டு இருந்தீங்களே... ஏதாவது முக்கியமான விஷயமா? வீணாக்கு நான் வேணும்னா போன் போட்டு சாரி சொல்லவா?"

அவனை கண்டு முறுவலித கீதா,
"நீங்க இதை பத்தி யோசிக்கவே வேண்டாம்.... வீணா ஒன்னும் சின்ன குழந்தை இல்லை... இதுக்கு எல்லாம் கோபப் பட மாட்டாள்..... ஆனால்...." என்று இழுத்தாள்.

"என்ன ஆனால்...."

"வந்து... அடுத்து என்னை பார்க்கும் போது கேலி பண்ணி உயிரை எடுப்பாள்... அவ்வளவு தான்....."

"ஓ! சரி வீணாவை விடு..... உனக்கு கோபம் இல்லையா? என்கிட்டே ஏதோ பேசனும்னு நீ சொல்லிட்டு இருந்தப்போ என்னன்னு கூட நான் கேட்காமல்...."

அவன் சொல்ல வருவதை அறிந்தவளாய் இடையிட்டு,

"ஹே லூசு... எதுக்கு இவ்வளவு பீல் பண்ற? நான் என்ன வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லும் போதா நீ என்னை தூக்கிட்டு போன? எனக்கே சொல்ல வந்தது எல்லாம் மறந்து போச்சு தெரியுமா..." என்று மையலுடன் அவனை நோக்கினாள்.

தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் தனிமையில், சில சமயம் இப்படி செல்லம் கொஞ்சி கொள்வது அவர்களுக்கு வாடிக்கை தான்.

னதில் இருந்த கவலை பெரிதும் இறங்கி விட, அவளருகில் நகர்ந்து, அவளை இறுக்க அணைத்தான்.
"இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு...... ஆனால் இந்த மாதிரி லுக் எல்லாம் இப்போ வேண்டாம்... நான் ஆபீஸ்க்கு போகனும் ... சரி இப்போ சொல்லு அது என்ன விஷயம்......?"

"ராஜ் இது சஞ்சீவ் பத்தின விஷயம்... வந்து... உங்களுக்கு தெரியும் தானே அத்தை அவருக்கு அவங்க தம்பி மகளை கல்யாணம் பண்ணி வைக்கனும்னு விரும்புறாங்க..."

"ஆமாம்... தெரியும்.... கண்மணி ரொம்ப நல்ல பொண்ணு... சஞ்சீவுக்கு ஏத்த ஜோடின்னு கூட சொல்லலாம்....."

கீதாவின் முகத்தில் தயக்கத்தை காணவும்,

"என்னடா, இதில என்ன அப்படி முக்கியமான விஷயம்?" என்று கேட்டான்.

"வந்து ராஜ், சஞ்சீவுக்கு தான் இதில் விருப்பம் இல்லையே......"

"ம்ம்ம்ம் அவன் அப்படி தான் சொல்லிட்டு இருக்கான் பார்ப்போம்... ஆனால் இது இல்லை நீ பேச வந்த விஷயம் வேற எதுவோ... அது என்ன சொல்லு...."

"சஞ்சீவ் வேற ஒரு பொண்ணை லவ் பண்றாருன்னு நினைக்கிறேன்......."

"ஓஹோ! அது தானே பார்த்தேன் எப்படிடா சார் கிட்ட இவ்வளவு திடீர் மாற்றம்ன்னு.... அது சரி அந்த பொண்ணு யார்ன்னு உனக்கு தெரியுமா கண்ணம்மா....."

"ம்ம்ம்ம்..... வந்து... இது எல்லாம் என்னோட ஊகம்... சஞ்சீவ் காதலிக்கிறது... இந்த பொண்ணு...."

சொல்லாமல் இழுத்தவளை அதிசயமாக பார்த்தவன்,
"என்கிட்டே சொல்ல என்னடா உனக்கு இவ்வளவு தயக்கம், சீக்கிரம் சொல்லு...."

"அந்த பொண்ணு வேற யாரும் இல்லை இந்து தான்...."

சொல்லிவிட்டு கணவனின் முகத்தை ஆவலுடன் பார்த்தாள் கீதா. ராஜீவ் விசில் அடித்தான்.   

"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை தான்... அது தானா சார் இந்து பத்தி என்கிட்டே அவ்வளவு கேட்டாரு....."

"என்னங்க கேட்டாரு?"

"அவன் எதுவும் ஸ்பெசிபிக்கா கேட்கலை, பொதுவா பேசுற மாதிரி பேசி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டான்..."

"எல்லா விஷயமும்?????"

"இந்துவோட நின்னு போன கல்யாணம், நந்தினி பத்தி... இப்படி எல்லாம்...."

"ஓஹோ..."

"அது இருக்கட்டும், இந்துக்கு சஞ்சீவ் மேல இன்டெரெஸ்ட் இருக்கா?"

"அவள் அப்படி எதுவும் சொல்லலை ஆனால் எனக்கு என்னவோ அவளுக்கும் சஞ்சீவை பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்......"

"குட் டார்லிங்... அப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கணுமே....?"  

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# LovelyKiruthika 2016-08-08 16:42
Nice Flow ... Looking for ward
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06hills7 2014-09-28 10:50
nice update
Reply | Reply with quote | Quote
+1 # Chandra.echandra.e 2012-09-05 13:16
so nice ;-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06Thenmozhi 2012-04-06 01:53 Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06Thenmozhi 2012-04-05 18:53
Sorry guys, there's a slight delay in publishing the next episode. Will try to publish it by next wednesday...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06Kalai 2012-03-28 21:23
Really a nice story Aadhi.

Hope the three friends will stay as friends till the end of the story :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06Suji 2012-03-22 18:07
:lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 06Nanthini 2012-03-22 01:55
En aadhi kathai mudiya poguthaa enna? Athukulle amma kandu pidichittaanga?
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top