Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

Pin It

16. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

 

ருணாவும் கற்பகமும் கிளம்பி சென்ற உடன், சாந்தி அரவிந்தை பார்க்க சென்றாள். அவன் அப்போதும் மருந்தின் சக்தியினால் உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் அருகில் அமர்ந்திருந்தவள், தனக்கு உதவிய நர்சுக்கு நன்றி சொல்லி வரலாம் என்று எழுந்து வெளியில் வந்தாள். நர்ஸ் கோமதி அவளை புன்னகையோடு எதிர் கொண்டாள்.


"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். நீங்க ஹெல்ப் பண்ணி இருக்கலைன்னால் அத்தை சாப்பிட போய் இருக்கவே மாட்டாங்க.."

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.. பேஷண்ட்ஸ கவனிச்சுக்க தானே நான் இருக்கேன்....  "

கோமதி அன்று சிறிது சோர்ந்திருப்பது போல் தோன்றவும்,

"ஏன் சிஸ்டர்.. இன்னைக்கு ரொம்ப வேலையா? ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?"

சாந்தியை ஆச்சர்யத்தோடு பார்த்த கோமதி, ஆம் என்பது போல் தலை அசைத்தாள். பின்

"இன்னைக்கு ஒரு அக்சிடென்ட் கேஸ்... இந்த ஐ சி யூ வார்டில இருந்தாலே இப்படி தான்... நிறைய கிரிடிகல் கேஸ் பார்க்க வேண்டி இருக்கும்... சில சமயம் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும்.. இன்னைக்கும் அப்படி தான் ஒரு சின்ன குழந்தை... ரோட்ல விளையாடிட்டு இருக்கும் போது லாரி அடிச்சுடுச்சு... இன்னும் கிரிடிகல் தான்... "

"அடடா.. பாவம்... "

"ம்ம்ம்.... குழந்தையோட அப்பா இல்லை போல இருக்கு... ஒரே குழந்தை... அவங்க அம்மா அழுறதை பார்க்கவே பாவமா இருக்கு... ஐ சி யூ ல வச்சு பார்க்கனும்னா எவ்வளவு செலவு பாவம்......"

""என்ன செலவு???? என்ன பாவம்???" என்ற ஆண் குரலில் இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.

பிரசன்னா நின்றிருந்தான்...

"சாரி... ஒட்டு கேட்கனும்ன்னு நினைக்கலை.. உங்க பேச்சு காதில விழுந்தது...."

"சாரி சார்... இங்க ஒரு சின்ன குழந்தை அட்மிட் ஆகி இருக்கு.. அதை பத்தி சொல்லிட்டு இருந்தேன்.." என்றாள் கோமதி சிறிது பதற்றத்துடன். பிரசன்னா தலைமை மருத்துவரின் தோழன் என்பது அவள் அறிந்தது தானே.

"சிஸ்டர்.. கூல் டௌன்... நான் உங்க டாக்டர் கிட்ட எதுவும் சொல்ல போறதில்லை.. என்ன விஷயம்னு சொல்லுங்க...."

கோமதி சுருக்கமாக அன்று அனுமதிக்க பட்ட அந்த குழந்தையை பற்றி சொன்னாள். பிரசன்னா கேட்ட படி யோசனையுடன் நின்றான். இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்த படி நின்ற சாந்தி, மீண்டும் அரவிந்திடம் செல்ல எண்ணி திரும்பினாள்.

"என்னங்க... உங்க ஹஸ்பன்ட் எப்படி இருக்காருன்னு கேட்க தான் வந்தேன்... ஒன்னும் பேசாமல் போறீங்க...."

நின்று அவனை பார்த்த சாந்தி,
"ஒ! சாரி..... நீங்க வேற ஏதோ விஷயமா வந்து இருக்கீங்கன்னு நினைச்சேன்.... அவருக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை... இன்னும் ஒரு வாரத்தில நார்மல் வார்டு போகலாம்னு டாக்டர் சொல்லி இருக்கார்..."

"குட்... அவரை பார்க்கலாம்னு நினைச்சேன்... நீங்க இங்க இருக்கிறதை பார்த்தால் அவர் இப்போ தூங்கிட்டு இருக்காரோ?"

ஆம் என்பதை போல் தலை அசைத்தவள், கோமதியிடம் திரும்பி,
"அவருக்கு ஞாபகம் வர இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும் இல்லை சிஸ்டர்?"

"ஆமாம் 10-15 மினிட்ஸ் ஆகும்..."

"ஒ! எனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு... உங்க ஹஸ்பன்டுக்கு எப்படி இருக்குன்னு கேட்டுட்டு பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்... சரி பரவாயில்லை நெக்ஸ்ட் டைம் மீட் பண்றேன்... வரேங்க...."

வன் செல்வதை பார்த்துவிட்டு, கோமதி சொன்னாள்,

"ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்... இவரும் டாக்டர் சிவாவும் ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ்..."

"நீங்க எதுவும் தப்பா சொல்லலையே... அதை விடுங்க.... உங்களுக்கு எத்தனை குழந்தைங்க..."

"இன்னும் ரெண்டு வருஷத்திற்கு அதையெல்லாம் யோசிக்கவே முடியாதுங்க... என்னோட கணவருக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்க... அவங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் குழந்தை குட்டி எல்லாம்.... ஒரு தங்கச்சிக்கு இன்னும் மூணு மாசத்தில கல்யாணம்..."

இதற்கு தங்கைகளின் திருமணம் முடிந்த பின் அண்ணன் திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என தோன்றியது சாந்திக்கு. அனால் அது கோமதியின் சொந்த விஷயம் என்று ஏதும் கேட்காது புன்னகை மட்டும் பதிலாய் தந்தாள்.

அவளை நேராக பார்த்து விட்டு,
"பரவாயில்லை நீங்க ரொம்ப இங்கிதம் பார்க்கீறீங்க... மனசில என்ன நினைச்சீங்க? அப்புறம் ஏன் அவர் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கிட்டார்னு தானே?"

சாந்தி திகைத்து பார்க்கும் போதே கோமதி தொடர்ந்தாள்,
"அவருக்கு இந்த ரெண்டு தங்கச்சி மட்டும் இல்லை ஒரு அக்காவும் இருந்தாங்க... எங்க கல்யாணத்திற்கு கொடுத்த பணத்தை வச்சு தான் அவங்களுக்கு கல்யாணம் நடந்தது... இதை எல்லாம் அவர் என்கிட்டே முன்னாடியே சொல்லிட்டார்... எனக்கும் யாரும் இல்லை... வளர்ந்தது எல்லாம் அம்மாவோட தங்கச்சி சித்தி வீட்டிலும் ஹாஸ்டலையும் தான்..."

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை கதைகள், திருப்பங்கள், சந்தோஷங்கள், தோல்விகள்....

"உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா? இன்னும் குழந்தைங்க இல்லையா?"

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள், கோமதியின் கேள்வியில் முதலில் அதிர்ச்சியுற்று, பின் வெகு நாளுக்கு பின் மனம் விட்டு சிரித்தாள்.

"ஹலோ.... எங்களுக்கு எட்டு வயசில ஒரு பொண்ணு இருக்கா... அவள் இங்க அவங்க அப்பாவை பார்க்க வந்த அன்னைக்கு நீங்க இல்லை....   "

"சாரி" என்று சிறிது அசடு வழிந்துவிட்டு,
"உங்களை பார்த்தால் அப்படி தான் இருக்கு" என்று கூசாமல் ஐஸ் வைத்தால் கோமதி.

"சரி சரி.... இதை நான் காம்ப்ளிமேன்ட்டா எடுத்துக்கிறேன்..."

கோமதியின் மேஜையில் இருந்த அலாரம் அலறியது.

"உங்க கணவருக்கு மருந்து கொடுக்கனும்... வாங்க போகலாம்.... அதிசயமா இன்னைக்கு கொஞ்சம் நேரம் பிரேக் கிடைச்சது... உங்க கிட்ட பேசிட்டு இருந்தது ரொம்ப நல்லா இருந்துச்சு..."

ருவருமாக, அரவிந்தின் அறைக்கு சென்றார்கள். கோமதி, அரவிந்திற்கு டெம்ப்பரேச்சர் பார்த்து விட்டு, அந்த நேரத்திற்கு போட வேண்டிய ஊசியை போட்டு விட்டு, அதை அங்கிருத்த தாளில் குறிப்பு எழுதி விட்டு, சாந்தியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: புயலுக்கு பின் - 16Nanthini 2012-04-30 20:51
Sorry guys... I have been not able to complete the next part on time :sad:

Working on it, will post it very soon...
Reply | Reply with quote | Quote
+2 # RE: புயலுக்கு பின் - 16Anusha Chillzee 2012-04-04 03:10
Good to read a story that's not just another romantic story!

Ippo ellam romba over dose of romantic stories aayiduchu!
Reply | Reply with quote | Quote
-3 # RE: புயலுக்கு பின் - 16Vijaya 2012-03-28 18:32
It's more like TV serial now ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புயலுக்கு பின் - 16Vignesh 2012-03-29 04:48
Come on don't compare this with any of those junk serials. This story is 100% better than those crying serials.

Quoting Vijaya:
It's more like TV serial now ;-)
Reply | Reply with quote | Quote
# RE: புயலுக்கு பின் - 16Nanthini 2012-03-30 05:15
That's ok... We have 'n' number of TV channels with 'n' number of mega serials... So can't help it :)
Reply | Reply with quote | Quote
-1 # RE: புயலுக்கு பின் - 16Thenmozhi 2012-04-01 08:33
No Vino! I can't remember a single serial which can handle this type of a story without loads and tons of tears!

You have made it more interesting and practical. There is no meaning in sitting and crying.

I really like the way you have developed your heroine (Shanthi) character. She is loving, caring, affectionate and also sensitive. Ofcourse loses her sense a bit when the hero is around :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: புயலுக்கு பின் - 16Mangala 2012-03-28 17:45
Interesting story Vinodarshini.

But wonder why you give so much importance to Prasanna, Gomathi etc. Are they also going to be involved in the story for long????/
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top