Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 07 - 5.0 out of 5 based on 6 votes

7. மனம் விரும்புதே உன்னை...

மூன்று தோழிகளும் நேரில் சந்தித்து சில நாட்கள் ஆகி இருந்தன. ரோஷினிக்கு உடல் நலம் சரியில்லை என வீணாவும், அலுவலகத்தில் புதிதாக பெற்றிருந்த டீலினால் இந்துவும் மும்முரமாக இருந்ததால் வழக்கமாக நடக்கும் வார ஒரு முறை சந்திப்பு தள்ளி போய் கொண்டிருந்தது.  ரோஷினி தேறி மீண்டும் முன்பு போல் விளையாட தொடங்கி விட்டதால் இந்த வாரம் வெள்ளி கிழமை சந்திப்பதென மூவரும் முடிவு செய்து வைத்திருந்தனர். கீதா ராஜீவின் இரண்டாம் திருமண   நாள், ஒரு வாரத்தில் வர இருந்ததால், கீதாவுக்கு சில சேலைகள் வாங்க இந்து விரும்பினாள். எனவே வழக்கம் போல் வீணாவிடம் பேசி, வியாழன் காலை கடைக்கு செல்வது என இருவரும் முடிவு செய்திருந்தனர்.
வியாழன் காலை, இப்போது சில நாட்களை பழக்கமாகி விட்டிருந்த கை பேசியின் சிணுங்களில் எழுந்த இந்து, சஞ்சீவ் அனுப்பி இருந்த காலை வாழ்த்து செய்தியை படித்து, சிரித்து விட்டு, அவனுக்கு பதில் அனுப்பினாள். உடனேயே அவனிடம் இருந்து பதில் வரும் என்பது அவள் அறிந்ததே ஆனால் அன்று அவளுக்கு பல வேலைகள் இருந்தன. மறுநாள் நடக்க இருந்த மாத போர்டு மீட்டிங்கிற்கு வேண்டிய செய்திகளை சேகரித்து குறித்து வைக்க வேண்டும். புதிதாக பெற்றிருந்த டீல் குறித்து மீட்டிங்கில் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்களை குறித்து வைக்க வேண்டும். வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேச வேண்டும்.. அவளின் எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல் கை பேசி மீண்டும் சிணுங்கியது. அவள் எதிர்பார்த்தது போல் அது சஞ்சீவின் குறுஞ் செய்தி தான். அவளின் காலை வாழ்த்துக்களால் அவனின் அன்றைய நாள் இனிதாக தொடங்கி இருப்பதாக அனுப்பி இருந்தான். படித்து புன்னகைத்துவிட்டு, பதில் ஏதும் அனுப்பாது, கடைக்கு செல்ல தயாராக தொடங்கினாள் இந்து.

ஞ்சீவ் அன்று காலை உணவு உண்ண வந்த போது தான் வீட்டில் விருந்தினர் வந்திருப்பதை உணர்ந்தான். அவனை பார்த்த காஞ்சனா,

"சஞ்சீவ்... பார்த்தியா யார் வந்திருக்கான்னு? உங்க மாமாவும் கண்மணியும்....."

கண்மணியை பார்த்து சஞ்சீவ் சிறிது திகைத்து தான் போனான். அவன் அவளை பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. அப்போது அவளை சிறு பெண்ணாய் பார்த்தவன் இப்போது அவள் வளர்ந்து அவள் வயதிற்கே உரிய அழகோடு இருப்பதை கண்டு அதிசயித்தான். மனதில் இதை எல்லாம் நினைத்தாலும், அவன் உதடுகள், தானாக விருந்தினரை வரவேற்று உபசரித்தது. அவனின் பார்வையில், கண்மணி லேசாக முகம் சிவந்து வெட்க படுவதை பார்த்து அவனுக்கு மேலும் குழப்பமாக இருந்தது. இந்த சின்ன பெண்ணிடம் என்னவெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்களோ!

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் கண்மணியிடம், அவளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவு படுத்தி விட வேண்டும் என மனதில் முடிவு செய்து கொண்டான் சஞ்சீவ். வழக்கமான பேச்சில்லாமல் சஞ்சீவ் அமைதியாக உண்பதை கண்டும் காணாதது போல் இருந்தாள் கீதா. காஞ்சனா தன் தம்பியுடன் பல விஷயங்களை பேசியவாறு உணவருந்தினார். அந்த சுழலில் மிகவும் தடுமாறி போனது கண்மணி தான். தந்தை அத்தை பேச்சில் கலந்து கொள்ளவும் முடியவில்லை, சஞ்சீவை நேராக பார்த்து பேசும் தைரியமும் வரவில்லை, என்ன செய்வது என்று அறியாது உணவை அலைந்து கொண்டிருந்தாள் கண்மணி. அவளை புரிந்து கொண்டது போல் கீதா, அவளின் படிப்பு பற்றி பேச்செடுக்கவும், கண்மணிக்கு சற்று நிம்மதியாக இருந்தது, மகிழ்ச்சியோடு கீதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள்.

கண்மணியும் அவள் தந்தையும் காலையில் வந்தது முதல் கீதா கண்மணியுடன் பேசி கொண்டிருந்தாள் தான். முதலில் விருந்தினரை உபசரிக்க என்று ஆரம்பித்தது, பின் கண்மணியின் அமைதியான அடக்கமான பேச்சில் கவர்ந்து தொடர்ந்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கண்மணி புத்தி கூர்மையுடனே விளங்கினாள். அத்துடன் அவளுக்கு நகைச்சுவை உணர்வும் இருந்தது. கலாவும் கீதாவும் வழக்கம் போல் தங்கள் கலகலப்பான பேச்சுடன் காலை உணவு தயாரித்த போது, கண்மணியாலும் அவர்களின் பேச்சில், எளிதாக இணைந்து கொள்ள முடிந்தது. கீதாவிற்கு கண்மணியை பிடித்து தான் இருந்தது. ஒரு வேளை இந்துவும் சஞ்சீவும் மனதுள் ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்திராமல் இருந்தால், கீதாவே சஞ்சீவின் மனதை மாற்ற முயற்சித்திருப்பாள் தான்! இப்போது கண்மணியின் மனம் புண் படாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது.  

உணவு உண்ட பின் தயாராகி கிளம்பிய சஞ்சீவை பார்த்த காஞ்சனா,
"என்ன சஞ்சீவ் இது? மாமாவும் கண்மணியும் வந்திருக்காங்க... ராஜீவ் தான் எதோ முக்கிய வேலைன்னு கிளம்பிட்டான்.. நீயாவது இருந்து அவங்களை கவனிக்கலாம் தானே?"

சஞ்சீவ் பதில் சொல்லும் முன், காஞ்சனாவின் தம்பி ராமமூர்த்தியே பேசினார்,

"என்ன அக்கா இது? தம்பி எதோ அவசர வேலையா கிளம்புறார் போல இருக்கு... இருக்கட்டும் தம்பி பரவாயில்லை....."

"அவசர வேலை எல்லாம் இல்லை மாமா.. இன்னைக்கு ஒரு பிரெண்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருந்தேன் அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்... சாயங்காலம் சீக்கிரம் வந்திருவேன்... உங்களை அப்படியே வெளியே கூட்டிட்டு போறேன்...."

"இல்லை தம்பி... நான் இன்னைக்கு கிளம்புறேன்... அக்கா தான் கண்மணி இங்கே கொஞ்சம் நாள் தங்கி இருக்கட்டும்னு ஆசை படுறாங்க... அவளும் இப்போ காலேஜ் முடிச்சுட்டு சும்மா தானே இருக்காள்..."

"அதெல்லாம் இருக்கட்டும் மூர்த்தி... அப்புறம் பேசிக்கலாம்... சஞ்சீவ் நீ மத்தியானம் முடிந்தால் சீக்கிரம் வா... மாமாவை போய் ஸ்டேஷன்ல விட்டுட்டு வரலாம்.."

"சரி அம்மா கட்டாயம் வரேன்..."

தலை அசைத்து விடை பெற்று சென்றவனை ஆச்சர்யமாக பார்த்தார் காஞ்சனா. பொதுவாக சஞ்சீவ் இது போன்ற சமயங்களில் எதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான்.. ம்ம்ம்ம் சிறிது நாளாகவே இவன் மாறி தான் போய் இருக்கிறான்!

அண்ணியிடமும் சொல்லி விட்டு கிளம்பிய சஞ்சீவ் வீட்டின் முன் இருந்த ரோஜா செடிகளின் அருகில் கண்மணி நிற்பதை கண்டான். தன்னுடைய பைக்கில் ஏறி கிளப்பியவன், ஏதோ தோன்றியவனாய், கண்மணி அருகில் பைக்கை நிறுத்தினான்.

"கண்மணி... மாமாவும் அம்மாவும் உன்கிட்ட என்ன சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியலை...இருந்தாலும் இதை உன்கிட்ட சொல்றது நல்லதுன்னு தோணுது.. எனக்கு நீயும் ஒரு தங்கச்சி மாதிரி தான்.... நான் என்னைக்கும் உன்னை வேற மாதிரி நினைச்சது இல்லை... ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... நான் விளக்கமா அப்புறம் பேசுறேன்....சாரி...."

திகைத்து நின்றாலும், சரி என்பது போல் அவள் தலை அசைக்கவும், பைக்கை உயிர்ப்பித்து கிளப்பினான் சஞ்சீவ். அவளிடம் இப்படி தலை - வால் புரியாது பேசியது மனதுள் சிறு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய போதும், கண்மணியிடம் தன் மனதை தெளிவு படுத்தி விட்டதில் நிம்மதியாகவும் இருந்தது.    

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# SuperKiruthika 2016-08-08 16:56
Veena Mathiri oru friend venum
Reply | Reply with quote | Quote
# MVUKN 2014-12-04 00:15
Thank u
Reply | Reply with quote | Quote
# MVUKN 2014-12-03 23:09
NPK means ??????
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2014-12-03 23:59 Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 07kalaiyarasi 2013-07-14 21:55
:-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 07Thenmozhi 2012-04-12 17:37
Sorry, forgot to update the situation song.... Updated it now....

Was thinking about a song where heroine hears about hero and likes him and ofcourse likes to hear about him too... Can't think of any suitable song :(

Any suggestions wud be great :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 07Thenmozhi 2012-04-06 20:33
OMG! I was planning to finish this episode with nandini1 Forgot to add it :(

Ok we will see her in the next episode. Thanks Anusha for reminding me :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 07Anusha Chillzee 2012-04-06 19:49
Good to meet Kanmani... but when are you going to introduce Nandini Aadhi????
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 07Vanaja 2012-04-06 06:18
Hey Aadhi,
I should say, this sounds more like a real life narration than a story!

Good work! The core concept of 'friendship' is excellent. In real life it's very difficult to maintain :(

Ithai serial-aa edutha mega hit thaan....
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top