(Reading time: 12 - 24 minutes)

மாலை நேரம் கடற்கரை ஓரம் சிறு சிறு அலைகள் க்ரியாவின் ஆலிலை பாதங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.. அலைகளின் ஓசை இனிமையாக அவள் செவிவழியே புகுந்தது...அதனை கண் மூடி ரசித்துக் கொண்டிருந்தளை பின்னிருந்து யாரோ உற்றுப் பார்ப்பது போல் இருக்க தனது நயங்களை திறந்து பார்த்தாள்..

சுற்றி யாரும் இல்லாததை கண்டு,"ச்சே.. பிரமையா...??",என்று மனதில் நினைத்தவள் கடலை விட்டு சற்று தள்ளி மணலில் அமர்ந்தாள் நிலவின் வருகையை எதிர்பார்த்து..

ஆதவன் கடலுக்குள் கரைவதையும் நிலவு கடலிலிருந்து விடுதலை பெறுவதையும் காண க்ரியாவிற்கு ரொம்பப் பிடிக்கும்.. சென்னை வரும் பொழுதுகளில் பெரும்பாலான மாலை பொழுதுகளை கடற்கரையில் செலவிடுவது அவள் வழக்கம்..

"க்ரியாமா.. மணி ஆறாக போகுது.. வெளில போகணும்னு சொன்னிங்களே ",என்ற வண்ணம் அங்கு வந்தார் இந்தர்..

"ஸ்.. இங்க டைம் போனதே தெரியலை பெரியப்பா.. பீனிக்ஸ் மால்க்கு தான் போகனும்..",என்றபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

வெள்ளிக்கிழமை என்பதால் வேளச்சேரியில் அமைந்துள்ள சென்னையின் மிக பெரிய மால் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது..

புட் கோர்ட்டில் ஒரு லெக் பீசுக்காக அடித்துக் கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வ்ருதுஷ்..

"சின்ன பசங்களாவே இருந்துருக்கலாமோ.. ஒரு கவலையும் இல்லாமல்..", அருகில் ஒலித்த குரலை கேட்டு திரும்பியவன் க்ரியாவை கண்டு புன்னகைத்தான்..

"ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுடனோ..",என்றபடி அவன் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்..

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. நான் இப்போ தான் வந்தேன்.."

"சரி.. ஏதாவது சாப்பிட்டுட்டே பேசலாம்..எனக்கு ஷவர்மா..உனக்கு..??"

நீ இன்னும் திருந்தவே இல்லை என்பது போல் அவளை ஒரு லுக் விட்டவன்..,"இரு வாங்கிட்டு வரேன்..",என்றபடி எழுந்து சென்றான்..

வ்ருதுஷ் மற்றும் க்ரியா இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. வ்ருதுஷ் என்ன பன்றாருனு க்ரியாவையே இன்ட்ரோ கொடுக்க சொல்றேன்...

அரபு நாடுகளில் தங்கமும் ஒட்டகமும் எண்ணெய் கிடங்குகளும் எவ்வளவோ பிரபலமோ அவ்வளவு பிரபலம் ஷவர்மா..பெரும்பாலானா காஃபிட்டேரியாகளில் இந்த சிக்கன் ஷவர்மா மாலை வேளைகளில் கிடைக்கும். மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடியதும், சுவையானதாகவும் விலை குறைவானதாகவும் இருப்பதால் இந்த ஷவர்மா உணவு அங்கு மிகவும் பிரபலம்.

காரமில்லாத அந்த சிக்கென் ஷவர்மாவை குழந்தை போல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் க்ரியா.. அதனை கண்டு பொறுமை இழந்த வ்ருதுஷ்,"க்ரியா..",சற்று அழுத்தமாக அழைத்தான்..

ஒரு மனுஷியை நிம்மதியா சாப்பிட விட்றாங்களா..?? என்று மனதில் நினைத்தவள்,"என்னடா..??" ,என்றாள் அலுப்பாக..

"நம்ம எதுக்கு இங்க வந்தோம்னு நியாபகம் இருக்கா..??",சற்று கடுப்பாக..

"இருக்கு.. இருக்கு..",என்றுவிட்டு நிதானமாக தன் இதழ்களை டிஷ்ஷுவால் சுத்தம் செய்தவள் அவனை நோக்கி ஒரு சீரியசான பாவத்தோடு,"சொல்லுங்க டிடக்டீவ் சார்.. கேஸ் எந்த நிலமையில் இருக்கு..??"

"நம்ம அவங்ககிட்ட அல்மோஸ்ட் ரீச் பண்ணிட்டோம்னு நினைக்கறேன் க்ரியா.. இன்னும் ஒரு பைவ் டூ சிக்ஸ் டேஸ்ல கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்.." ,என்றபடி அவளிடம் ஒரு பைலை நீட்டினான்..

அதனை பெற்றுக் கொண்டவள்,"நான் இத படிச்சிட்டு நைட் கால் பன்றேன்.. இப்போ கிளம்பலாம் நம்மல யாரோ உத்துப் பார்க்கற மாதிரி இருக்கு.." ,என்று முனங்கினாள்..

ரவின் மடியில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அந்த பைலை படித்திக் கொண்டிருந்தாள் க்ரியா.. அந்த காரிருளில் அவளை யாரோ உற்றுப் பார்ப்பது போல் இருக்க மெதுவாக திரும்பினாள்..அதே சமயம் அவள் மூக்கை உரசிக்கொண்டு சென்றது அது..

செழுவூர்

தென்னங்கீற்றுக்கள் ஒன்றோடொன்று உரசி மெல்லிசை பாட..கூடு விட்டு இரைதேடி சென்ற பறவைகள் குடும்பத்தை நாடி வீடு திரும்ப..பூமிமகளை சுட்டெரித்தது போதுமென வானமகன் சுருண்டுகொள்ள வெட்கப்பட்டுக் கொண்டே வெளி வர தயாரானாள் வானமகள்..

"இந்த கோவிலுக்குள்ள ஏதோ ஒன்னு மறைஞ்சிருக்கற மாதிரியே இருக்கு.. என்னனு தெரியல.. ஆனால் ரொம்ப வித்யாசமா என்னமோ இதுக்குள்ள இருக்கு..",என்று இழுத்தாள் மயா..

"இங்கிருக்கிற சிலைகளுக்குள்ள ஏதோ ஒண்ணு ஒளிஞ்சிருக்குமோனு தோனுது.. பட் க்ளூலெஸ்..",என்றான் எழில் பதிலுக்கு..

"கரெக்ட் எலி..ஆமா.. இந்த தியா எங்க போனா..??"

"அவ சுஜன் அண்ணா கூட ஊருக்குள்ள போயிருக்கா.. இந்த கோவிலை பற்றி யாருக்காவது தெரியுமானு விசாரிக்க.."

"சரி வா.. நம்மலும் ஊருக்குள்ள போகலாம்..",என்றபடி எழுந்தாள் மயா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.