(Reading time: 12 - 24 minutes)

"நாளைக்கு வந்து பார்த்துக்கலாமா..??", சற்று பயத்துடன் கேட்டாள் மயா....

"இங்க எங்கயாவது அவர் பக்கத்துல போயிருப்பாருனு நினைக்கறேன்.. இவ்ளோ தூரம் வந்துட்டோம்.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்ப்போமே..??",என்றாள் தியா..

"சரி..",என்று முனங்கிய மயா மற்றவர்களை நோக்கி,"கொஞ்சம் நேரம் உட்காருங்க.. திரும்பி நடக்க தெம்பு வேணும்ல..??"

அவள் கூறுவது சரி என்பதால் மூவரும் எதுவும் பேசாமல் அமைதியாக ஒவ்வொரு இடத்தில் அமர்ந்தனர்..

சற்று நேரம் கழித்து,"மணி என்ன ஆகுது தியா..??",என்று கேட்டான் சுஜன்..

"ஒன்பது அண்ணா.."

"ஒன்பதா..?? கிளம்பலாம்.. இனி அவர் வருவார்ங்கற நம்பிக்கை இல்லை..", என்றெழுந்தான் சுஜன்..

கிளம்ப தயாரானவர்கள் வெளிச்சத்திற்காக கொண்டுவந்திருந்த டார்ச்சை எடுத்தனர்..அந்த சமயம் பார்த்து வாடை காற்று பலமாக வீசத் தொடங்கியது..

"என்னதிது..?? திடீருனு இப்படி காற்றடிக்குது..??",என்றாள் மயா சற்று நடுங்கியபடியே..

"சாரலும் அடிக்குது.. வாங்க மண்டபத்துக்குள்ள போயிரலாம்..",என்றபடி உள்ளே செல்லலானான் சுஜன்..

"எழில்.. டார்ச் லைட் ஒன்றை மட்டும் ஆன் பண்ணு.. இந்த மாதிரி மண்டபத்துல கண்டிப்பா விளக்கு இருக்கும்னு நினைக்கறேன்.. அதை வெளிச்சத்திற்கு பற்ற வைத்துக் கொள்ளலாம்..",என்ற தியா அந்த மண்டபத்தை அலச ஆரம்பித்தாள்..

"தியா இங்க நிறையா விளக்கு இருக்கு..",என்று குரல் கொடுத்தாள் மயா..

"அப்போ விளக்கை பற்ற வை மயா..",என்றான் எழில்..

"ஏய் லூஸு.. தீப்பெட்டி இல்லாம எப்படி பற்ற வைக்க...??"

அதற்குள் அங்கு வந்த தியா தன் பான்ட் பாக்கட்டில் வைத்திருந்த லைட்டரை எடுத்து விளக்கை பற்ற வைத்தாள்..

அவளிடமிருந்த லைட்டரைக் கண்டு சற்று அதிர்ந்து போன எழில் மயாவின் காதில்,"என்ன விக்ஸு இது..?? தியாவுக்கு சிகரெட் பழக்கம் இருக்கும் போல..??",என்று முணுமுணுத்தான்..

அவனை முறைத்தபடியே அவன் முதுகில் ஒரு அறை அறைந்த தியா,"இது உன்னோட லைட்டர்..",என்றபடி அதனை அவன் கையில் திணித்தாள்..

இப்பொழுது முறைப்பது மயாவின் முறையானது..

"என் போன்ல சிக்னல் இல்லை.. உங்க போன்ல இருக்கானு பாருங்க..?? ஆச்சார்யா சார்க்கு இன்பார்ம் பண்ணிரலாம்..",என்றான் சுஜன்..

"அண்ணா.. இந்த கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடியே சிக்னல் கட் ஆயிருச்சு..",என்றான் எழில்..

"இப்போ என்ன பண்றது..?? சாருக்கு இன்பார்ம் பண்ணணும்ல..",என்றாள் மயா..

"மழை நின்ன உடனே கிளம்பிரலாம் மயா..",என்று அவளை சமாதானப்படுத்திய எழில் தியா இருளை வெறிப்பதை கண்டு,"என்னாச்சு தியா..??அங்க என்ன பார்க்கற..??",என்றான்..

"ஒண்ணுமில்லை.. அங்க ஏதோ இ...",என்பதற்குள் வானில் வெட்டிய மின்னலால் கண்ணை லேசாக மூடி திறந்தாள்..

பின்னால் தொப் தொப்பென்று சத்தத்தை கேட்டு திரும்பியவள் அங்கு மயா, எழில், சுஜன் மூவரும் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்..

வணக்கம் நண்பர்களே.. !!

சம்மர் வெக்கேஷனை நன்றாக என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

இந்த எபிசோட் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கமென்ட் செய்யுங்கள்..

நன்றி..!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.