(Reading time: 12 - 24 minutes)

"ண்ணா.. இந்த ஊருக்கு தெற்குல ஒரு கோவிலை தோண்டி எடுத்தோமே..?? அத பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..??",சுஜன் ஊரிலிருந்த ஒருவரிடம் கேட்டான்..

"தம்பி நீங்க இங்க வந்து அந்த கோயிலை கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு இப்படி ஒரு கோயில் இருக்கறதே தெரியும்ப்பா..",என்றார் அப்பாவியாக..

"சரிங்கண்ணா.. இந்த கோயிலை பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் கெடச்சுதுன்னா எங்ககிட்ட சொல்லுங்கண்ணா.. எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..நாங்க ஊர் எல்லைல தான் தங்கி இருக்கோம்..",என்ற தியா சுஜனுடன் அங்கிருந்து நகர்ந்தாள்..

 "சுஜன் அண்ணா.. எனெக்கென்னம்மோ இப்படி தனித் தனியா ஒவ்வொருத்தற்கிட்டயும் கேக்கறதுல ப்ரயோஜனம் இல்லைனு தோணுது..",கொஞ்சம் சலிப்பாக..

"அப்புறம் என்னதான் நாம பண்றது தியா..??"

"நாம இந்த ஊருக்குள்ள இருக்கற வயசானவங்க யார்க்கிட்டயாவது விசாரிச்சு பார்க்கலாம் அண்ணா.. அவங்க யாருக்காவது ஏதாவது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்..", தியா..

"சரி வா.. விசாரிச்சு பார்க்கலாம்.."

"ஹேய்.. கோயிலை பத்தி எல்லார்க்கிட்டயும் விசாரிச்சாச்சா..??",என்றபடி அங்கு வந்தனர் மயாவும் எலியும்..

"இங்க யாருக்கும் எதுவும் உருப்படியா தெரியல.. பெரியவங்க யார்க்கிட்டயாவது விசாரிக்கணும்..வாங்க போகலாம்.. ",என்றான் சுஜன்..

"அன்னைக்கு நம்ம சருகு காட்ல ஒரு பெரியவரை பார்த்தோம்ல..?? அவருகிட்ட விசாரிச்சா என்ன..??",என்று கேட்டாள் மயா..

"எக்ஸாக்ட்லி.. எனக்கும் அதுதான் தோனுச்சு.. ஆனால் அவரை பத்தி இந்த ஊர்ல விசாரிச்சப்போ அவரை ஒரு பைத்தியம்னு..",என்று இழுத்தான் எழில்..

"எனக்கென்னமோ அவரு பைத்தியம்னு தோணலை..அன்னைக்கு ரொம்ப தெளிவா தானே நம்மக்கிட்ட பேசினாரு..",என்றான் மயா..

"சரி அவருக்கு பைத்தியம் இல்லைனே வெச்சுப்போம்..ஆனால் அவரை நாம எங்கன்னு போய் தேடறது..??",என்று கேட்டான் சுஜன்..

"அவர நான் இங்க இருக்கற ஐய்யனார் கோயில் மண்டபத்துல பார்த்துருக்கேன்..", என்றாள் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தியா..

"சரி.. அங்க போய் பார்க்கலாமா..??",என்று கேட்டான் எழில்..

"மணி இப்போவே ஏழு ஆக போகுது.. அவசியம் இந்த இருட்டுல போகணுமா..??",என்று கேட்டான் சுஜன்..

"போகலாம் அண்ணா..கோயில் சுத்தம் பண்ணி முடிச்சு இன்னையோட ஏழு நாள் ஆக போகுது.. ஆனா எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லை..",என்றாள் மயா..

"நீ சொல்றதும் சரிதான் மயா... நாம அவரை பார்க்க போகலாம்.. அவரிடமிருந்து ஏதாவது க்ளூ கிடைக்கலாம்..",என்றான் சுஜன்..

ன்று அம்மாவாசை என்பதால் காரிருள் அந்த ஊரை சூழ்ந்திருந்தது.. கதிரவன் என்பவன் இப்பிரபஞ்சத்தில் இல்லையெனில் இருளரசன் இவ்வுலகை ஆட்சி செய்திருப்பானோ..??

வெளிச்சத்தின் அடிமையான பொய்மைகளை அடக்கி விழிகளுக்குள் சத்தியங்களை வெளிச்சம்போட்டுக் காட்டத்தான் கனவுகள் தோன்றுகின்றனவோ..??

கனவுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் உண்மைகள் வெளிச்சத்தில் பொய்யுடன் பிணைந்திருக்கின்றன..வெளிச்சம் உள்ளதை மதிப்பதில்லை.. இருள் உருவத்தை மதிப்பதில்லை..

ஒரு தாயின் கருவிலுள்ள பாதுகாப்பான இருட்டு எவ்வளவு உண்மையை புதைத்து வைத்திருக்கிறதோ அதே அளவு இந்த அம்மாவாசை இருட்டும் பல உண்மைகளை புதைத்து வைத்திருக்கின்றது..

கன்ற நெற்றி.. அதில் விபூதியிலான பட்டை நடுவில் மணக்கும் சந்தனமும் குங்குமமும்.. நடுநடுங்க வைக்கும் கூர்மையான விழிகள்.. நீண்ட அளவான மூக்கு.. இதழ்களை பாதி மறைத்த பெரிதான முறுக்கு மீசை.. ஒரு கையில் கூர்மையான இரும்பிலான வேல் என்றால் மற்றொன்றில் பளபளப்பான வீச்சரிவாள்.. மதுரை வீரனுக்கு அருகில் குதிரையின் மேல் கம்பீரமாக வீற்றிருந்தார் காவல் தெய்வமான ஐயனார்...

கோவிலின் இடப்பக்கம் ஒரு பெரிய கருங்கல் மண்டபம்.. மண்டபத்தின் முகப்பில் சோழரின் சின்னம் சிலையாக வடிக்கப் பட்டிருந்தது..

"தாத்தா... தாத்தா..",என்ற தியாவின் குரல் மண்டபம் முழுவதும் எதிரொளித்தது..

"என்ன எழில் இது யாரும் இங்க இல்ல.. இந்த இருட்டு எனக்கு பயத்தை தருது..",என்றாள் மயா..

"இன்னைக்கு நிலா இல்லாததால ரொம்ப இருட்டா இருக்கு மயா.. பயப்படாதே..", என்றான் எழில்..

"தியா.. மண்டபத்துக்கு பின்னாடியும் அவர் இல்லையா..??",இது சுஜன்...

"ஆமா அண்ணா..",என்றாள் தியா..

"இப்போ என்ன பண்றது..??",என்று கேட்டான் எழில்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.