(Reading time: 14 - 27 minutes)

07. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

பலவன் தீவு - பிலிப்பைன்ஸ்

"உலகின் மிகச்சிறந்த தீவுகளில் 13 வது இடத்தில் உள்ளது பலவன் தீவு.. இந்தத் தீவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் பகுதிகளில் ஒன்று எல் நிடோ (El Nido) .. இங்கு, சுண்ணாம்பு பாறைகள், விதவிதமான நன்னீர் மீன்கள், கடல் நீரில் காணப்படும்.. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள், அழிந்து வரும் ஆபத்தான ஐந்து வகை கடல் ஆமைகள் பார்த்து ரசிக்க வேண்டியவை.. பலவன் தீவுல் ஸ்கூபா டைவிங், த்ரில்லான மலையேற்றம், காடு, மலைகளுக்கு இடையிலான நீர்நிலைகளில் படகு பயணம் என வீரதீர விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கிறது..", என்று அந்த ஆர்டிகிளை சத்தமாக படித்துக்கொண்டிருந்த ரிக்கி,படிப்பதை நிறுத்திவிட்டு, "விக்கி இங்க சுற்றி பார்க்க நெறைய இடம் இருக்கும் போலடா.."என்றான்..

"ஆமா டா.. நம்மளுக்கு எல்லா இடத்தையும் சுற்றி பார்க்க நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன்.. இந்தியா போயிட்டு ரிட்டர்ன் ஆகறப்போ டைம் இருந்தா திரும்ப ஒரு விசிட் அடிக்கலாம்..",என்றான்..

"நானும் அதான் நினைச்சேன்.. இன்னைக்கு என்ன பிளேன்..?? ஸ்கூபா டைவிங் ஆர் ட்ரெக்கிங்..??"

"போத்.. மதியம் வரைக்கும் ஸ்கூபா டைவிங் தென் ட்ரெக்கிங்.. ரெடி போர் தி ஃபன்..??"

sv

காலை சுமார் எட்டு மணிக்கு அந்த நீலவண்ண கடற்கரையை அடைந்தனர் விக்கியும் ரிக்கியும்..

"விக்கி.. அங்க பாரு நம்ம கடலுக்குள்ள டைவிங் போக ரெடி பண்ணுன பிரைவேட் ப்ரோக்ராம் ஈவன்ட் ட்ரைனர்..வா போகலாம்.."

அவர்கள் இருவரும் கண்ட அந்த ட்ரைனர், "வெல்கம் டூ தி டைவிங்..",என்றபடி அவர்களை வரவேற்றான்.. அருகில் நிறுத்தப் பட்டிருந்த சிறிய மோட்டார் படகை காட்டி அதில்  ஏறிக்கொள்ள சொன்னான்..

(இவர்களில் உரையாடலை தமிழில் கொடுக்கிறேன்.. எனக்கு பிலிப்பைன்ஸில பேசும் மொழி தெரியாது..)

 அவர்கள் படகில் செட்டில் ஆனதும் அந்த கைட் அவர்களை நோக்கி, "கேன் வீ ஸ்டார்ட்..??",என்று கேட்டான்..

"யா..ஷுவர்.. ",என்ற விக்கி, "டைவிங் ஸ்பாட்டுக்கு ரீச்சாக எவ்ளோ நேரம் எடுக்கும்..??எங்களுக்கு ஸ்யூட் எல்லாம் ரெடியா..??"

"சார்.. ஒரு அரை மணி நேரத்திற்குள் நாம் அங்க போயிறலாம்.. உங்களுக்கான டைவிங் ஸ்யூட் இஸ் ரெடி.. ஸ்பாட்டுக்கு போயிட்டு நீங்க அதை போட்டுக் கொள்ளுங்கள்.. நவ் என்ஜாய் தி சீனரீஸ் அண்ட் தி கிளைமேட்.."

இதமான கடல் காற்று வீச தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது அந்தப் படகு..தண்ணீரிலும் கண்ணாடியின் பரிமாணத்தை பார்க்கமுடியும் என்று பறைசாற்றுவதுபோல் ஒரு இருபது அடி ஆழம் வரை உள் நடப்பதை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தது அந்த அமைதியான கடல்..

கூட்டம் கூட்டமாக சிறுசிறு மீன்கள் சர் சரென்று அவர்களின் படகின் அடியியிலும் அருகிலும் கடந்து சென்று கொண்டிருந்தன..

சுற்றிலும் இருந்த சிறு குன்றுகள் போல் அமைந்திருந்த பாறைகளின் மேல் கூச்சல் இட்டுக் கொண்டு உயர பறந்துகொண்டிருந்தன பறவைகள்.. குன்றில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் புதர் போல் நெருக்கமாக வளர்ந்திருந்தன மரங்களும் செடிகளும்..

படகு குகைபோல் அமைத்திருக்கும் ஒரு குன்றின் அடியில் செல்லத் தொடங்கியது..குகையின் உள் சிறிது மங்கலான வெளிச்சம்.. அந்த வெளிச்சத்தில் அந்த குகையையும் கடல் நீரையும் அதனுல்லுள்ள பல வண்ண நிறங்கள் கொண்ட மீன்களையும் காண ரம்யமாக இருந்தது..

"ரிக்கி.. தி போர்ன் லெகஸி (The Bourne Legacy) படித்தில் காட்டியிருக்கும் இடம் இதுதானே..??"

"யெஸ்..அதே இடம் தான்.. பார்க்க ரொம்ப அழகா இருக்குல..?? ",என்று விக்கியுடன் சேர்ந்து ரிக்கியும் குதூகலித்தான்..

"கேன் யூ ஸ்டாப் தி போட் போர் ப்யூ மினிட்ஸ்..??",என்று கைடிடம் கேட்டான் ரிக்கி..

"யா..",என்றபடி போட்டை நிறுத்தினார் அந்த கைட்..

அந்த இடத்தின் ஓரத்தில் சிறு சிறு பாறைகள் நீருக்கு மேல் இருந்தது.. அதன் மேல் ஏறி நின்ற விக்கியும் ரிக்கியும் சில போட்டாக்கள் கடலையும் தங்களையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கினர்..

ரிக்கி தண்ணீரில் இறங்க தயாராவதை கண்ட விக்கி," ரிக்கி.. இந்தக் குன்றை சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் மீன்களில் பலது விஷத்தன்மை கொண்டவை.. அதனால் இங்கு இறங்க வேண்டாம்.. இன்னும் ஒரு பத்து நிமிடங்களில் நாம் டைவிங் ஸ்போட்டுக்கு போயிறலாம்னு நினைக்கறேன்..பொறுத்தார் பூமி ஆழ்வார்..",என்றான்..

மனமே இல்லாமல் ரிக்கி சரியென்று ஒத்துக் கொண்டு படகில் ஏறி அமர்ந்தான்..

ண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நீலக்கடலின் வண்ண சித்திரம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டது.. மிதமான வேகத்தில் கடலில் மிதந்து கொண்டிருந்த படகு ஒரு இடத்தில் நின்றது.. இவர்களின் படகை போல் இன்னும் சில படகுகளை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.