(Reading time: 14 - 27 minutes)

sv

"சார்.. டைவிங் ஸ்யூட்டை போட்டுக்கோங்க..",என்றபடி அதனை எடுத்துக் கொடுத்தவன் அருகில் இருந்த படகில் இருந்த ஒருவனை சுட்டிக் காட்டி,"இவர் பெயர் நெவில்.. வாட்டர்க்குள்ள இவர் உங்களை கைட் செய்வார்..",என்றார்..

அவரை நோக்கி தலையசைதவர்கள் ஸ்யூட்டை போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் இறங்க தயாரானார்கள்..

ரிக்கிக்கும் விக்கிக்கும் டைவிங் சென்ற எக்ஸ்பீரியன்ஸ் ஏற்கனவே இருந்ததால் தைரியமாக நெவிலுடன் ஒருவர் பின் ஒருவராக கடலில் குதித்தனர்..

இருவரும் கடலின் உட்பகுதியை நோக்கி பாய ஆரம்பித்தனர் கூட்டமாக சென்றுகொண்டிருந்த மீன்களை விலக்கிக் கொண்டே..கடலின் மையப் பகுதியில் காணப்பட்ட பச்சை நிற பாறையொன்று ரிக்கியின் கண்களில் சிக்கியது.. அருகில் நீந்திக்கொண்டிருந்த விக்கியின் தோளை தட்டியவன் அந்த பாறையை அவனுக்கும் காட்டினான்..இருவரும் அந்த பாறையை நோக்கி முதலில் சென்றனர்..

அங்கு அவர்கள் கண்ட பவளப்பாறைகள் இருவர் நெஞ்சையும் கொள்ளையடித்தன.. உலகின் மிகப் பெரிய உயிருள்ள பவளப் பாறையான பெலிஸ் பாரியர் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் வண்ணமயமான சிறு சிறு உயிருள்ள பவளப்பாறைகள் தெளிவாக தெரிவது, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தீவுகளைப் போல் இயற்கையை மனிதன் அதிகம் அழிக்காமல் வைத்திருக்கும் இடங்களில் தான்..

சுமார் ஒரு இருபத்தி ஐந்து சதவீத கடல் வாழ் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இந்தப் பவளப் பாறைகள் வீடாக இருக்கின்றன.. உலகிலுள்ள பல்வகை உயிரினங்களுக்கு தஞ்சமளிப்பதில் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது இந்தப் பவளப்பாறை சூழியல் அமைப்புகளே..

ரிக்கி அந்தப் பவளப் பாறையை தொட முயற்சித்த வேளையில் விக்கியின் கைகள் அவனை தடுத்து..என்னவென்று சைகையால் வினவிய ரிக்கியிடம் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினான் விக்கி..

அங்கு தங்க நிறத்தில் குடை வடிவம் கொண்ட சொரிமுட்டை (ஜெல்லி பிஷ்) தனது நீள நீளமான நூல் போன்ற உணர்க்கொம்புகளின் (டெண்டச்லஸ்) மூலம் மேலே வந்து கொண்டிருந்தது..ஒரு நிமிடம் அதிர்ந்த ரிக்கி விக்கியை இடித்துக் கொண்டு அவன் பின்னே மறைய தயாரானான்..

அதனை உணர்ந்து கொண்ட விக்கி அவனை இழுத்தபடி வேறு இடம் சென்றான்..அந்த இடம் சுமார் லட்சக் கணக்கான பவளப்பாறைகளால் நிறைந்திருந்தது..ராட்சச காளான் போல் சிலது,முள் செடி போல் சிலது,பூக்கள் போல் சிலது என சுமார் நூற்றியிருபது வகையான பவளப் பாறைகள் அந்த இடத்தில் கூட்டம் கூட்டமாக ஒன்றோடொன்று உரசியபடி வண்ண வண்ண நிறங்களில் காட்சியளித்தது..

ஒவ்வொரு பவளப்பாறையிலும் ஒவ்வொரு வகையான உயிரினம்.. ஒரு பாறையில் பாறை மீன், இன்னொன்றில் சிறு கடல் குதிரை (sea hourse) ஒன்று பாசிகள் படர்ந்தபடி என ஒவ்வொன்றும் கொள்ளையடித்தது மனதை..

ஏற்கனவே கருப்பும் வெள்ளையும் கலந்த மீன்கள் ரிக்கியையும் விக்கியையும் சுற்றிக் கொண்டிருந்தது..அந்த இடத்தையும் அவர்களையும் மேலும் வண்ணமயமாக்க இன்னுமொரு வகை மீன்களின் கூட்டம் அவர்களை நெருங்கிச் சுற்ற தொடங்கியது..அந்த காட்சியை பார்ப்பதற்கு பைன்டிங் நீமோ படத்தில் வருவது போல் இருந்தது..

இது போல் இருவகை மீன்கள் ஒன்றாக சுற்றி வருவது அரிதான ஒன்று..

சிறுது நேரம் அந்த கூட்டத்தில் சிக்கித் தவித்தவர்கள், இன்னும் சிறிது தூரம் கடலினுள் செல்லத் தொடங்கினர்..ஆழம் கூடக் கூட வெளிச்சம் குறைவானதால் கோகில்ஸின் மேல் தலையை சுற்றியிருந்த அந்த டார்ச் லைட்டை உயிர்ப்பித்தனர்.. அதன் வெளிச்சம் சிறிது தூரம் வரை பிரதிபலித்து அங்குள்ளவைகளை வெளிச்சம் போட்டு காட்டியது..

தொங்கும் பாறைகள் மட்டுமே அங்கு அமைந்திருந்ததால் சற்று ஏமாற்றம் அடைந்தவர்கள் மேல் செல்ல தயாரானபொழுது, ஒரு பாறையின் இடுக்கிலிருந்து வெளிப்பட்டது அந்த கடல் ஆமை..

முன்னிரு கால்களை பெடல் செய்தபடி பாறையிலுள்ள பாசத்தையெல்லாம் உண்டு கொண்டிருந்தது அது..

இன்னும் இதுபோல் ஆமைகளை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அந்தப் பாறையின் மறுகோடிக்கு சென்ற இருவருக்கும் கண்கள் வெளியில் தெரிதுவிடும்படி ஆனது..காரணம் அங்கிருந்த அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஐந்து வகை ஆமைகளே..

ஆம்,கடலில் செல்லும் கப்பலிலிருந்து வெளிவரும் எண்ணையும்,மீன்களை பிடிக்க ஒருவகை ரசாயன பொருள் உபயோகிப்பதும் தான் இந்த ஆமைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் காரணம்..

விக்கியையும் ரிக்கியையும் அதுவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நெவில் இருவரின் தோள்களை லேசாக தட்டி,தனது கைகடிகாரத்தை தொட்டு,டைம் ஓவர் என்பது போல் சைகை காட்டினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.