(Reading time: 14 - 27 minutes)

sv

ல கடல்களில் அவர்கள் டைவிங் செய்திருந்தாலும் இந்த எல் நிடோவில் அவர்கள் செலவிட்ட இந்த மூன்று மணி நேரமும் இயற்கையுடன் ஒன்றிப் போவது போல் இருந்தது ரிக்கிக்கும் விக்கிக்கும்..கடற்கரையை நோக்கிய அவர்களது பயணம் அமைதியாகவே கழிந்தது..

கரையை அடைந்தவுடன் கைடிற்கு சில டாலர்கள் டிப்ஸ் அளித்துவிட்டு மதிய உணவை உட்கொள்ள ரெசார்ட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர் இருவரும்..

"விக்கி.. ஐ ஆம் சோ டையர்ட்.. ",என்றபடி மெத்தையில் சாய்ந்தான் விக்கி மதிய உணவு முடித்து விட்டு அறைக்கு வந்ததும்..

"அப்போ ட்ரெக்கிங் கான்செல் பன்னிருவோமா..??",குறும்பாக..

ட்ரெக்கிங் என்றவுடன் துள்ளிக் குதித்து எழுந்த ரிக்கி, "போலாம்..",என்றான் சுறுசுறுப்பாக..

அவன் செயலைக் கண்டு சிரித்த விக்கி, "ரிலாக்ஸ் டா.. இன்னைக்கு நைட்ல இருந்து நம்ம ட்ரெக்கிங் ஸ்டார்ட்ஸ்..",என்று கண்ணடித்தான்..

விக்கியை நோக்கி தலையணையை விட்டெறிந்த ரிக்கி தொப்பென்று மெத்தையில் மீண்டும் விழுந்து, "எனக்கு தெரியாம எப்படா நைட் ட்ரெக் புக் பண்ணுன..??",ஆர்வம் தாங்காமல்..

"இன்னைக்கு காலையில் தான்..நீ தூங்கிட்டு இருந்தப்போ நம்ம ட்ராவல் ஏஜன்ட் கால் பண்ணி இன்னைக்கு ஒரு ட்ரெக்கர் க்ரூப் நாலு நாளைக்கு மவுன்ட் விக்டோரியால டேரா போட போறதாவும் உங்களுக்கு இன்டரெஸ்ட் இருந்தா ஜாயின் பண்ணிக்கவும் சொன்னாரு.. நான் தான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லல.. "

"ஏன் விக்கி இப்போ மட்டும் சொன்ன..?? அங்க போயிட்டு சொல்லியிருக்கலாம்ல..??", சிறுபிள்ளை தனமாக..

"இதுக்குமேல என்னால சஸ்பென்சை மெயின்டேன் பண்ண முடியல ரிக்கி.. ",அவனை நோக்கி நக்கலாக சொன்னான் விக்கி..  

சூரிய அஸ்தமனம்..அதுவும் கடற்கரையில் அந்த காட்சி..

"விக்கி.. உன்னோட சூரியனை ரசிக்க ஆரம்பித்து விட்டாய் போல..??"

"ஆமா ரிக்கி.. கதிரோன் ரொம்ப அழகுல..?? அதுவும் உதயத்தின் பொழுதும், அஸ்தமனத்தின் பொழுதும்..??",என்றான் ரசனையாக..

"விக்கி.. சூரியன் உதயமும் ஆகாது, அஸ்தமனமும் ஆகாது.. பூமியின் சுழற்சியால் தான் சூரியன் உதயமாவது போலவும் அஸ்தமனமாவது போலவும் நமக்குத் தோன்றுகிறது.. சன் ரைசெஸ் இன் தி ஈஸ்ட் அண்ட் செட்ஸ் இன் தி வெஸ்ட் அப்படீனு நம்மளுக்கு சின்ன வயசுல சொல்லித் தந்தது எவ்வளவு பிசுக்கு.."

"உன் கூட பேசி என்னால ஜெயிக்க முடியாது.. நீ சொல்றது கரெக்ட் தான்.. ஒத்துக்கறேன்.. ஆனால், இந்த காட்சியை பார்க்க எனக்கு திகட்டவே மாடேங்குதே..", என்று  புன்னகைத்தான் விக்கி..

" விக்கி..ட்ரெக்கிங்க்கு எத்தனை மணிக்கு ரெடியாக இருக்கனும்..??"

"இன்னும் ஒரு மணி நேரத்துல ஸ்டார்ட் பண்ணனும்டா.."

வுன்ட் விக்டோரியா பலவன் தீவுகலின் ஜெயின்ட் ஃபவுன்ட்..கண்டுபிடிக்கப் படாத பல அறிய வகை தாவர மற்றும் விலங்கினங்களை கொண்ட இந்த இடம் மலையில் இருக்கும் அடர்த்தியான வனம்..டேக்பேனுவா (Tagbanua tribe) எனப்படும் ஆதிவாசிகள் வசிக்கும் வனாந்திரம்..

இந்த வனத்தில் சிறு நிரோடைகள், நீர்விழ்ச்சிகள், உப்பநீர் ஏரிகள் (லகூன்ஸ்) ஏராளம் உள்ளது.. அழகும் அமானுஷ்யமும் கலந்த இடத்திற்குள் ட்ரெக்கிங் டீமுடன் நுழைந்தனர் விக்கியும் ரிக்கியும்..

கோரை புற்கள் தான் அவர்களை முதலில் வரவேற்றன..அனைவருக்கும் கையில் ஒரு பெரிய கம்புக் குச்சி ஒன்று கொடுக்கப்பட்டது..

அந்த கூட்டத்தில் தலைவன் போன்று இருந்த ஒருவன் முன் வந்து,"இன்னைக்கு சன் செட் சீக்கிரம் ஆகிவிட்டது.. முதல் முறை இது போன்ற அடர்த்தியான வனத்தில் பிரவேசிப்பவர்களால் இந்த வனத்தின் இயல்பை புரிந்து நடந்து கொள்வது கடினம்.. அதனால் நாம் இன்றைய இரவை ஆதிவாசிகளுடன் கழித்துவிட்டு.. காலை நான்கு மணிக்கு வனாந்திரதிற்குள் செல்லலாம்..",என்று அறிவித்தான்..

ரவு ஏழு மணிக்கு ஆதிவாசிகளின் கிராமத்தை அடைந்தவர்களை வரவேற்ற கிராமவாசிகள்,அவர்கள் தங்க மூன்று மரவீடுகளை தயார் செய்தனர்..

புதிதாக ட்ரெக்கிங் வந்தவர்கள் இரவு உணவு முடிந்தவுடன் உறங்க சென்றுவிட்டனர்..மீதியுள்ளோர் அங்கிருந்த கிராமவாசிகளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினர்..

அந்த சிறு கிராமத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்த ரிக்கி விக்கியிடம்,"மணி எட்டரை தான் ஆகுது..இந்த இடத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் வா..",என்றுவிட்டு நடக்கதொடன்கினான்..

நடந்து கிராம எல்லைல் அமைந்திருந்த நதியை அடைந்தவர்கள் சற்று தொலைவில் கண்ட தீப வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு அதனை நோக்கி செல்லத் தொடங்கினர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.