(Reading time: 14 - 27 minutes)

தீப ஒளியால் ஈர்க்கப்பட்டு அந்த இடத்தை நோக்கி சென்றவர்களுக்கு மரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த ஒரே ஒரு மின்மினி வரவேற்றது..

"என்னடா ரிக்கி இது..?? ஒரு மின்மினி பூச்சியோட வெளிச்சம் எப்படி அவ்ளோ தூரம் வரைக்கும் தெரிஞ்சுது..??"

"எப்படி விக்கி ஒரு மின்மினியோட வெளிச்சம் அவ்ளோ தூரம் தெரியும்..??"

"அதான் ரிக்கி நானும் உன்கிட்ட கேக்கறேன்..இப்போ ஏன்டா நீ என்னமோ மாதிரி பேசற..??",என்று மின்மினியிடம் இருந்து கண்களை பிரித்து ரிக்கியை நோக்கினான் விக்கி..

"நான் பேசலை விக்கி..",என்றான் ரிக்கி சற்றுத் திகைப்போடு..

"அப்புறம் வேற யாரு..??"

"நான் தான்..",மின்மினி ஒட்டிக்கொண்டிருந்த கிளையின் பின்னிருந்து கேட்டது அந்தக் குரல்..

"நான் தான்னா..?? யாரு..??",என்றான் ரிக்கி..

அந்த கிளையில் இருந்த சிறு பொந்திலிருந்து சிரித்துக் கொண்டே வந்த அந்த பிரமுகரை கண்டு அதிர்ந்து போயினர் விக்கியும் ரிக்கியும்..

சென்னை

ன்னை ஏதோ ஒன்று உரசிக் கொண்டு சென்றதை உணர்த்தவளுக்கு சிறிது அதிர்ச்சி தான் என்றாலும் சுதாரித்துக் கொண்டு தரையில் விழுந்து கிடந்த அந்த இறகை கையில் எடுத்தாள்..

"இதை யாரு நம்ம மேல தூக்கிப் போட்டது..??",மனதிற்குள் கேட்டுக் கொண்டவள், பால்கனியிலிருந்து தோட்டத்தை நோட்டம் விட்டாள்..

தோட்டத்தின் நடுவில் பெரிதாக வளர்ந்திருந்த அந்த மாமரத்தின் அடியில் ஒரு உருவம் அசையாது முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தது..

இந்தரை எழுப்பலாம் என்று முதலில் நினைத்தவள்,மணி பத்தை நெருங்குவதை கண்டு அதனை கைவிட்டு விட்டு தனியாக அந்த தோட்டத்தை நோக்கி சென்றாள்..

மாமரத்தின் கீழ் வ்ருதுஷ் நின்று கொண்டிருப்பதை கண்டு துணுக்குற்றவள்,"வ்ருதுஷ்.. வ்ருதுஷ்..",என்று சத்தமாக அழைத்தபடி அவனது தோளை உலுக்கத் தொடங்கினாள் க்ரியா.. அவளது உலுக்கலில் சுயநினைவடைந்தவன் சுற்றி முற்றி பார்த்து திறுதிறுவென முழிக்கத் தொடங்கினான்..

"வ்ருதுஷ்..வீட்டுக்கு வந்துட்டு உள்ள வராம ஏன் தோட்டத்துல நின்னுட்டு இருக்க..??"

"க்ரியா.. நான் எப்படி இங்க வந்தேனே தெரியல.."

"என்னடா உளறுற..??"

"நெஜமாலுமே மால்ல இருந்து கிளம்பி நேரா ஆபீஸ் போயி என் டேபில்ல பைலை வைத்தது மட்டும்தான் எனக்கு நியாபகம் இருக்கு..இங்க எப்படி வந்தேனே தெரியல.."

"அது எப்படிடா..?? உனக்கே தெரியாம இங்க வந்திருப்ப..??"

"அதுதான் க்ரியா எனக்கும் தெரியல.."

"நீ எப்படி இங்க வந்தேன்னு நான் சொல்லவா..??",பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் ஒலித்தது..

செழுவூர்

ன் பின்னால் மயங்கிக் கிடந்தவர்களை எழுப்பத் தொடங்கினாள் தியா.. அசைவேதும் இல்லாமல் சிலையாக தரையில் கிடந்தனர் மூவரும்..

என்ன செய்வது எனத் தெரியாமல் சில நிமிடங்கள் யோசித்தவள் ஊருக்குள் போகலாம் என முடிவு செய்து மண்டபத்தை விட்டு வெளிவந்தாள்..

அவள் வெளிவந்த அடுத்த நொடி விண்ணில் வெட்டியது ஒரு மின்னல்.. அவள் எதிரிலோ கரிய பெரிய விழிகள்..

அதனைக் கண்டு திடுக்கிட்டவள் வெளிவரா குரலில்,"யாரது..??",என்று கேட்டாள்..பதில் ஏதும் வராததால் மீண்டும் யாரது என்றாள்..

"கிருஷ்ணா..",என்று சத்தமாக வந்தது பதில்..

"உங்களுக்கு என்ன வேண்டும் கிருஷ்ணா..??",இது க்ரியா..

"கிருஷ்ணா என்பது என் பெயரல்ல.. அது உனக்கு சொந்தமானது.."

"என்னுடைய பெயரா..?? நீங்க என்ன சொல்றீங்க..??"

"உன் நாமம் அதுவ்வல்ல என்பது எனக்குத் தெரியும்..கிருஷ்ணா என்பது நீ செய்துகொண்டிருக்கும் செயலுக்காக உனக்கு நான் வைத்த நாமம்.." 

"நான் என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா..??",என்று திகைதவளுக்கு விண்ணின் மாயாஜாலம் அவள் எதிரில் நின்றுகொண்டிருக்கும் அந்த உருவத்தை இம்முறை வெளிச்சம் போட்டு காட்டியது..

இருளவன் மடியில் நடந்து கொண்டிருக்கும் இம்மூன்று நாடகங்கள் எதற்காக..??

ஹலோ நண்பர்களே..

இன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.. ப்ளோ மிஸ் ஆகி இருந்தாலும் தயங்காமல் கூறவும்..

இந்த அத்தியாயத்தில் வரும் பலவன் தீவின் சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்...

நன்றி..!!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.