(Reading time: 9 - 18 minutes)

10. ஊனமறு நல்லழகே - ப்ரியா

oonamaru-nalazhage

முன் கதை சுருக்கம்:

ஸ்ரவந்தியுடன் நந்தகுமாரனுக்கு நடக்கவிருந்த கல்யாணத்தின் கடைசி நிமிடத்தில் ஒருவன் வந்து நந்தகுமாரனுக்கு பதிலாக தாலியை கட்டுகிறான். இதனால் கனகாம்பாள் மற்றும் நந்தனுடைய தங்கை ருத்ரா அதிர்ச்சிக்குள்ளாக நந்தகுமாரன் அந்த புதியவனுடன் சண்டையிட்டு விட்டு அங்கிருந்து அகல்கிறான். ருத்ரா அவனை அண்ணன் என அழைப்பதை கவனிக்கிறாள். நடப்பது எதுவும் புரியாத ஸ்ரவந்தி புதியவனுடன் காரில் சென்னை செல்கிறாள். காரில் செல்லும் போது அவள் மீது சற்றே இரக்கம் ஏற்படுகிறது புதியவனுக்கு. அவன் வீடு சேர்ந்ததும், அவன் தாய் மதுமதி கடிந்து கொண்டே இருவரையும் வரவேற்று ஸ்ரவந்தியை மட்டும் அழைத்து செல்கிறார். மதியழகன் மிதுர்வனிடம் விசாரிக்கையில் அவன் பெயரை தெரிந்து கொள்கிறாள் ஸ்ரவந்தி. ஸ்ரவந்திக்கும் மிதுர்வனுக்கும் இடையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன.

ஸ்ரவந்திக்கும் மிதுர்வனுக்கும் நடக்கும் ஒரு பேச்சுவார்த்தையின் முடிவில் மிதுர்வன் சுவரில் குத்தும் போது ஒரு பெண்ணின் புகைப்படம் உடைய மிதுர்வன் கோபம் கொள்கிறான் ஸ்ரவந்திக்கு காயம் ஏற்படுகிறது. மதுமதி அவளை பார்த்துக் கொள்கிறாள்.

சில நாட்களில் மிதுர்வன் அவன் மருத்துவமனைக்கு ஸ்ரவந்தியை அழைத்து செல்ல, அவன் மருத்துவன் என்பதை அறிந்து மகிழும் ஸ்ரவந்தி தன்னையும் மருத்துவம் படிக்க வைக்குமாறு கேட்க மிதுர்வன் ஒப்பு கொள்கிறான். மருத்துவமனையில் தன் பழைய தோழியை சந்திக்கும் ஸ்ரவந்தி தவித்து எதையோ மறைக்கிறாள். அவள் முன்பே நர்சிங் படித்தவள் என்பதிற் அவள் தோழி மூலம் அறிந்து கொள்கிறான். ஸ்ரவந்திக்கும் மிதுர்வனுக்கும் ஒருவரை பற்றி மற்றொவர் தெரிந்து கொள்ள முடியாத தவிப்பில் கேள்விகள் பிறக்கின்றன.

இந்நிலையில் நந்தனுக்கு உத்ராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ருத்ரா அடி வாங்க , அதை தாங்காமல் அவள் சென்னை செல்ல முடிவெடுக்க கனகாம்பாள் சம்மதம் சொல்கிறார். யாருக்கும் தெரியாமல் ருத்ரா சென்னை வருகிறாள். யாரிடமும் சொல்லாமல் ஸ்ரவந்தி அவளை அழைத்து வர செல்கிறாள். ரயில் நிலையத்தில் ஒருவன் ஸ்ரவந்தியை 'ஸ்ராவனி' என அழைத்து அவள் கையை பற்ற இவள் பயத்துடன் அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு ருத்ராவுடன் வீடு திரும்புகிறாள்.

அந்த புதியவன், சந்திரேஷ் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருக்கிறான், ஸ்ரவந்திக்கு தெரிந்தவன். அவளை காதலிப்பதாக சொல்கிறான் தன் நண்பனின் வீட்டிற்கு சென்று விஷயத்தை பகிர்ந்து கொண்டவன் ஸ்ரவந்தியை பற்றி விஷயங்களை சேகரிக்க சென்னையிலேயே ஒரு ஹோட்டலில் தங்குகிறான்.

உத்ராவின் வருகை மதுமதிக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. அவர்களுக்குள் நடந்த ஏதோ ஒன்று காரணமாக அவர் உத்ராவை அனுமதிக்க மறக்க, நடந்தவை தெரியாமல் ஸ்ரவணாதி குழம்பி போகிறாள். மதியழகனும்( மிதுரவனின் அப்பா) மிதுர்வனும் மதுமதியை சமாதானம் செய்கின்றனர்.

மிதுர்வன்-ஸ்ரவந்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை மிதுர்வனின் பெற்றோர் கவனிக்கின்றனர். ஒரு நாள் ஸ்ரவந்தியையும் ருத்ராவையும்  அழைத்து கொண்டு  தான் நண்பர்களுக்கு கொடுக்கும் ஒரு பார்ட்டிக்காக சந்திரேஷ் தங்கி உள்ள அதே ஹோட்டலிற்கு செல்கிறான் மிதுர்வன். அங்கே ஸ்ரவந்தி சந்திரேஷை பார்க்கிறாள் அவனும் பார்த்து அவளுடன் பேசுவதற்கு முயல்கிறான்!!! இனி....


வ்வளவு சீக்கிரத்தில் இரண்டாம் சந்திப்பை ஸ்ரவந்தி எதிர்பார்க்கவில்லை!! அவன் "ஸ்ராவனி" என உதடுகளை அசைக்கும் போதே நடையை எட்டி போட்டாள். பின்னே செல்லலாமா? என்று எழுந்த எண்ணத்தை நிறுத்தி அவசரம் இல்லாமல் அவளை ஆராய்ந்தான் சந்திரேஷ்.

அவள் மிதுர்வனுடன் சேர்ந்து நடந்தாலும் அவன் மேல உரசாமல் அவன் கையை கூட பற்றாமல் ஏதோ அந்நியனுடன் நடப்பதை போலவே அவள் நடப்பதை கவனித்தான். கழுத்தில் புதிய தாலி இருக்க இப்படி புதுத்தம்பதிகளுக்கு உள்ள எந்த ஒரு அன்யோன்யமும் இல்லாமல் இருப்பது அவனுக்கு உறுத்தியது!!

ஒரு வேளை கட்டாய கல்யாணமோ??!! எவ்வளவு நடந்து விட்டது? ஏன் என்னிடம் ஒரு பேச்சு கூட சொல்லவில்லை?? ஒவ்வொரு முறையும் இந்தியா வரவென்று தான் கேட்ட போதும் வேண்டாம் வேண்டாம் என தள்ளி போட்டு விட்டார்களே? இப்போது?!

அவன் தன் போக்கில்  நினைவுகளில் உழன்று கொண்டிருக்க, அவனை ஒரு வித தவிப்போடும் பயத்தோடும் பார்த்துக் கொண்டே அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி இருந்தாள் ஸ்ரவந்தி.

சாப்பிடும் எண்ணம் இல்லாமல் போக, மீண்டும் சென்று தன்னறையில் முடங்கினான் சந்துரு, சற்று நேரத்தில் எல்லாம் ஒரு முடிவுடன் அறையை விட்டு கிளம்பினான்!!

வீட்டிற்கு வந்த ஸ்ரவந்திக்கு தனிமை தேவைப்பட்டது. ஆனால் அதை அவளுக்கு கொடுக்க தான் மிதுர்வனும் ருத்ராவும் தயாராக இல்லை. அடுத்த நாள் கல்லூரிக்கு செல்ல வேண்டியதற்கான ஏற்பாடுகளில் இருவரும் ஸ்ரவந்தியை வெவ்வேறு வகையில் 'தொந்தரவு' (அப்போது அவள் இருந்த மன நிலையில்) செய்து கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.