(Reading time: 9 - 18 minutes)

"என்னப்பா நீ? நீ என்கிட்டே பேசறதே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?"

"ஹ்ம்ம்"

"என்ன விஷயம் ராஜா?"

"ஸ்ரவந்தியை முதல்ல நீங்க எங்க பார்த்தீங்க?"

இந்த கேள்வியை எதிர் பார்க்கவில்லை கனகாம்பாள். அவருக்கு மட்டுமே ஓரளவு தெரிந்த ஸ்ரவந்தியை பற்றிய விஷயம். என்ன சொல்லி சமாளிப்பது? தெரியவில்லை..

"அதான் எல்லாம் அன்னைக்கே சொன்னேனே ராஜா?"

"ஹ்ம்ம் சொன்னீங்க ஆனால்..."

"என்னப்பா?"

"ஒண்ணுமில்லை பாட்டி நன் மறுபடியும் கூப்பிடுறேன்" என்று சொல்லி அவன் போனை வைக்க, ஸ்ரவந்தியிடம் பேச வேண்டுமென நினைத்துக் கொண்டார் கனகாம்பாள்.

ந்த ஹோட்டலில் பணிபுரிபவர்களிடம் அன்று நடந்த பார்ட்டியை, மிதுர்வனுடைய பார்ட்டியை பற்றி மேலோட்டமாக சந்தேகம் வராதது போல பார்ட்டியை மிகைப்படுத்தி விசாரித்தான் சந்திரேஷ். பேச்சு வாக்கில் அவனுக்கு கிடைத்த பதில், பார்ட்டியை கொடுத்தவன் டாக்டர்!! வந்திருந்தவர்களும் டாக்டர்கள்!!

அன்று ரயில் நிலையத்திலிருந்து ஸ்ரவந்தி சென்று காரிலும் மருத்துவ குறியீடு இருந்ததை பார்த்தது ஞாபகம் வர, தன் நண்பனை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெரிய மருத்துவமனைகளுக்கு செல்ல முடிவெடுத்தான் சந்திரேஷ்!! ஸ்ரவந்தியை பற்றி கண்டுபிடிக்க வேண்டும் எப்படியாவுது!!

அந்த வேட்கை அவனை செலுத்தியது!! அவள் கூறியவை நிழலாடின அவன் முன்,

"ஸ்ராவனி"

"ம்ம்ம்"

"ஸ்ராவனி"

"ம்ம்ம்ம்ம்?"

"என்னை பார்த்து பேசு.. எனக்கு உன் கண்ணை பார்க்கணும்.." அவள் நிமிர்ந்து இவன் முகம் பார்க்க அவன் தொடர்ந்தான்

"இந்த கண்களை எத்தனை நாள் மிஸ் பண்ண போறேன்னு தெரியுமா?"

"நீங்க மட்டும் தானா?"

"தெரியும்டா நீ தான் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவ"

"எனக்கு பயமா இருக்கே சந்துரு"

"ஒன்னும் ஆகாதுடா உனக்கு ஏதாவது ஆக நான் விட்டுடுவேனா?"

"நீங்க தான் என் ஒரே தைரியம் சந்துரு"

"ஸ்ராவனி இங்க பாரு கலங்க கூடாது.. ரொம்ப தைரியமா இருக்கணும்.. நான் இந்தியா வந்த அடுத்த முகுர்த்தத்தில் நம்ம கல்யாணம் சரியா? சிரி!!!"

வெட்கம் அமைதி கலந்த அந்த சிரிப்பு!! அதன் பிறகு அவள் முகத்தை அதிர்வுடன் அன்று ரயில் நிலையத்தில் தான் பார்த்தான்!!

"ஐ ஸ்டில் லவ் யூ ஸ்ராவனி "

தூங்கி கொண்டிருந்தவள் அருகில் சத்தம் எழாமல் படுத்தவன், பல கேள்விகளுடன் அவள் கையை பற்றி,

"உன்னை எப்படி கல்யாணம் பண்ணினேன்னு தெரியலை.. ஆனால் இப்போ ஐ லவ் யூ ரதி" சொல்லி விட்டு கண்களை மூடி கொண்டான் மிதுர்வன்!

தொடரும்…

Episode # 09

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.