(Reading time: 14 - 28 minutes)

08. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

பலவன் தீவு - பிலிப்பைன்ஸ்

கிளையில் இருந்த சிறு பொந்திலிருந்து சிரித்துக் கொண்டே வந்த அந்த பிரமுகரை கண்டு அதிர்ந்து போயினர் விக்கியும் ரிக்கியும்..

அவர்களது அதிர்ந்த முகத்தை கண்ட அந்தப் பிரமுகர்,”ஏன் இரண்டு பேரும் மிரண்டு போய் என்னை பார்க்கறீங்க..??”

வார்த்தைகள் சரியாக வெளிவராமல் அந்த அவரிடமிருந்து கண்களைப் பிரித்து ரிக்கியின் கைகளை சினிமா ஹீரோயின்களைப் போல் கெட்டியாகப் பற்றிக் கொண்டு,”இது அணில் தானே..??”,என்று கேட்டான் விக்கி..

விக்கியின் தொடுகையில் சுயநினைவை அடைந்தாலும் அதிர்ச்சி அடங்காமல் அப்படித்  தான் நினைக்கிறேன் என்றான் ரிக்கி..

இருவர் நிலையையும் கண்ட அணிலோ அவர்களை நோக்கி கேலி சிரிப்பொன்றை உதிர்த்து,”ஆமா.. நான் அணில் தான்.. என் பெயர் அகிலன்..”,என்றது..

லேசாக தன் தொண்டையை செருமிய ரிக்கி,”உன்னால எப்படி பேச முடியுது..??”,ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்..

“இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளாலும் பேச முடியும்..இதில் நான் மட்டும் என்ன விதிவிளக்கா..??”,திருப்பிக் கேட்டது அவர்களை..

“அதெப்படி எல்லா ஜீவராசிகளாலும் பேச முடியும்னு சொல்லற..?? எனக்குத் தெரிஞ்சு மனுஷனால் மட்டும் தான் பேச முடியும்..நீ எப்பாடி பேசற..??”,இது ரிக்கி..

“உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான்..”,என்ற அகிலன் ரிக்கியை  நோக்கி,”உனக்கு பேசக் கற்றுக்கொடுத்தது யார்..??”,என்று கேட்டது..

“எனது சுற்றம்..”,சுருக்கமாக

இல்லை என்பது போல் தலையசைத்த அகிலன்,“இவ்வுலகில் எந்த ஒரு மனிதனுக்கும் யாரும் பேசக் கற்றுக் கொடுப்பதில்லை.. பேச்சென்பது இயற்கையில் அனைவருள்ளும் ஊறிப்போனது.. உங்கள் சுற்றம் உங்களுக்கு மொழியை மட்டும் தான் கற்றுக் கொடுக்கும்..”

“நீ சொல்றது புரியுது.. ஆனால் உன்னால் எப்படி எங்களை போல் பேச முடிகிறது..?? அதுவும் எங்கள் மொழியில்..அதுதான் எங்களுக்குப் புரியவில்லை..”,என்றான் விக்கி..

“அது எனக்கு கிடைத்த வரமா சாபமா என்று இன்றுவரை தெரியவில்லை..”

அதற்கு மறுமொழி என்ன கூறவது என தெரியாமல் இருவரும் மௌனம் காத்தனர் இருவரும்..

“சரி.. எனக்கு உங்களை கூட்டிக் கிட்டு வர உத்தரவு..”,என்றது அகிலன் மௌனத்தை கலைத்தவாறு மொட்டையாக கூறியது..

“கூட்டிட்டு வரவா..?? எதற்கு..?? யாரு உத்தரவு போட்டது..??”,இது விக்கி..

“யார்..?? எதற்கு..?? என்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு உத்தரவு இல்லை..”

“அப்போ எங்களால் வர முடியாது..”,என்றான் ரிக்கி..

“உங்களை எப்படி கூட்டிட்டுப் போகணும்னு எனக்குத் தெரியும்..”,சற்று அழுத்தமாக கூறியது அகிலன்..

அகிலனை உற்று நோக்கிய விக்கி,”நீ மெய்யா பொய்யான்னே எங்களுக்குத் தெரியலை..அப்படி இருக்கறப்போ உன்னை நம்பி எங்களால எப்படி வர முடியும்..??”,என்று கேட்டான்..

“நீங்கள் என்னுடன் வர தயாராக இல்லை..அப்படித்தானே..??”

“ஆமாம்..உன்னுடன் வர எங்களால் முடியாது”,என்றான் விக்கி..

எப்பொழுது முடியாது என்ற பதில் வந்ததோ அப்பொழுதே தன் சிறு ரெக்கையை விரித்து இருவரின் தலையை ஒரு சுற்று சுற்றிய அகிலன் அவர்களை நோக்கி,”நீங்க ரெண்டு பேரும் உங்க கைகளால் இந்த கிளையை பிடியுங்கள்..”,என்று கட்டளை இட்டது தான் நின்று கொண்டிருந்த கிளையை காட்டி..

அகிலன் கூறுவதை செயல்படுத்த கூடாது என்று மூளை அறிவுறுத்தினாலும் ஏதோ ஒரு மாயைக்கு கட்டுப் பட்டு இருவரும் மேல் இருந்த கிளையை பற்றினர்..

இருமுறை இருவரின் தலையை சுற்றியது அகிலன்..சுமார் ஆறடி இருந்த இருவரும் இப்பொழுது பத்து சென்டிமீட்டராக சுருங்கத் தொடங்கினர்.. இரு குழந்தைகளை கையால் தூக்குவது போல் கிளையில் பற்றியிருந்த இருவரின் கைகளை பிடித்து கிளையின் மேல் தூக்கி நிற்க வைத்த அகிலன் மீண்டும் ஒரு முறை அவர்களின் தலையை சுற்றியது..

சுயநினைவடைந்த இருவரும் எங்கிருக்கிறோம் என்று புரியாமலும் தங்களைவிட அகிலன் உயரமாக இருப்பதை கண்டும் திகைத்துப் போயினர்..

இருவரையும் நோக்கிய அகிலன்,”பயம் வேண்டாம்..என் வீட்டிற்குள் நீங்கள் பிரவேசிப்பதற்காகத் தான் உங்களை குட்டியாக்கினேன்..”,என்று கண்சிமிட்டியது..

அதன் கேலியை கண்டு ஆத்திரம் அடைந்த விக்கி அகிலனை நோக்கி முன்னேறினான்.. அதற்குள் ரிக்கியின் கைகள் அவனை நிறுத்தியது..

ரிக்கி..விடு என்னை.. என்ன நடக்குது இங்க..?? ஒரே மாயாமா இருக்கு..ஒன்னும் புரியல.. இதுல இந்த குட்டிப் பிசாசு வேற..??”,அகிலனை கண்கள் சிவக்கும் வரை முறைத்தான் விக்கி..

“டென்ஷன் ஆகாதே விக்கி.. நாம் எங்கையோ மாட்டியிருகோம்.. அதுவும் நம்ப முடியா ஒரு உலகத்துக்குள்ள.. இப்போ ஆத்திரப்பட்டா நஷ்டம் நம்மளுக்குத் தான்..பொறுமையா இருடா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.