(Reading time: 14 - 28 minutes)

சென்னை

தாத்தா பாட்டிக்கு தெரியாமல் செழுவூர் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவள்,அவர்களுக்கு கால் செய்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தன் தோழி வர கட்டாயபடுதியதால் வ்ருதுஷுடன் அங்கு செல்ல அனுமதி வாங்கினாள்..

இப்பொழுது க்ரியாவும் வ்ருதுஷும் செழுவூரை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்..

“இங்கிருந்து செழுவூர் போக எவ்ளோ நேரம் ஆகும் வ்ருதுஷ்..??”

“நாளை விடியலுக்குள் போயிரலாம்னு நினைக்கறேன் க்ரியா..”

சிறிது தயங்கயபடியே,”எங்க அம்மா அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆன இடத்தை கடந்து தானே நாம் போக போறோம்.. ஒரு நிமிஷம் அங்க நிறுத்தறியா..??”

சரிடா என்றவன் காரின் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிசையில் மூழ்கினான்..

சென்னையிலிருந்து முன்னூற்றி என்பது கி மீ அப்பால் இருந்த கொல்லிமலையை அடைந்தவர்கள் ஒரு இடத்தில் தங்கள் காரை நிறுத்தினர்..

கண்களில் நீர் படலம் படிய காரை விட்டு இறங்கிய க்ரியா அன்னையும் தந்தையும் ஆக்ஸிடென்ட் ஆன இடத்தை நோக்கி தன் பார்வையை திருப்பினாள்..

இன்று நடந்தது போல் இருந்தது அந்த விபத்து.. 

அன்று தங்கள் கார் இடித்து நின்ற இடத்தில் இன்று ஒரு கார் நிற்பது போலவும் அதிலிருந்து புகை வருவது போலவும் தோன்றியது க்ரியாவிற்கு..

“ஓ மை காட் ஆக்ஸிடென்ட்..”,என்று கத்திய வ்ருதுஷ் அங்கு நின்ற காரை நோக்கி ஓடினான்..

குறிப்பு

வணக்கம் நண்பர்களே...

இன்றைய அத்தியாயம் எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு கமென்ட் செய்யுங்கள்..

நார்னியா படத்தில் வருவது போல் சில பேசும் பறவைகளும் விலங்குகளும் இனி நம் கதையில் நம்முடன் பயணிப்பார்கள்..

இந்த பதிவு வரை உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ flow மிஸ் ஆவது போல் இருந்தாலோ குறிப்பிடவும்.. கரெக்ட் செய்து கொள்கிறேன்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்..

நன்றி..!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.