(Reading time: 12 - 24 minutes)

09. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

திமூன்று வருடங்களுக்கு முன் இதே இடத்தில் இதே மரத்தில் இடித்து நின்ற தங்கள் கார் கண்முன் வந்து மறைந்தது க்ரியாவிற்கு..வ்ருதுஷ் அந்த காரை நோக்கி விரைவதை கண்டு சுதாரித்தவள், அந்த காரை நோக்கி ஓடினாள் பதைபதைப்புடன்..

“க்ரியா..மரத்தில் இடிச்சதுல கார் லாக் எல்லாம் ஜாம் ஆயிருச்சுன்னு நினைக்கறேன்..”,என்றபடி ஓரத்தில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுக்க சென்றான் வ்ருதுஷ்..

க்ரியாவோ காரின் கண்ணாடி வழியே உள்ளே உள்ளோரின் நிலையை அறிய முற்பட்டாள்..உள்ளே இருவர் சிக்கியிருப்பது முன் சீட்டுகளில் ஓபன் ஆகியிருந்த எயர் பேக் மூலம் தெரிந்தது..

“வ்ருதுஷ்.. உள்ளே இரண்டு பேர் சிக்கியிருக்காங்க.. பெருசா அடியில்லைன்னு நினைக்கறேன்.. கை கால் அசைத்து எயர் பேக் விட்டு வெளிய வர ட்ரை பண்றாங்க.. சீக்கிரம் ஏதாவது பண்ணு..”,என்றாள் சிறிது பதற்றமாக..

எடுத்து வந்திருந்த கல்லால் காரின் கண்ணாடியை உடைத்த வ்ருதுஷ், சிக்கியிருந்தோர் எயர் பேக்கிலிருந்து வெளி வர உதவினான்..

( வெளிவந்த இந்த இரு ஆண்களையும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே.. கொஞ்சம் ஜூம் பண்ணுங்க.. வாவ்வ்வ்வ்.. நம்ம ரிக்கியும் விக்கியும் தான் அது.. வாங்க வாங்க.. இவங்க எப்படி இங்க வந்தாங்க... எப்படி விபத்து நடந்துச்சுன்னு ரீவைன்ட் பண்ணிப் பார்க்கலாம்.. )

ரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்திறங்கிய ரிக்கியையும் விக்கியையும் வரவேற்கவென வந்தார் சீதாலக்ஷ்மி, ரிக்கி மற்றும் விக்கியின் பெரியம்மா..

அவரைக் கண்டதும் ரிக்கியும் விக்குயும் அவரை கட்டிக்கொண்டனர்..

“எப்படிப்பா இருக்கீங்க..??”,என்று கேட்டார் இருவரையும் லேசாக அணைத்தபடியே..

“நல்லா இருக்கோம் பெரியம்மா..நீங்க..??”,என்றான் ரிக்கி..

“நானும் நல்லா இருக்கேன் பசங்களா.. கார் அங்க நிக்குது.. கெளம்பலாம் வாங்க..”, என்றபடி காரை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார்..

பெசென்ட் நகரில் அமைந்திருந்த அந்த பெரிய வீட்டிற்குள் நுழைந்தனர் விக்கியும் ரிக்கியும் சீதாலக்ஷ்மியுடன்..

“என்ன பெரியம்மா இது..?? ஒருத்தரையும் காணோம்..??”,என்று கேட்டான் விக்கி..

“பெரியப்பா வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார்..உங்க அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரும் அவங்க மாமா வீட்டுக்கு ஒரு வேலை விஷயமா இரண்டு நாளைக்கு முன்னாடி தான் போனாங்க..”,என்றார்..

“நாங்க வரோம்னு அவங்களுக்கு சொல்லலியா..??”,என்று கேட்டான் ரிக்கி சிறிது வருத்தமாக..

“நீங்க இன்னைக்கு இங்க வர போறோம்னு நேத்து போன் பண்ணவுடனே நான் அவங்களுக்கு சொல்லிட்டேன்.. வேலை முடிஞ்சவுடனே சீக்கிரம் கெளம்பி வரேன்னு சொல்லியிருக்காங்க..நீங்க வருத்தப் படாதீங்க...”,என்று சமாதானப் படுத்தியவர்,”நீங்க போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. அம்மா அப்பாவுக்கு பூஜை பண்ணி சாமிகும்பிடலாம்..”

அவரை நோக்கி சரியென்று தலையசைதவர்கள் ரெப்ரெஷாகவிட்டு பூஜையறை சென்றனர்..

பூஜையறையில் பெரிய பெரிய மாலைகள் அணிவிக்கப்பட்டு தங்கள் பெற்றோர்களின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது.... அந்த மாலைகளைக் கழுட்ட விக்கியின் கைகளும் ரிக்கியின் கைகளும் பரப்பரத்தன..அந்த உணர்வை அடிக்க்கிய இருவரும் அமைதியாக அவர்களை வணங்கிவிட்டு பூஜையறையை தியாகித்தனர்..

“பெரியம்மா..பெரியப்பா எந்த ஊருக்கு போயிருக்காங்க..??”,என்றுக் கேட்டான்..

“சவுத் சைட்ல இருக்கற ஒரு கிராமத்துக்குப்பா..”

“ப்ரோஸ் இரண்டு பேரும் வரதுக்குள்ள நாங்க பெரியப்பாவை பார்த்திட்டு வரோமே..??”,என்று கேட்டான் ரிக்கி..

“சரிப்பா உங்களுக்கு அவரைப் பார்க்கணும்னு தோணுச்சுனா பார்த்துட்டு வாங்க...”,என்று அனுமதி கொடுத்தார் சீதாலக்ஷ்மி..

மறுநாள் காலையே இருவரும் தங்கள் பெரியப்பாவைக் காண கிளம்பிவிட்டனர்..

ரிக்கி..ஏண்டா வண்டியை இப்படி உருட்டற..??”

“நம்ம வைட்டி நம்மள நீங்க எங்க தொலைத்தீர்களோ அங்க தேடுங்கனு சொல்லுச்சு..அப்படீனா என்ன அர்த்தம்..??”

“நானும் அதான் யோசிச்சிட்டு இருக்கேன் டா.. உனக்கு என்ன தோணுது..??”

“எனக்கென்னமோ அவங்க விபத்து நடந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க சொல்லி இருக்குமோன்னு நினைக்கறேன்..”,என்றான் யோசனையாக..

“அந்த வழியாத்தானே நாம் போகப் போறோம்.. அங்க ஏதாவது நமக்கு க்ளூ கெடைக்குத்தானு பார்ப்போம்..”

“நானும் அதுதான் நினைத்தேன்..”,என்றபடி காரின் வேகத்தை அதிகப் படுத்தினான் ரிக்கி..

காரை மிகவும் சீராக இயக்கிக் கொண்டிருந்தான் ரிக்கி..மனதில் இனம்புரியா உணர்வு.. அது தங்களது பெற்றவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என்று தெரிந்துகொண்ட சந்தோஷமா..?? அல்லது பெற்றவர்களை இரத்த வெள்ளத்தில் குளித்த இடத்தை நெருங்குவதால் மனதில் ஏற்பட்ட துயரமா..?? புரியாமல் தவித்தது அவன் மனம்.. சிந்தனைகள் தறிக்கெட்டோட ஒரு நொடி வாகனம் சிறிது தடுமாறியது அவனது கையில்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.