(Reading time: 12 - 24 minutes)

இரண்டாம் மகன் ஹம்சவாணன் இவரது மனைவி வர்னேஷ்வரி..மகன் ப்ரிதுர்விக் (விக்கி)..மூன்றாம் மகன் சக்ரவர்த்தி இவரது மனைவி மஹாகெளரி..மகன் அதுர்ரிக் (ரிக்கி)..

இவர்களுள் சுயோதன் மூத்தவன், அடுத்து ரிக்கியும் விக்கியும் ஒரே வயதை ஒத்தவர்கள், அடுத்து சுஷாஷன், கடைக்குட்டி சுதிக்ஷா..

(ஹி.. ஹி.. ஒருவழியா ரிக்கி விக்கி பாமிலி இன்ட்ரோ முடிச்சிட்டேன்..)

“ரிக்கி, விக்கி.. தோட்டத்துக்குப் போயிட்டு வந்தீங்களா..??”,வீட்டிற்கு வந்த உடனே இருவரிடமும் கேட்டார் சக்ரவர்த்தி..

“இப்போ தான்ப்பா அங்கிருந்து வந்தோம்..”

“சிவஷிஷ்யன் கிட்ட சொல்லிட்டீங்களா நாம ஊருக்குப் போறோம்னு..??”

“வைட்டி கிட்டத் தானே சித்தப்பா சொல்லிட்டோம்..”,என்றான் ரிக்கி..

சரி என்றவர்,”ஏதாவது உங்ககிட்ட சொன்னாரா சிவஷிஷ்யன்..??”

“இல்லப்பா..ஆனால் வைட்டினால பேச முடியும்ங்கறதை யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னும், வைட்டி மாதிரி பேசற மிருகங்களை இனிப் பார்த்தால் புதுசா பார்க்கற மாதிரி பார்க்கணும்னு சொல்லி சத்தியம் வாங்குச்சு..”,என்றான் விக்கி..

“சரி சரி.. கெளம்புங்க..”,என்றபடி யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தார் அவர்களை..

பெரியப்பா..எல்லாவரும் கிளம்பிட்டோம் போகலாமா..??”,என்று கேட்டார் ராமகிருஷ்ணன்..

“போலம்ப்பா.. அப்பா கிளம்பிட்டாரா..??”

“ஆச்சு பெரியப்பா.. நீங்க கீழ வந்தா வண்டி எடுத்தரலாம்..”

“போலாம் தம்பி..”,என்றபடி முன் நடக்கத் தொடங்கினார் தேவவ்ரதன்..

கிழே அவர்களை அழைத்துச் செல்ல மூன்று வாகனங்கள் நின்றிருந்த்தது..முதல் காரில் ராமகிருஷ்ணன்,அவரது மனைவி, தாய் மற்றும் பெரிய தந்தையுடனும்.. இரண்டாம் காரில் சுயோதன், சுஷாஷன், சுதிக்ஷா, விக்கி, ரிக்கி தங்கள் சின்னத் தாத்தாவுடனும்.. கடைசி காரில் மற்ற நால்வரும் என தங்கள் பயணத்தை தொடங்கினர்..குதூகலமாக..

இக்குடும்பத்தின் இந்தப் பயணம் முடிவை நோக்கியதோ...??

வணக்கம் நண்பர்களே...

இன்றைய அத்தியாயம் எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு கமென்ட் செய்யுங்கள்..

இந்த பதிவு வரை உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ flow மிஸ் ஆவது போல் இருந்தாலோ குறிப்பிடவும்.. கரெக்ட் செய்து கொள்கிறேன்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்..

நன்றி..!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.