(Reading time: 12 - 24 minutes)

“சூப்பர் சித்தி..”,என்றபடி அவருக்கு ஹை பை கொடுத்தான் சீதாலக்ஷ்மியின் முதல் புதல்வன் சுயோதன்..

“மம்மி நான் படிச்சு படிச்சு புக்ஸ்ல இருக்கற எழுத்தெல்லாம் அழிஞ்சே போச்சு..நீங்க என்னடானா எப்படி சொல்றீங்க..??”,என்றபடி ஒரு செல்பை காட்டினான் விக்கி..

“டேய்..அது நீ எழுதாம வெச்சிருக்கற மாத்ஸ் நோட்ஸ்டா..”,என்ற ரிக்கி வர்னேஸ்வரியிடம்,”சித்தி..அம்மா எங்கே..?? காணோம்..”,என்று கேட்டான்..

“அவங்க பப்புவுக்கும் தம்புவுக்கும் துணி எடுத்து வேசிட்டிருக்காங்க..”

“ஓ..ஓ கே..நான் போயி பார்த்துக்கறேன்”, என்றபடி அங்கு சென்றான் ரிக்கி..

“என்னம்மா கெளரி, இங்க ஒருத்தன் இருக்கறதையே மறந்துட்டு இந்த வானரங்களுக்கு துணி எடுத்து வெச்சிட்டு இருக்கீங்க..??”,என்று தன் அன்னை மஹாகெளரியிடம் வம்பிழித்தான் ரிக்கி..

“டேய்..எத்தனை தடவை சொல்றது அவங்களை வானரம்னு கூப்பிடாதேன்னு..”,என்று அவனை கண்டித்த கெளரி அவன் தலையில் நங்கென்று ஒன்று வைத்தார்..

“சித்தி...இவனுக்கு இந்த கொட்டேல்லாம் பத்தாது இன்னும் ரெண்டு வைங்க..”,என்று கோரஸ் பாடினர் பப்பு தம்பு என்றழைக்கப்படும் சீதாலக்ஷ்மியின் மக்களான சுதிக்ஷாவும் சுஷாஷனும்..

அவர்களை முறைத்த ரிக்கி,”ஓவரா பேசுனீங்கன்னா ஐஸ் க்ரீம் கிடையாது..”,என்று மிரட்டினான்..

ஐஸ் க்ரீம் என்றவுடன் ஒருவரை ஒருவர் பார்துக்கொண்டவர்கள் ரிக்கியை கட்டிக்கொண்டு,”ஏன் சித்தி அண்ணனை இப்படி கொட்டறீங்க..??பாவம் அண்ணா..”,என்றபடி ரிக்கியின் தலையை தேய்த்துவிட்டனர்..

மூவரையும் கண்டு தலையில் அடித்துக்கொண்ட கெளரி அந்த இடத்தைவிட்டு அகன்றார்..

ம்பிகளா.. வந்து சாப்பிடுங்க நேரமாகுது.. உங்க அப்பவெல்லாம் வந்தா ஏன் இன்னும் கிளம்பாம இருக்கீங்கன்னு திட்டுவாங்க..”,பப்புவுக்கு ஊட்டிவிட்டபடியே கத்தினார் வர்னேஷ்வரி..

“பெரியம்மா.. தாத்தா எங்க..?? காலையிலிருந்து ஆளவே காணோம்..??”,என்று கேட்டான் ரிக்கி..

“அவரு வழக்கம்போல ஏதோ ஒரு ஓலைச்சுவடியை கையில் வெச்சுக்கிட்டு மாடி ரூம்ல இருக்காரு..”

“சாப்டாரா..??”

“இல்லை தம்பி.. கூப்டதுக்கு பசிக்கும்போது கீழ வரேன்.. அதுவரைக்கும் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொன்னாரு..”

“நான் வேணும்னா போயி கூப்படட்டும்மா..??”

“சரி.. சரி.. அவரு வேலையா இருந்தா தொந்தரவ்வு பண்ணாம வந்துரு ரிக்கி.. கோவப்பட வைக்காதே அவர..”

“சரி பெரியம்மா... கூல்..”,என்றபடி அவரது அறை நோக்கி சென்றான் ரிக்கி..

தாத்தா.. நான் உள்ள வரலாமா..??”,என்று கேட்டபடி வாயிலில் நின்றான் ரிக்கி..

“ம்..வா..”,என்று உள்ளிருந்து ஒலித்தது கம்பீரமான குரல்..

உள்ளே வந்த ரிக்கி அவர் பரப்பி வைத்திருந்த ஓலைச் சுவடிகளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்..

“எதுக்கு வந்த..??”

“தாத்தா நீங்க இன்னும் சாபிடவில்லைன்னு பெரியம்மா சொன்னாங்க..அதான் சாப்பிட கூப்பிடலாம்னு வந்தேன்..”,என்றான் சற்று தினறியபடியே..

“வரேன்..நீ கிளம்பு..”,என்றவர் அவன் சென்ற திசையை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்..

ண்ணா இப்போவே மணி ரெண்டாயிருச்சு..வீட்ல கெளம்பி இருக்க சொல்லுங்க..போன உடனே கிளம்பனும்..”,என்றார் சக்ரவர்த்தி..

“சரி சக்ரவர்த்தி..”,என்ற ஹம்சவாணன் போன் செய்யத்தொடங்கினார்..

“சக்ரவர்த்தி நாம கன்னியாகுமரி போயிட்டு வந்ததுக்கு அப்புறம் செழுவூர் போகனும்..”,என்றார் ராமகிருஷ்ணன்..

“நானும் அதான் நெனச்சேன் அண்ணா..டூ வீக்ஸ் பிளானை ஒன் வீக்கா மாத்திரலாம்..”

“சரி..அந்த கோயிலோட பிரிண்ட் உன்கிட்ட தானே இருக்கு..?? பத்திரம்..”,என்றார்..

ம்.. ம்.. என்று தலையசைத்த சக்ரவர்த்தி, ஹம்சவாணன் வருவதைக் கண்டு,”சொல்லிட்டீங்களா அண்ணா..??”

“சொல்லிட்டேன்ப்பா.. நாமும் கெளம்பலாம்..”,என்றார்..

கும்பகோணத்தை அடுத்த நல்லூர் என்னும் இடத்தை பூர்விகமாக கொண்ட ஆச்சார்யா குடும்பத்தினர் பைரவ ஆச்சர்யாவின் காலத்தில் தொழில் செய்ய சென்னையில் வந்து செட்டிலானார்கள்..

அவரின் பெயரன்கள் தான் தேவவ்ரத ஆச்சார்யாவும் குமார ஆச்சார்யாவும்.. பெயருக்கேற்றார் போல் பிரமச்சாரியான தேவவ்ரத ஆச்சார்யா ஒரு புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்..

அவரது தம்பி குமார ஆச்சார்யா தங்களது துணிக்கடையை பார்த்துக்கொண்திருந்தார்..மனைவி அம்பிகாவதி..இவர்களுக்கு மூன்று மகன்கள்..

முதல் மகன் ராமகிருஷ்ணன் இவரது மனைவி தான் சீதாலக்ஷ்மி..இவர்களது பிள்ளைகள் சுயோதன், சுஷாஷன்(தம்பு) மற்றும் சுதிக்ஷா(பப்பு)..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.