(Reading time: 12 - 24 minutes)

“ரிக்கீ.. லாரிடா..”,உரக்கக் கத்தினான்..

ரிக்கி சிறிது தடுமாறினாலும் எதிர் திசையிலிருந்த வந்த லாரி தங்களை நோக்கி வருவதைக் கண்டு ஒரு மரத்தில் இடித்து காரை நிருத்தினான்..

இடித்த வேகத்தில் எயர் பேக் ஓபன் ஆகி இருவருயும் சூழ்ந்து கொண்டது..

“ரிக்கி உனக்கு ஒன்னும் ஆகலையே..??”,கிணற்றிலிருந்து ஒலிப்பது போல் ஒலித்தது விக்கியின் குரல்..

“இல்லைடா...எனக்கு ஒன்னும் இல்லை...உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..”

“நானும் ஓ கே.. ஆனா எயர் பேக்ல இருந்து வெளிவர முடியல..எல்லாம் ஜாம் ஆயிருச்சுன்னு நினைக்கறேன்டா..”

“சீட் பெல்ட் ரிமூவ் பண்ண முடியாதுன்னு பாரு...”,என்ற ரிக்கியின் செவியில் யாரோ கார் கண்ணாடியை உடைக்கும் சப்தம் கிட்டது..

( அப்புறம் நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே... வாங்க இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..)

வெளிவந்த இரு ஆண்களும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர் என்றால் இருவரையும் கண்ட க்ரியாவிற்கோ திகைப்பு..

க்ரியாவையும் வ்ருதுஷையும் நோக்கிய ரிக்கி,”தாங்க் யூ போத்..”,என்றான் பொதுவாக..

“சார் ஒன்னும் அடிபடலையே...??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“ஒன்னும் பிரச்சனை இல்லை..வீ ஆர் ஓ கே.. பை தி வே ஐ ஆம் அதுர்ரிக் (ரிக்கி) அண்ட் ஹீ இஸ் ப்ரிதுர்விக் (விக்கி)..”,என்றான் விக்கி..

“நைஸ் மீட்டிங் யூ..”,என்ற வ்ருதுஷ், அவர்களிடம் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டான்..

“எப்படி விபத்து நடந்துச்சு..?? வண்டி டேமேஜ் ஆகியிருக்கு.. போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணணட்டுமா..??”,என்று கேட்டான் வ்ருதுஷ் கொஞ்சம் சீரியஸாக..

“போலிஸ் கேஸ் எல்லாம் வேண்டாம்..”,என்ற ரிக்கி,”எதிர்ல வந்த ஒரு லாரி இடிக்கற மாதிரி வந்துச்சு.. கண்ட்ரோல் பண்ண முடியாம மரத்துல இடிச்சுட்டேன்..”,என்றான் கொஞ்சம் யோசனையாக..

“எனக்கென்னம்மோ வேணும்னே இடிக்க வந்த மாதிரி இருந்துச்சு..”,என்றான் விக்கி..

“வண்டி நம்பர் நோட் பண்ணுணீங்களா..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“வண்டியில நம்பர் சரியா தெரியலை.. ஆனால் பாண்டிச்சேரி ரெஜிஸ்டரேஷன்..”,என்றான் விக்கி..

அதுவரை அவர்களின் உரையாடல்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த க்ரியா பாண்டிச்சேரி ரெஜிஸ்டரேஷன் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இருவரை நோக்கி,”அன்னைக்கு விபத்து நடந்ததும் பாண்டிச்சேரி ரெஜிஸ்டரேஷன் போட்டிருந்த ஒரு வண்டியல தான்..”,என்றாள்..

அவளைப் புரியாமல் பார்த்தனர் விக்கியும் ரிக்கியும்..

“நான் உங்களை அன்னைக்கு பார்த்திருக்கேன்..”,என்றாள் மொட்டையாக..

“எங்களையா..?? எங்க..??”,என்று கேட்டான் ரிக்கி..

“இங்க இதே இடத்துல ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்.. இரண்டு கார் ஆக்ஸிடென்ட் ஆச்சே அன்னைக்கு..”

 க்ரியா கூறுவதை புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் சுதாரித்து பேசத் தொடங்கும் முன் விக்கியின் பான்ட் பாக்கெட்டிலிருந்து வெளிவந்த அகிலன்,”ஹாய் வ்ருதுஷ்.. ஹாய் க்ரியா..”,என்றது..

அகிலனைக் கண்டு துள்ளிய க்ரியாவும் வ்ருதுஷும்,”அகீ..”,என்று ஒரு குரலில் கூவினர்..

இவர்கள் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்த ரிக்கியும் விக்கியும்,”அகிலனை உங்களுக்கு தெரியுமா..??”,என்று வினவினர்..

“சின்ன வயசுல இருந்தே தெரியும்..”,என்றாள் க்ரியா அகிலனை வாஞ்சனையாக பார்த்தபடியே..

“க்ரியா இவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“நான் இவங்களுக்கு அன்னைக்கு பார்த்திருக்கேன்..அது வந்து...அன்னைக்கு..”,என்றாள் கண்கள் கலங்கியபடியே..

“திக்காதே க்ரியா நானே சொல்றேன்..”,என்றது அகிலன்..

பதிமூன்று வருடங்களுக்கு முன்...

விக்கி ரிக்கியின் வீடு..

சங்களா.. தேவையானதெல்லாம் இப்போவே பார்த்து எடுத்து வெச்சுக்கோங்க.. கன்னியாகுமாரி போனதுக்கப்புறம் இது வேணும் அது வேணும்னு கேட்க கூடாது..”,என்ற சீதாலக்ஷ்மி அவர்களுக்கு உதவத் தொடங்கினார்..

“பிக் மம்மி.. நாங்க ஒரு வருஷமா படிச்சி களைச்சுப் போய் இருக்கோம்.. ஒரு பாரின் டூர் கூட்டிட்டுப் போவிங்கன்னு நெனச்சா, கன்னியாகுமரி கூட்டிட்டுப் போறீங்க.. செரியில்லை பிக் மம்மி.. செரியில்லை..”(வேற யார் சாட்சாத் நம்ம விக்கி தான்..)

“நீ கிழிச்ச கிழிப்புக்கு கண்ணியாகுமாரியே பெருசு.. ஓவரா பேசினா அதுவும் கட்..”,என்றபடி அங்கு வந்தார் விக்கியின் அன்னை வர்னேஸ்வரி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.