(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 13 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்று சிவாஜி பாடியபோது எப்படி அண்ட சராச்சரங்களும் அசையாமல் நின்றதோ, அதைப் போலவே உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்தவுடன் சாரங்கனை சுற்றியுள்ள அனைத்தும் அசையாமல் நின்று விட்டது.... சாரங்கனின் ரியாக்ஷனைப் பார்த்த பாரதி, சப்பாணி ஏன் மூணு முட்டையை ஒண்ணா வாய்க்குள்ள போடற அளவு வாயைப் பிளக்கிறான் என்று வாயிலைப் பார்க்க அங்கு மாரியின் தங்கையுடன் அழகான பெண் ஒருத்தி நின்றிருந்தாள்....

“டேய் சப்பாணி வாட்டர் ஃபால்ஸை க்ளோஸ் பண்ணு, நீ விட்ட ஜொள்ளுல வீடெல்லாம் குளமாகுது பாரு... அப்படியே BGM சவுண்ட்ட கம்மி பண்ணு.... பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேக்குதாம்....”, என்று சொல்ல பாரதியை  முறைத்தபடியே தன் சைட்டைத் தொடர்ந்தான் சாரங்கன்.

“அக்கா இங்கதான் இருக்கீங்களா...  அண்ணனைக் கூப்பிட்டுகிட்டு  உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நினைச்சேன்...”

“என்ன விஷயம் வடிவு...”, வடிவின் அருகில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்தபடியே கேட்டாள் பாரதி...

“அக்கா இவங்க பேர் மயூரி....”,என்று வடிவு கூற, ‘சப்பாணி உன் மயிலு வந்துட்டாடா....’,என்று அவன் காதருகில் கிசுகிசுத்தாள் பாரதி... சாரங்கனின் முகம் கோடி சூரிய பிரகாசத்துடன் ஒளிர ஆரம்பித்தது.... மயூரி ஒரு சிறு புன்னகையுடன் பாரதியைப் பார்த்தாள்.... மறுபடி இளையராஜாவின்  BGM சாரங்கனை சுற்ற இந்த முறை கூடுதல் எஃபெக்ட் கொடுக்க வெள்ளை உடை தேவதைகள் வேறு.... இது தேறாத கேஸ் என்று நினைத்த பாரதி வடிவு சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

“இவங்க வீட்டுல நான் வேலை செய்யறேன் அக்கா.... நம்ம நாராயணன் துணிக்கடைக்கு பின்னாடித் தெருலதான் இவங்க வீடு இருக்குது....”

“ஹ்ம்ம் ஹலோ மயூரி... வாங்க வந்து உக்காருங்க......”, மயூரி வந்து அருகில் அமர, சாரங்கனுக்கு ‘அபிராமி....அபிராமி’, நிலை....

“அக்கா இவங்களுக்கு ஒரு பிரச்சனை.... அதுப்பத்தி பேசத்தான் உங்க வீட்டுக்கு வர இருந்தேன்....”, வடிவு சொல்ல பாரதி மயூரியை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

“மேடம், இப்போ கொஞ்ச நாள் முன்னாடி திநகர்ல பெரிய தீ விபத்து எற்பட்டுதே, அதுக்குப் பிறகு இந்த மாதிரி பெரிய கட்டிடங்கள் இருந்தா, அதை சுத்தி இடம் இருக்கணும் அப்படிங்கறா மாதிரி அரசாங்கத்துல இருந்து  சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க போல, இந்த துணிக்கடைக்கு முன்னாடி ரோடு, ரெண்டு பக்கத்துலயும் பில்டிங் இருக்கு, ரெண்டு கட்டடத்துக்கும் ஒரே சுவர்தான்.... பின்னாடி பக்கம் எங்க வீடு, அதுக்கப்பறம் எங்க வீட்டு முன்னாடி ரோடு வரும்.... அரசாங்கத்துக்கிட்ட சைடுல எங்கயும் இடம் இல்லைன்னு சொல்லி இருக்காங்க போல, பின்னாடி இவங்க கோடௌன் இருக்கு... அதை இடிச்சுட்டு வாசலேர்ந்து பின்னாடிப்பக்கம் போகறதுக்கு வழி வைக்க சொல்லி இருக்காங்க.... அதே மாதிரி பின்னாடி பக்கம் நாற்பது அடிக்கு இடம் விட சொல்லி இருக்காங்க....”

“ஓ இதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை.... அவங்க இடிக்கும்போது உங்க வீட்டு சைடு ஏதானும் டேமேஜ் பண்ணிட்டாங்களா.....”

“இல்லைங்க மேடம்.... அவன் கோடௌன் இடிக்கத் தயாரா இல்லை... அதுக்கு பதிலா எங்க வீட்டைக் கேக்கறாங்க....”

“என்னது உங்க வீட்டை கேக்கறாங்களா....”

“ஆமாம் மேடம்... எங்க வீடு கிட்டத்தட்ட ஒரு கிரௌண்ட் நிலத்துல கட்டினது.... எங்க தாத்தா காலத்துல வாங்கிக்கட்டினது.... அப்போ அப்போ கொஞ்சம் மராமத்து வேலைப்  பார்த்து இன்னும் அதே பழைய வீட்டுலதான் இருக்கோம்...”

“ஹ்ம்ம் அந்த காலத்துல  வாங்கி இருந்தாத்தான் உண்டு... இப்போலாம் க்ரௌண்டோட வீடெல்லாம் கனவுலதான் வாங்க முடியும்....”

“கரெக்ட் மேடம்.... அதுவும் நாங்க lower middle class.... எங்கப்பா போஸ்ட்மேனா வேலை செய்துட்டு இருந்தார்.... வேலைல இருக்கும்போது ஆக்ஸிடென்ட் ஆனதால அவர் வேலைய அம்மாக்கு கொடுத்தாங்க.... அதுக்கே ஏகப்பட்ட பேருக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அந்த வேலையை வாங்கினோம்....”

“புரியுது... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க....”

“நான் M.Sc maths முடிச்சுட்டு பக்கத்துல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன் மேடம்....”

“ஓ மேல சொல்லுங்க எதுனால அவங்க உங்க வீட்டைக் கேக்கறாங்க....”

“பின் பக்கத்துல இருக்க கோடௌன் இடிக்காம அதை அப்படியே வச்சுட்டு எங்க வீட்டை இடிச்சுட்டு அந்த சைடு ரோட்ல இருந்து ஒரு வழி வைக்கறா மாதிரி பண்ற ஐடியா போல....”

“ஹ்ம்ம் கோடௌன் பின்னாடி இடிச்சாலும் முன் பக்கத்துல இருந்து வழி வைக்கறது கஷ்டம்... ஒரு சைடு முழுக்க இடிச்சுத்தான் வழி பண்ணனும்.... அப்படி பண்றதால பக்கத்து கட்டிடத்துக்கு ஆபத்து வரும்..... அரசாங்கம் எப்படி இப்படி ஒரு வழி சொன்னாங்கன்னு தெரியலை....”

“இல்லை மேடம் அவங்க தரை தளத்துல ஒரு சைடு சின்ன சேட் சென்ட்டர் வச்சிருக்காங்க.... அந்த சைடுல மாடில தளம் கிடையாது....ஸோ அரசாங்கம் அந்த சேட் சென்ட்டர் இடிச்சுட்டு வழி வைக்க சொல்லி இருக்காங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.