(Reading time: 16 - 31 minutes)

10. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருமேகங்கள் வானை மறைத்திருக்க கதிரவன் இருளை கிழித்து வெளிவந்து மலர்களை மலரச்செய்தான்.. குயில்கள் இன்னிசை பாட, அவைகளுக்குப் போட்டியாக ஹைதரபாத்திலுள்ள அந்தப் பெரிய வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில் இருந்து கசிந்த குரலோசையே அனைவரையும் பெரிதும் ஈர்த்தது..

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்..

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..

கொள்ளை யின்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்..

உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..

கள்ள முற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்..

ஆனந்த பைரவி ராகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை ரசித்துக்கொண்டிருந்தார் நரசிம்ஹன்..

“என்னங்க இன்னும் பாட்டுக் கச்சேரி முடியலயா..??”,நரசிம்ஹனிடம் காப்பி கொடுத்தபடி கேட்டார் அவரது துணைவியார் வேதக்ரிபா..

“முடிஞ்சிருச்சு..”,என்றபடி காணொளியை அணைத்தவர்,”க்ரியா எங்க..??”,என்று கேட்டார்..

“இன்னைக்கு ஊருக்கு போறோம்னு சொன்னவுடனே குஷியில ஆடிட்டு இருக்கா..”

“பிள்ளைக்கு மட்டும் தான் சந்தோஷமா..??”,காலையிலே தயாராக இருந்தவளைப் பார்த்துக் கேலியாக கேட்டார்..

“அம்மாவுக்கும் தான்..”,என்ற வேதா,”சீக்கிரம் காப்பியை குடிங்க.. நேரமாகுது.. கிளம்பலாம்..”

“உத்தரவு மகாராணி..”,என்று சிரித்தபடியே காப்பியை பருக தொடங்கினார்..

ன்னைக்கும் தந்தைக்கும் பிடித்த பலகாரங்களை சம்பட்டதில் ( சில்வர் டப்பா ) அடைத்து வைத்துக் கொண்டிருந்த வேதாவை பின்னிருந்து அனைத்துக் கொண்ட இரு கைகள் அவரது கழுதை வளைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டது..

“என்ன க்ரியா வேணும்..?? காலையிலேயே கொஞ்சற..??”

“எப்படி மாம்.. கரெக்டா கண்டுபிடிச்சீங்க..??”,என்று குட்டிக் கண்கள் மின்ன கேட்டாள் குட்டிக் க்ரியா..

“மொசப் போதிக்கிற டாக்கை மூஞ்சிய பார்த்தால் தெரியாதா..??”,என்றார் கேலியாக..

போங்கமா..என்று சிணுங்கியவள்,”இன்னைக்கு லஞ்ச் நம்ம ஹோட்டல்ல சாப்டுட்டு போகலாமா..??”,கண்களில் ஆசை மின்ன..

அவளது நூடில்ஸ் தலையை கலைத்துவிட்டபடி டன் என்று கைக்காட்டிய வேதாவிற்கு மீண்டும் ஒரு முத்தம் வைத்து சிட்டாய் பறந்தாள் க்ரியா..

க்ரியாவின் ஆசைப்படியே மதிய உணவை ஹோட்டலில் முடித்தவர்கள் தங்களது பயணத்தை ஊட்டியை நோக்கித் தொடர்ந்தனர்..

“அப்பா.. லீவ் முடியரவரைக்கும் நாம் அங்க இருந்துட்டு வரலாமா..??”

“கண்ணா.. நீங்க இருந்துட்டு வாங்கடா.. அப்பாவுக்கு கொஞ்சம் வர்க் இருக்கு..”

“லாஸ்ட் லீவ்லையும் நீங்க இதான் சொன்னீங்க..”,சிணுங்கினாள் க்ரியா..

“நெக்ஸ்ட் லீவ்ல கண்டிப்பா போகலாம்டா.. ப்ராமிஸ்..”,என்றார் நிகழபோகும் நிகழ்வுகள் அறியாதவராக..

“குட் டாடி..”,என்றவள் பின் சீட்டில் படுத்து உறங்கத் தொடங்கினாள்..

ங்க அவ சொல்ற மாதிரி அங்க கொஞ்ச நாள் நீங்க இருந்துட்டு வரலாம்ல..??”

“அவதான் குழந்தை மாதிரி பேசறானா நீயுமா..??”

“அது இல்லைங்க..”,என்று ஏதோ கூறவந்த வேதாவை தடுத்தவர்,”நம்ம இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம்.. அந்தக் கோபமே இன்னும் உங்க வீட்ல யாருக்கும் போகல.. போன வருஷம் தான் எல்லாரையும் பார்க்கணும்னு வர சொன்னாங்க.. உனக்கே தெரியும்.. அங்க போனதுக்கப்புறம் தான் இன்னும் நம்ம மேல் கோபம் இருக்குன்னு தெரிஞ்சுது.. இன்னும் அவங்களுக்கு நம்ம மேல் கோபம் போகல.. இன்னும் ஒன்னு இல்லை இரண்டு வருஷத்துல குறைந்துவிடும்னு நினைக்கறேன்..பொறுத்தார் பூமி ஆள்வார்..”,என்றவரை இயலாமையுடன் பார்த்தார் வேதா..

நரசிம்ஹானின் பார்வையோ சாலையிலேயே பதிந்திருந்தது..

அந்நேரம் தூக்கத்திலிருந்து எழுந்த க்ரியா இளநீர் குடிக்கலாம் என்றதால் ஒரு இடத்தில் காரை நிறுத்தினார் நரசிம்ஹன்..

ண்ணா பார்த்துக் க்ராஸ் பண்ணனும் இப்படி ஓடிவரக்கூடாது..”,எதிர் பக்கம் இருந்த இளநீர் கடையில் நின்றுகொண்டிருந்த தன்னை நோக்கி ஓடிவந்த க்ரியாவிடம் கூறினார் நரசிம்ஹன்..

“ஓ கே’ப்பா.. அம்மா கார்க்கு இளநீர் வாங்கிட்டு வரச் சொன்னாங்க..”,என்றாள்..

“சரி கண்ணா.. நான் கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்.. நீங்க இங்கயே இருங்க.. இப்போ வந்துடறேன்..”,என்றபடி ரோட்டை க்ராஸ் செய்தார்..

அங்கேயும் இங்கேயும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த க்ரியாவின் கண்ணில் பட்டது தாறுமாறாக வந்துகொண்டிருந்த லாரியும் எதிர் வந்து கொண்டிருந்த ஒரு சுமோவும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.