(Reading time: 16 - 31 minutes)

“எலிக்குட்டி..நீ இந்த சிடு மூஞ்சி கூட தான் இன்னும் குப்பை கொட்டிட்டு இருக்கியா..??”

“ஆமா மேகி..”,என்று பாவமாக சொன்னவன் அருகில் இருந்த மயாவை அவளுக்கு அறிமுக படுத்தினான்..

நட்பாக புன்னகைத்துக் கொண்ட இருவரும் வாயடிக்கத் தொடங்கினர்..

லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு இவர்கள் அருகில் வந்த விக்கி ரிக்கி மற்றும் வ்ருதுஷை இவர்களுக்கு அறிமுகபடுத்திய க்ரியா,”மிஸ்டர் ராமக்கிருஷ்ண ஆச்சார்யா எங்க இருப்பார்..??”,என்று கேட்டாள்..

ஒரு கூடாரத்தை சுட்டிக்காட்டிய எழில்,“அந்த கூடாரத்தில் இருப்பார்..போங்க..”,என்றபடி பாதியில் விட்ட வேலையை தொடங்கினான்..

பெரியப்பா..”,என்று ராமக்ரிஷ்ணனை அழைத்தபடி உள் நுழைந்தார்கள் ரிக்கியும் விக்கியும் க்ரியா மற்றும் வ்ருதுஷுடன்..

“வாங்க பசங்களா..”,என்றபடி இருவரையும் அனைத்துக் கொண்டவர் க்ரியாவை நோக்கி,”வெல்கம் டூ அவர் டீம் மை சைல்ட்..”,என்றார்..

“தாங் யூ சார்..”,என்ற க்ரியா வ்ருதுஷை காட்டி,”இவர் என் பிரென்ட் வ்ருதுஷ்.. இவர் வரலாற்றில் பி ஹெச் டி முடிச்சிருக்கார்..”,என்று அறிமுகப்படுத்தினாள்..

“ஓ..க்ளாட் டூ மீட் யூ மிஸ்டர் வ்ருதுஷ்..”,என்றார் ராமகிருஷ்ணன்..

லேசாக தலையசைத்த வ்ருதுஷ்,”மீ டூ சார்..உங்களைப் பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கேன்.. இப்பொழுது தான் சந்திக்க முடிந்திருக்கிறது..”,என்றான்..

லேசாக சிரித்தவர்,”நீங்க இருவரும் தங்க கூடாரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.. வெளியே எழில் என்பவரிடம் விவரம் கேட்டுக் கொள்ளுங்கள்.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் சந்திக்கலாம்..”,என்றார்..

சரி என்று விடைபெற்ற இருவரும் எழிலை நோக்கி சென்றனர்..

பெரியப்பா வர வழியில் எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு..இவங்க ரெண்டு பேரும் தான் உதவி செய்தாங்க..”,என்றான் விக்கி..

“ஆக்சிடென்ட் ஆ..உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..??”,என்று பதறியவரை சமாதான படுத்திய விக்கியும் ரிக்கியும் நடந்ததை விவரித்தனர்..

“நீங்க சொல்வதை வைத்துப் பார்த்தால் இது வேணும்னே பண்ண மாதிரி இருக்கு..”,என்றார் யோசனையாக..

“நாங்களும் அப்படித்தான் நினைக்கறோம்..”,என்றான் ரிக்கி..

“இப்போதைக்கு இதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்..நான் என் பிரென்ட் கிட்ட இதை பற்றி விசாரிக்க சொல்றேன்..”

“சரி பெரியப்பா..நாங்க உங்க கூட கொஞ்சம் நாள் ஸ்டே பண்ணலாமா..??”,என்று கேட்டான் விக்கி..

“நானும் அதுதான் நினைத்தேன்.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள சுயோதனும் சுஷாஷனும் வந்துருவாங்க..அதுவரைக்கும் இருங்க..”,என்றவர்,”பக்கத்தில் இருக்கும் கூடாரம் உங்களுக்காக தயார் படுத்த சொல்லியிருக்கேன்.. அங்க தங்கிக்கோங்க..”

அவரிடமிருந்து விடைபெற்றவர்கள் கூடாரத்திற்கு சென்று உடமைகளை அடுக்கத் தொடங்கினர்..விக்கியிடமிருந்த அகிலனும் அவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கியது..

கலவன் மறைந்து இருளவன் சூழ்ந்து கொள்ளத் தொடங்கிய நேரம்..கோயிலின் முகப்பில் அனைவரும் ராமகிருஷ்ண ஆச்சார்யாவிற்காக காத்திருந்தனர்..

“சுஜன் அண்ணா.. சார் வர இன்னும் இவ்ளோ நேரம் ஆகும்..??”,என்று கேட்டாள் க்ரியா..

“இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்திருவாருமா..”

“சரி அதுக்குள்ள நான் இந்த கோயிலை சுற்றிப் பார்த்திட்டு வரவா..??”

“இந்த இருட்டுல உனக்கு என்ன தெரிய போகுது..பேசாம இரு..”,அதட்டினாள் தியா..

சரியென்று முனங்கியவள் எலியின் அருகே தொப்பென்று அமர்ந்து,”எலிக்குட்டி..அவ ஓவரா பண்றா..??”,என்று கிசுகிசுத்தாள்..

“மேகி..உன் செராக்ஸ் அதான் இப்படி இருக்கா..”,என்றான் அவனும் நக்கலாக..

“போடா உன்கிட்ட போய் சொன்னேன் பாரு போ..”,என்றவள் டார்லிங் என்றபடி மயாவின் அருகே சென்று மொக்கை போட ஆரம்பித்தாள்..

சுஜன் சொன்னதுபோல் பத்து நிமிடத்திற்குள் விக்கி ரிக்கியுடன் அங்கு வந்தார் அங்கு வந்தார் ராமகிருஷ்ண ஆச்சார்யா..

விக்கியும் ரிக்கியையும் தன் தம்பிகளின் மகன்கள் என்று அனைவருக்கும் அறிமுக படுத்தியவர் க்ரியாவையும் வ்ருதுஷையும் முறையாக அறிமுக படுத்தினார்..

“தியா.. கம் அண்ட் எக்ஸ்ப்ளைன் எபவுட் தி ப்ராஜெக்ட்..ஐ வில் பி பேக் இன் ப்யூ மினிட்ஸ்..”,என்றபடி கோயிலின் பின் புறம் சென்றார் ராமகிருஷ்ணன்..

அவரிடம் தலையசைத்தவள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டை பற்றி விவரிக்கத் தொடங்கினாள்..

“முதுமக்கள் தாழியைப் பற்றி நீங்க கேள்வி பட்டிருப்பீங்க.. பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள்..ஒரு வகையான காபின்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.